ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்.
And yet I am not alone, because the Father is with Me. (John 16:32)
John 8:16,29; John 14:10,11; Psalm 27:10; Psalm 91:15; Psalm 99:17; Psalm 142:5; Isaiah 42:1; Isaiah 50:6-9; Isaiah 63:5.
இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும், அது இப்பொழுது வந்திருக்கிறது, ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார். (யோவான் 16:32)
யோவான் 8:16,29; யோவான் 14:10,11; சங்கீதம் 27:10; சங்கீதம் 91:15; சங்கீதம் 99:17; சங்கீதம் 142:5; ஏசாயா 42:1; ஏசாயா 50:6-9; ஏசாயா 63:5.
இயேசுவோடு பிதா:
தேவன் தமது திட்டத்தை நிறைவேற்ற தமது ஒரே பேறான குமாரனை இந்த உலகத்துக்கு அனுப்பினார். அவர் தேவ குமாரனாயிருந்தாலும் அவரை மனிதகுமாரனாகவே அனுப்பினார். மனிதர்களுக்குள்ள களைப்பு, பசி, தாகம், சோர்பு போன்றவைகளை அனுபவித்தார். ஆனால் பாவம் செய்து தேவமகிமையை இழந்த மனிதனைபோல இயேசுகிறிஸ்து பாவம் செய்யவில்லை. பாவத்துக்கு தன்னை அடிமைப்படுத்தவும் இல்லை. இந்த தூயமை வாழ்வு இயேசுவை தம்மை அனுப்பிய பிதாவோடு இணைந்திருக்க வைத்தது. பிதாவும் தம்மால் மனிதகுமாரனாக அனுப்பப்பட்ட இயேசுவோடுகூட இருப்பதால் இயேசு கிறிஸ்து வேறு சிந்தை கொண்டிருக்கவும் இல்லை.
தேவனுடைய நீதியை நிறைவேற்றுவதுதான் தேவனுக்கு பிரியமானதாகும். தேவனுக்கு பிரியமானதை செய்து நிறைவேற்ற தனது நேரம், பலம், தாலந்துகள் மற்றும் எல்லா சூழ்நிலைகளையும் பயன்படுத்தினார். இதனால் தந்தையின் விருப்பம் செய்வதே தனது அன்றாட உணவு என்று கூறினார். தேவனுடைய நீதி என்பது தேவனுக்காக தேவனுடைய வழியில் தேவனுடைய மக்கள் ஓடுவதாகும். அவருக்கு பிரியமாயிருப்பதுவே தேவ நீதியாகும்.
இயேசுவை பிதா தனித்திருக்க விடவில்லை. இயேசுவும் பிதாவானவர் தன்னைவிட்டு விலகியிருக்க அனுமதிக்கவில்லை. செல்லகுமாரனாக எப்பொழுதும் அப்பா மடியில் இருப்பதை போலவே நடந்துக் கொண்டார் இயேசு.
இயேசுகிறிஸ்துவை பின்பற்றும் இயேசுகிறிஸ்துவின் அடியவர்களோடு எப்பொழுதும் கூடவே இருக்கிறேன் என்று கூறியுள்ளார் இயேசு. அவரை நாம் காணாவிட்டாலும், அவர் சத்தத்தை கேட்காவிட்டாலும் அவர் நம்மோடு இருக்கிறார். ஆனால் அவர் நம்மைவிட்டு விலகாதிருக்க நாம் என்ன செய்துள்ளோம். வரங்கள். கிரியைகள் நம்மில் இருப்பதினால் நான் அவரை என்னிடம் கொண்டுள்ளேன் என்று சொல்லமுடியுமா? இவைகளெல்லாம் அவர் நம்மைக் கொண்டு அவரின் இராஜ்யத்துக்காக கிரியை செய்கின்றார் என்றே பொருளாகின்றதேயொழிய அவர் நம்மோடிருக்கிறார் என்பதற்கான அடையாளம் அல்ல. அவர் நம்மை விட்டு விலகாதிருக்க ஒரேவழி அவர் என்ன விரும்புகிறாரோ அது கடினமாயினும், கசப்பாயினும், வேதனை தருவதாயினும் அவருக்கு பிரியமானதை செய்வதேயாகும்.
நான் விரும்பினேன்; அவர் விரும்பவில்ல.
அவர் விரும்பினார்; நான் விரும்பவில்லை.
அவரும் விரும்பினார்; நானும் விரும்பினேன்.
இணைந்து பயணிக்கின்றோம்; மெத்தை மீதல்ல; முள்படுக்கை மீது…
கர்த்தாவே, என்னை இணங்கப்பண்ணினீர், நான் இணங்கினேன்; நீர் என்னிலும் பலத்தவராயிருந்து, என்னை மேற்கொண்டீர்; நாள்தோறும் நகைப்புக்கு இடமானேன்; எல்லாரும் என்னைப் பரிகாசம்பண்ணுகிறார்கள்.
நான் பேசினது முதற்கொண்டு கதறுகிறேன்; கொடுமையென்றும் பாழ்க்கடிப்பென்றும் சத்தமிட்டுக் கூறுகிறேன், நான் கூறின கர்த்தருடைய வார்த்தை நாள்தோறும் எனக்கு நிந்தையும், பரிகாசமுமாயிற்று. ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக் கூடாமற்போயிற்று. அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன், பயஞ்சூழ்ந்திருந்தது; அறிவியுங்கள், அப்பொழுது நாங்கள் அதை அறிவிப்போம் என்கிறார்கள்; என்னோடே சமாதானமாயிருந்த அனைவரும் நான் தவறிவிழும்படிக் காத்திருந்து ஒருவேளை இணங்குவான், அப்பொழுது அவனை மேற்கொண்டு அவனில் குரோதந் தீர்த்துக்கொள்வோம் என்கிறார்கள். கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும். எரேமியா 20:7-11.
நீர் என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்; நீரே என் தேவனாகிய கர்த்தர். எரேமியா 31:18.