இயேசுகிறிஸ்து என்ன சரீரத்தில் உயிர்த்தெழுந்தார்

நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்கள்.

 If u were Abraham children,u would do works of Abraham. (John 8:39)

Jn8:37; Mt3:9; Mt5:45; Ro2:28,29; Ro4:12,16; Ro9:7; Gal2:15; Gal3:7,29; Jas2:21-24; Eze33:24; Mic2:7; Mal2:10.

அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே. (யோவான் 8:39) 

யோவான் 8:37; மத்தேயு 3:9; மத்தேயு 5:45; ரோமர் 2:28,29; ரோமர் 4:12,16; ரோமர் 9:7; கலாத்தியர் 2:15; கலாத்தியர் 3:7,29; யாக்கோபு 2:21-24; எசேக்கியேல் 33:24; மீகா2:7; மல்கியா 2:10.

ஆபிரகாமின் பிள்ளைகள் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வர்.
ஆபிரகாமே எங்கள் பிதா என்று சொல்லிக்கொள்வதில் இஸ்ராயெலர் பெருமைபட்டுக்கொள்வதுண்டு. அவர்களின் இரத்த நாளங்களில் ஆபிரகாமின் இரத்தம் ஓடுவதாக கூறுவதுமுண்டு. இயேசுகிறிஸ்து இதனை ஏற்றுகொண்டவராய் கூறுவதாவது, நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று கூறிக்கொள்வது உண்மையானால் நீங்கள் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே என்கிறார்.
ஆபிரகாமின் கிரியைகள் என்ன?

  1. ஆண்டவர் சொன்ன வார்த்தையை நம்பி புறப்பட்டுப்போனார்.
  2. ஆபிரகாம் தேவனை விசுவாசித்தார். தேவன் அதை நீதியாக எண்ணினார்.
  3. ஆபிரகாம் தேவனை தொழுதுகொள்வதில் அதிக அக்கறை காட்டினார்.
  4. ஆபிரகாம் தன் சகோதரர்களுக்குள் சண்டை இருக்கலாகாது என்பதற்காக விட்டுக்கொடுத்தார்.
    இவ்விதமாய் பற்பல கிரியைகளைச் செய்து தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்படிந்து நடந்தார்.
    இஸ்ராயேலர் ஆபிரகாமை பின்பற்றியும் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்யவில்லை. இதனால்தான் இவர்களை மாய்மாலகாரர்களே என்று அழைத்தார்.
    ஆபிரகாமை வாயளவில் பின்பற்றினார்களேயன்றி செயலளவில் பின்பற்றவில்லை. கிரியைகளில்லாத பின்பற்றுதல் பயனற்ற ஒன்றாகும். இஸ்ராயேல் ஜனங்களைப் போல இக்காலத்திலும் இயேசுவைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லியும் இயேசுவின் கிரியைகளைச் செய்வதில்லை.
    இயேசுவைப் பின்பற்றுகிற நாம் இயேசுவின் கிரியைகளைச் செய்ய வேண்டும். அது என்ன?
  5. இயேசு எல்லாவற்றிற்கும் பிதாவையே நம்பியிருந்தார்.
  6. உதவி கிடைக்காத எவருக்கும் நன்மை செய்கிறவராயிருந்தார்.
  7. பாவிகளுக்காக தன் உயிரை கொடுத்து இரட்சண்ய கிரியையை செய்து முடித்தார்.
    இக்கால கிறிஸ்தவர்களிடையில் இம்மூன்று கிரியைகளும் காணப்படுகிறதா? 
    நாம் கிறிஸ்தவர்கள் என்பதில் பெருமைப்படுகிறோம். ஆனால்
    நாம் கிறிஸ்துவின் கிரியைகளைச் செய்கிறேன் என்பதுவே மிகப்பெரிய பெருமையாகும்.
    கர்த்தாவே உம் மகன் மூலம் பற்பல கிரியைகளை நடப்பித்து நாங்கள் இயேசுகிறிஸ்து இன்னும் உயிரோடிருக்கிறார் என்று காண்பிக்க எங்களிடம் நீர் விரும்புகிறீர். உமக்கு நன்றி.

ADD YOUR COMMENT

Powered By Indic IME