இது நாங்கள் அவரிடம் கேட்டு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.
Message which we have heard of him and declare unto u. (1John 1:5)
1John 3:11; 1Corinthians 11:23-25; Galathians 1:11,12; Philippians 1:3-6; Colossians 1:6,7; 1Thes 1:5; Hebrews 4:2; Revelation 1:1.
தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. (1 யோவான் 1:5)
1யோவான் 3:11; 1கொரிந்தியர் 11:23-25; கலாத்தியர் 1:11,12; பிலிப்பியர் 1:3-6; கொலோசெயர் 1:6,7; 1தெசலோனிக்கேயர் 1:5; எபிரெயர் 4:2; வெளி 1:1.
விசேஷம்..
இச்சொல் செய்தி என்று அறியப்படுகின்றது. சுவிசேஷம் விசேஷமானது. நல்ல செய்தி செய்தியாகிறது. இந்த நல்ல செய்தியை யோவான் போன்ற சீஷர்கள் கேட்டு அறிந்தார்கள். கேட்டு நம்பினார்கள். கேட்டு அனுபவித்தார்கள். எனவே இப்பொழுது கேட்டு அறிவிக்கிறார்கள். சுவிசேஷமானது எங்களில் வந்து கிரியை செய்ததோடு மாத்திரமல்ல எங்களை சேர்ந்தவர்களிலும் கிரியை செய்து மெய் பலனை தந்ததினிமித்தம் இப்பொழுது முழு முழு உலகிற்கும் அறிவிக்க தக்கதாக நாங்கள் இங்கே எழுதுகின்றோம் என்று கூறுகின்றார்.
கிறிஸ்துவும் கிறிஸ்துவைக் குறித்த செய்தியும் முழு உலகிற்குள்ளும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதனால்தான் கிறிஸ்துவுக்கு எதிராக எழும்புவோர்களின் கூட்டணிகள் அதிகமாகின்றது. சுவிசேஷத்தை விசுவாசித்து அதன் பலனை அனுபவிக்கிறவர்களை விடவும் சுவிசேஷத்திற்கு எதிராக எழும்புவோர் சுவிசேஷத்தினிமித்தம் உண்டாகும் பெரிய மாற்றத்தை மனக்கண்களில் கண்டு பொறாமை உள்ளவர்களாகி எதிர்வினை புரிகிறார்கள். அது சுவிசேஷத்தை நம்பி அனுபவித்து பின்பற்றும் கூட்டத்தை விடவும் சுவிசேஷத்தின் வலிமையைக் கண்டு அனுபவித்து எதிர்வினையாற்றும் கூட்டம் அதிகமாகின்றது.
கர்த்தருடைய வாக்கியங்கள் எழுத்து வடிவில் நம் கரங்களில் தரப்பட்டுள்ளது. அது ஒரு வெறும் புத்தகமல்ல. வாழ்க்கை புத்தகமாகும். பாவம் செய்கிற ஆத்மா சாகும் என்பதையும் விசுவாசிக்கிறவர்கள் பிழைப்பார்கள் என்பதையும் ஒருசேர போதிக்கும் ஒரே வாழ்க்கை புத்தகம் விவிலியம் மட்டுமே. பார்ப்பதற்கு மட்டுமல்ல, சுமப்பதற்கு மட்டுமல்ல, வாசிப்பதற்கு மட்டுமல்ல, தியானிப்பதற்கு மட்டுமல்ல, பிரசங்கிப்பதற்கு மட்டுமல்ல, வாழ்க்கையில் அன்றாடம் பயன்படுத்துவதற்காகவும் எழுதப்பட்டுள்ளது. விட்டு விடாதீர்கள்.
இந்த செய்தியின் விசேஷம் என்ன?..
இதனால் இரட்சிப்பு உண்டாகின்றது. இரட்சிப்பு என்பது நித்திய ஜீவன் பெறுவதாகும்.
இதனால் பாவமும் அதன் கூட்டாண்மைகளுக்கும் முடிவு உண்டாகின்றது.
இதனால் பொய் உலகிலிருந்து மெய் உலகிற்கு பயணமாகும் வாழ்க்கை துலங்குகின்றது.
இதனால் வாழ்வின் இறுதியாகிய நித்தியம் பயணமாகின்றோர்களின் கூட்டாண்மை உண்டாகின்றது.
சில கேள்விகள்….
அறிவித்தல் இல்லாமல் கிறிஸ்தவ வாழ்வு பூரணம் ஆகுமா?…
ஒளியை அனுபவிக்காமல் ஒளியை குறித்து பேசுவதும் எழுதுவதும் பிரசங்கிப்பதும் பிரயோஜனம் உள்ளதா?….
ஒளியையும் இருளையும் இணைத்து சிந்திப்பது நல்ல விசேஷமா?…
இனி சூரியன் உனக்கு பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்கு பிரகாசியாமலும், கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும் உன் தேவனே உனக்கு மகிமையாயிருப்பார். ஏசாயா 60:19.