அவரை அறிந்திருக்கிறேன்

நானே அவரை அறிந்திருக்கிறேன்.

I know Him, for I am from Him, and He sent Me. (John 7:29)

Jn1:18; Jn3:16,17; Jn6:46; Jn8:14,42,55; Jn10:15; Jn11:42; Jn13:3; Jn14:10; Jn16:27,28; Jn17:3,18,25,26; 1Jn1:2; 1Jn4:9,14.

நான் அவரால் வந்திருக்கிறபடியினாலும், அவர் என்னை அனுப்பியிருக்கிறபடியினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார். (யோவான் 7:29) 

யோவா1:18; யோவான் 3:16,17; யோவான் 6:46; யோவான் 8:14,42,55; யோவான் 10:15; யோவான் 11:42; யோவான் 13:3; யோவான் 14:10; யோவான் 16:27,28; யோவான் 17:3,18,25,26; 1யோவான் 1:2; 1யோவான் 4:9,14.

நான் அறிவேன்:
இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவனை அறிந்திருப்பதாக கூறுகின்றார்.
எப்படி என்பதற்கு பதில் தருகின்றார். 1.நான் அவரால் வந்திருக்கிறதினால் அவரை அறிவேன்,
2.அவர் என்னை அனுப்பினதினால் நான் அவரை அறிந்திருக்கிறேன் என்கிறார்.

தேவனை அறிகிற அறிவு இயேசுகிறிஸ்துவுக்கு கிடைத்தது. தேவன் தமது ஆவியை அளவில்லாமல் அவருக்கு கொடுத்ததினால் அல்ல, அல்லது திருமுழுக்கு எடுக்கும்போது பரிசுத்த ஆவியானவர் புறாவைபோல அவரில் வந்திறங்கியதினால் அல்ல. அவர்  மடியில் செல்லபிள்ளையாயிருந்ததினால் பிதாவை அறிந்திருந்தார். நீதிமொழிகள் 8:30.

பிதாவைக் குறித்து அவருக்கு யாரும் சொல்லவேண்டியதில்லை.
பிதாவை குறித்து இயேசு நமக்கு கற்று தந்திருப்பதுவே போதுமானது. இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கபட்டு கிறிஸ்துவை தரித்திருக்கிறவர் நிச்சயம் பிதாவாகிய தேவனை அறியும் பாக்கியம் பெறுகின்றான்.

இயேசுகிறிஸ்து இல்லாமல் ஒருவரும் தேவனை அறிய இயலாது.
தேவனிடம் நெருங்க இயலாது.
பிதாவை அறிந்தவர் அவரே.
பிதாவை வெளிபடுத்தியவரும் அவரே. பிதாவிடம் சேர்க்கிறவரும் அவரே. பிதாவின் நன்மைகளை வாங்கி தருபவரும் அவரே.
அவரையே பற்றிக்கொள்.
போதும் இந்த வெளிச்சம்.

கர்த்தாவே உம்மையும் நீர் அனுப்பிய உம் குமாரனையும் அறிவதே எங்கள் மெய்வாழ்வாய் வைத்திருப்பதற்காய் உமக்கு நன்றி.

ADD YOUR COMMENT

Powered By Indic IME