ஆனாலும் திடன்கொள்ளுங்கள்

ஆனாலும் திடன்கொள்ளுங்கள்.

but be of good cheer. (John 16:33)

John 14:1; Act 9:22; Act 23:11; Act 27:22,25; 1Corinthians 16:13; 2 Corinthians 1:4; 2 Corinthians 13:11; 1Thessalonians 3:7,8; Philippians 1:14.

என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன். என்றார். (யோவான் 16:33)

யோவான் 14:1; அப்போஸ்தலர் 9:22; அப்போஸ்தலர் 23:11; அப்போஸ்தலர் 27:22,25; 1கொரிந்தியர் 16:13; 2கொரிந்தியர் 1:4; 2கொரிந்தியர் 13:11; 1தெசலோனிக்கேயர் 3:7,8; பிலிப்பியர் 1:14.

திடன் கொள்ளுங்கள்:

திடங்கொள் என்ற வார்த்தையை பலப்பட்டிரு, பலங்கொண்டிரு, உறுதியாயிரு, அசையாதிரு என்று பொருள் கொள்ளலாம். சீஷர்களே, உலகத்தில் உள்ள உபத்திரவமானது அனேகருடைய உறுதியான வாழ்வை அசைத்து பிசாசின் பக்கம் கொண்டு போயிற்று. அதைபோலவே உங்களையும் உலகத்தின் உபத்திரவங்கள் தாக்கும். அவைகளில் நீங்கள் இடறிபோகாமலும், வழுவிபோகாமலும், அசைக்கப்பட்டு போகாமலும் என்னில் உறுதியாய் நிலையாய் நிலைத்திருங்கள் என்று கூறுகின்றார்.

இடற செய்யும், வழுவ செய்யும் காரியங்கள் ஏராளமாயுள்ளன. பெருங்கூட்டம் இடறிபோய் தேவனுக்கும் தேவனுடையவைகளுக்கும் எதிராக கெர்ச்சித்து நிற்கும்போது இவர்களையும், இவர்களின் கிரியைகளையும் ஜெயித்த யூதாவின் சிங்கம் இயேசுகிறிஸ்துவை சார்ந்து உறுதியாய் நிற்க வேண்டும் என்று கூறுகின்றார்.

இச்சையினால் இடறசெய்ய இயலாதவர்களை உபத்திரவத்தினால் இடற செய்வதற்கு பிசாசானவன் சிலரை கொன்றும், சிறையலடைத்தும், பஞ்சத்தில் வைத்தும், வியாதியில் கிடக்க வைத்தும், கிடைக்க வேண்டிய உதவிகளை தடுத்தும் கிரியை செய்வான். தேவன் தங்களோடு இல்லையோ, தங்கள் விண்ணப்பத்தைக் கேட்கவில்லையோ என்று சந்தேகப்பட வைப்பான். ஆனாலும் உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறதுபோல ஜீவன் போனாலும் சரீரத்தை கொல்லுகிறவர்களுக்கு பயப்படாமல் உறுதியாய் நிற்க வேண்டும்.

கிறிஸ்து தங்களோடு இருக்கும்போது திடன் கொண்டிருந்த சீஷர்கள் கிறிஸ்து சென்றபின்பு மீன்பிடிக்க போனார்கள். ஆர்வத்தோடு கிறிஸ்துவை பின்பற்றிய சீடர்களில் அனேகர் கிறிஸ்துவின் உபதேசத்தை கேட்டபோது அவரோடு நடவாமல் பின்வாங்கி போனார்கள். இன்றைக்கும் உலக நன்மைகளுக்காகவும், சரீர சுகத்துக்காகவும், ஆடம்பர வாழ்வுக்காகவும் இயேசுவை பின்பற்றிக்கொண்டவர்கள் கிறிஸ்துவின் மேலுள்ள அன்பையும், விசுவாசத்தையும், பற்றையும் விட்டுவிட்டு பின்வாங்கிப்போகிறார்கள். விசுவாசமாகிய கப்பலை சேதப்படுத்துகிறார்கள். உபத்திரவங்கள், தோல்விகள், பலவீனங்கள் ஆகியவற்றைக் கண்டு பின்வாங்கிப் போகிறார்கள்.

கிறிஸ்து சிலுவையிலும் உறுதியாய் நின்றாரானால் நாமும் உறுதியாய் பாடுகளிலும் நிலைநிற்போமெனில் முடிவில் வெற்றியும், கிரீடமும், இளைப்பாறுதலும் கிடைக்கும்.

என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது. உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக. இருமனமுள்ளவன் தன் வழிகளிகலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான். தாழ்ந்த சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன். ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்; ஏனெனில் அவன் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான். சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோம்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான். சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான். யாக்கோபு 1:2-12

ADD YOUR COMMENT

Powered By Indic IME