இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், நின்று கொண்டிருந்தார்கள்.
stood by cross His mother,His mother sister, Mary wife of Clopas,Mary Magdalene. (John 19:25)
Luke 2:35; Luke 8:2,3; Luke 23:49; Luke 24:1-4; Matthew 27:55,56; Mark 15:40,41; Act 1:14; 1Timothy 5:2-6,9-16; Romans 16:12,13; Philipians 4:2.
இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனாமரியாளும் நின்று கொண்டிருந்தார்கள். (யோவான் 19:25)
லூக்கா 2:35; லூக்கா 8:2,3; லூக்கா 23:49; லூக்கா 24:1-4; மத்தேயு 27:55,56; மாற்கு 15:40,41; அப்போஸ்தலர் 1:14; 1தீமோத்தேயு 5:2-6,9-16; ரோமர் 16:12,13; பிலிப்பியர் 4:2.
பெண்களின் கூட்டம்:
இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷ பணிகளில் பெண்களின் பங்கு அதிகமாய் இருந்ததை சுவிசேஷங்களில் காண்கின்றோம். உலக வீழ்ச்சிக்கும், பெண்களே காரணமாயிருந்தார்கள். அதைப்போலவே உலக எழுச்சிக்கும் அவர்களே அதிக காரணமாயிருக்கிறார்கள். இயேசுவுக்கு பின்னான ஊழியப்பாதைகளில் ஏராளமான பெண்கள் தங்களை தியாகமாய் ஒப்புக்கொடுத்துள்ளார்கள்.
பாவத்தில் ஊறிப்போன பெண்கள் மனந்திரும்பி பரிசுத்தத்தில் பங்கடைந்துள்ளார்கள். ஆஸ்திகளையுடைய பெண்கள் தங்கள் ஆஸ்திகளையும், அதிகாரங்களையும் இயேசுவின் திருப்பணிகளுக்காக தாரை வார்த்துள்ளார்கள். ஆதிசபைகளில் கைவிடப்பட்ட பெண்களின் கூட்டம் அதிகமாயிருந்ததை அப்போஸ்தலரில் காண்கின்றோம்.
கர்த்தராகிய இயேசு இந்த பூமியிலே பிறப்பதற்கு ஒரு பெண்ணின் வயிறை தெரிந்துக் கொண்டதுபோல கர்த்தராகிய இயேசுவை அனேகருடைய உள்ளங்களில் பிறக்கவைப்பதற்கு பெண்களின் வாய்களை தெரிந்துக் கொண்டார். பெலவீனர்களும், இச்சைகளினால் நிறைந்தவர்களும் என்றழைக்கப்பட்ட பெண்கள் பெலமடைந்து அன்பை சுமந்து செல்லும் பெண்களாக மாறினர். அவர்கள் அதிகாரத்துக்கு வர விரும்பாவிட்டாலும் அதிகாரத்திலுள்ளவர்களுக்கு கட்டுப்பட்டு இயேசுவின் உண்மை சாட்சிகளாக வாழ்ந்தார்கள்.
இக்காலத்திலும் பெண்களினால் உண்டாகக்கூடிய மாற்றங்கள் குறித்து சபையானது கவனத்தில் கொள்ள வேண்டும். சபையானது பெண்களை மையமாகக்கொண்டு ஒருசில சீரிய பணிகளை செய்வது ஆரோக்கியமாயிருக்கும்.
பெண்கள் கூடி ஜெபிக்கிற ஒழுங்குமுறைகள், சிறுவர் பணிகளில் பெண்களைப் பயன்படுத்துதல், நற்கிரியைகள் செய்வதில் பெண்களைப் பயன்படுத்துதல் போன்ற மூன்று சிறப்பான திருப்பணிகளை செய்ய பெண்கள் சபைகளில் ஊக்கப்படுத்தப்பட்டால் இயேசுவின் இராஜ்யம் வளரும். இயேசுவின் காலத்திலும் இத்தகைய முறைகளே நடைமுறையில் இருந்தது. ஆதிசபைகளிலும் இதுவே நடைமுறையாக இருந்தது.
இயேசுவின் சிலுவையினருகே சீஷர்கள் இல்லாதிருக்க பெண்கள் நின்றுகொண்டிருந்து இயேசுவின் துயரத்தையும், வேதனையையும் முழுமையாக அனுபவித்து உணர்கின்றார்கள்.
ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும். ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும். என்னத்தினாலெனில், முதவாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள். அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள். 1தீமோத்தேயு 2:9-15.
அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும், ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள். லூக்கா8:2,3.