எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள்.
behold, He is baptizing, and all are coming to Him. (John 3:26)
Jn1:7,9;6:35,37,44,65;11:46-53;12:19-21,32;Act19:26,27;Ps65:2;Isa2:2-4;45:23
அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே: அவரைக் குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார். எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள். (யோவான் 3:26)
யோவான் 1:7,9; யோவான் 6:35,37,44,65; யோவான் 11:46-53; யோவான் 12:19-21,32; அப்போஸ்தலர் 19:26,27; சங்கீதம் 65:2; ஏசாயா 2:2-4; ஏசாயா 45:23.
இயேசுவிடம் வருதல்:
1. இரட்சிக்கபடுகிறவர்கள் அவரிடம் வருகிறார்கள்.
2. அவர் வசனத்தை கேட்க, படிக்க, கற்றுகொள்ள அவரிடம் வருகிறார்கள்.
3. அற்புதங்களை காண, அனுபவிக்க, நன்மைகளை பெற அவரிடம் வருகிறார்கள்.
4. அவரை குற்றம் கண்டுபிடிக்கும்படியாக, கிறிஸ்தவத்தில் குறைகளை காண அவரிடம் வருகிறார்கள்.
5. அவரை சோதித்து பார்க்க அவரிடம் வருகிறார்கள்.
6. பிதாவின் அருளை பெற்றவர்கள் அவரிடம் வருகிறார்கள்.
7. பிதாவினால் இழுக்கபட்டவர்கள் அவரிடம் வருகிறார்கள்.
8. பிதாவினால் முன்குறிக்கபட்டவர்கள் அவரிடம் வருகிறார்கள்.
9. அவரோடு இணைந்து வாழ விரும்புவோர் அவரிடம் வருகிறார்கள்.
10.அவரை காண அவரிடம் வருகிறார்கள்.
11. அவரை வேடிக்கை பார்க்க – கிண்டல் பண்ண அவரிடம் வருகிறார்கள்.
12. அவரை கொல்லும்படியாக அவரிடம் வருகிறார்கள்.
13. வஞ்சகத்தோடு அவரிடம் வந்தவர்களும் உண்டு.
இவ்வளவு கூட்டத்தார் அவரிடம் வருகின்றனர். இவர்களில் எத்தனை கூட்டத்தார் அவரில் நிலைத்து நின்று நற்கனி கொடுக்கிறவர்கள் ஆனார்கள்.
நாம் எப்படி, எதற்காக அவரிடம் வந்தோம்? நம்மை நாமே நிதானித்து அறிவோம்.
கர்த்தாவே, நீர் எங்களை உம்மிடமாய் இழுத்துக் கொண்டீர். நாங்கள் உமது குமாரனில் இணைந்து வாழ உதவி செய்யும். இப்பொழுதும் உம் மகனின் நற்செய்தியினால் எங்கள் உறவினர்கள் தொடபடவும், உம்மிடம் இழுத்துகொள்ளப்படவும் விரும்புகிறோம். அதற்குரிய செய்தியை சுமந்து செல்ல எங்களுக்கு உதவிடும்.