இயேசுவின் மரணம்

இயேசுவின் மரணம்.

Death of Jesus:

Mt20:18; Mt26:38; Mt27:3; Jn12:33; Jn18:32; Ro5:6,8,10,17; Ro6:3,4,5; Ro8:10; 1Cor11:26; 1Cor15:54; Phi2:8; Phi3:10; Heb2:9,14,15; Heb5:7; Rev1:18; Rev20:14.

மத்தேயு 20:18; மத்தேயு 26:38; மத்தேயு 27:3; யோவான் 12:33; யோவான் 18:32; ரோமர் 5:6,8,10,17; ரோமர் 6:3,4,5; ரோமர் 8:10; 1கொரிந்தியர் 11:26; 1கொரிந்தியர் 15:54; பிலிப்பியர் 2:8; பிலிப்பியர் 3:10; எபிரெயர் 2:9,14,15; எபிரெயர் 5:7; வெளி1:18; வெளி 20:14.

இயேசு மரித்தார்:

  1. இது ஒரு வரலாற்று உண்மை. அவர் பிறந்ததும் உண்மை, வாழ்ந்ததும் உண்மை, மரித்ததும் உண்மை.
  2. இயேசு பாவிகளுக்காக மரித்தார். பாவத்திலே சாகிறவர்கள் உண்டு. பாவத்துக்கு செத்து நீதிக்கு பிழைக்கிறவர்களும் உண்டு. இயேசு பாவத்துக்காக – பாவிகளுக்காக மரித்தார். பாவம் இல்லாதவராக பாவிகளுக்காய் மரித்தார்.
  3. மனிதனாகப் பிறந்தவனுக்கு மரணம் கட்டாயமே. பாவம் பரிகரிக்கப்படுவது வரையிலும் மரணம் உண்டு. மரணமடையாமல் முக்தியடைய முடியாது. மரணம் ஒருநாள் யாவரையும் சந்தித்தே தீரும். யாரும் அதிலிருந்து விலகி ஓட முடியாது. கிறிஸ்துவும் மரித்தார்.
  4. பாவத்தை சாகடிக்க, பாவத்துக்கு முடிவு உண்டாக்க மரித்தார்.
  5. இரண்டுவிதமான மரணமுண்டு. சரீரத்திலே உண்டாகும் மரணம். ஆவியிலே உண்டாகும் மரணம். இயேசு சரீரத்திலே உண்டாகும் மரணத்தை அடைந்தார். ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
  6. கிறிஸ்துவின் மரணத்தை ஞானஸ்நானம் கொண்டுள்ளது. கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டவன் கிறிஸ்துவோடு மரித்து அடக்கம் பண்ணப்படுகிறான். மரணம் பாவத்தை சாகடிப்பதினால் ஞஸ்நானமும் பாவ அழுக்கை சாகடிக்கிறது.
  7. இயேசுவின் மரணம் அவரின் உயிர்ப்புக்கு முன்னடையாளம். அவர் மரணமடையும்போது பிதா தம் முகத்தை மறைத்தார். ஆனால் அவரின் மரணத்தை 3 நாட்கள் பொறுத்திராது மூன்றாம் நாளிலே மரணகட்டை அவிழ்த்து உயிர்ப்பித்தார்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME