இயேசு அற்புதம் செய்து தம்முடைய மகிமையை வெளிபடுத்தினார்
இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார், அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
(யோவான் 2:11)
யோவான் 1:14; யோவான் 5:19,20; யோவான் 12:41; யோவான் 14:8-10,13; 2கொரிந்தியர் 3:18; 2 கொரிந்தியர் 4:6; உபாகமம் 5:24; சங்கீதம் 72:19; சங்கீதம் 96:3; ஏசாயா 40:5.
இயேசு கிறிஸ்து இயற்கைக்கு மாறாக தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியதின் மூலம் தமது மகிமையை வெளிபடுத்தினார்.
இங்கே மகிமை என்பது…
– கிறிஸ்துவின் தெய்வீகத்துவத்தை குறிக்கின்றது.
– தேவனுடைய குமாரன் என்ற தன்மையை குறிக்கின்றது.
– தாம் ஒருவரால் மட்டுமே இவ்விதமான காரியங்களை செய்யமுடியும் என்பதை குறிக்கின்றது.
– தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள ஆழமான – அர்ப்பணமான உறவை காட்டும் என்பதை குறிக்கின்றது.
– பெயர் பிரஸ்தாபத்தையும் – அதாவது இயேசு மூலமாய் பிதா போற்றப்படுகிறார் என்பதையும், இயேசு கிறிஸ்துவும் போற்றப்படுகிறார் என்பதையும் குறிக்கின்றது.