இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய்
Then Jesus said to him,What you do, do quickly. (John 13:27)
Joshua 18:3; Judgement 18:9; Proverb 18:10; Jeremiah 48:10; Romans 12:11; Hebrews 6:11; Mark 6:25; James1:13-15.
அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார். (யோவான் 13:27)
யோசுவா 18:3; நியாயாதிபதிகள் 18:9; நீதிமொழிகள் 18:10; எரேமியா 48:10; ரோமர் 12:11; மாற்கு 6:25; யாக்கோபு 1:13-15.
சீக்கிரமாய் செய்:
கர்த்தருடைய வேலையை அசதியாய் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று எரேமியா தீர்க்கர் கூறுகின்ற செய்தியை தான் கர்த்தராகிய இயேசுவும் யூதாஸை பார்த்துக் கூறுகின்றார்.
தேவனால் ஏற்படுத்தபட்ட தண்டனையை நிறைவேற்றுவதும் கர்த்தருடைய பணியே. அதை அசதியாய் செய்யக்கூடாது என்பது எரேமியாவின் போதனை. யூதாஸ் இயேசுவை காட்டிக்கொடுக்கும்படி தேவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வு. அதனை யூதாஸ் விரைவாக நிறைவேற்ற பணிக்கப்படுகின்றான்.
நாட்டை ஆள்கிறவர்களும் கர்த்தருடைய வேலையை செய்கிறவர்களே. அதிகாரிகளும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிரவர்களும் கர்த்தருடைய பணியாட்களே.
ஆசிரியர்களும், மருத்துவர்களும், மக்களுக்கு சேவை செய்கிற இதர பணியாட்களும், நீதிமன்றங்களில் தண்டனையை நிறைவேற்றுகிறவர்களும், காவலாளர்களும் கர்த்தருடைய வேலையை செய்கிறவர்களே.
அவர்கள் தேவனை அறியாதிருந்தாலும் தேவன் அவர்களை அறிவார். அவர்கள் ஏதோவொரு நிலையில் தேவனுடைய பணியை நிறைவேற்றுகிறார்கள். தீமைக்கானாலும் நன்மைக்கானாலும் அவர்கள் பணியை தீர்ப்பிடுகிறவர் தேவனே.
யூதாஸ் தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற தெரிந்துக் கொள்ளப்பட்ட ஒரு பாத்திரம். ஆனால் இத்தகைய பணிகளுக்கு நாம் நியமிக்கப்படாதிருப்பது பாக்கியமானதாகும். ஏனெனில் இப்படிபட்டவர்கள் தேவனையும் அவருடைய இராஜ்ஜியத்தையும் வேதனைக்குள்ளாக்கும்படி நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு தேவன் அவர்களுக்கு பணியை கொடுத்துள்ளார். யூதாஸ் இயேசுவை காட்டிக்கொடுத்து குற்றவாளியாக தன் வேலையை அசதியாக அல்லாது சீக்கிரமாய் செய்ய வேண்டும்.
இவ்விதமாய் இவர்கள் ஏற்படுத்தப்பட காரணம் எரேமியா 3:10 ன் படி கள்ளதனமான இருதயம் கொண்டிருத்தலேயாகும்.
நீ போய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார். உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் வெள்ளையாயும், உன் தலைக்கு எண்ணெய் குறையாததாயும் இருப்பதாக. சூரியனுக்குக்கீழே தேவன் உனக்கு நியமித்திருக்கிற மாயையான நாட்களிலெல்லாம் நீ நேசிக்கிற மனைவியோடே நிலையில்லாத இந்த ஜீவவாழ்வை அநுபவி; இந்த ஜீவனுக்குரிய வாழ்விலும், நீ சூரியனுக்குக்கீழே படுகிற பிரயாசத்திலும் பங்கு இதுவே. செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. பிரசங்கி9:7-10.