அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.
I say to you,is he who is sent greater than he who sent him. (John 13:16)
Matthew 15:24; Matthew 23:37; Luke 1:19; Luke4:43; Luke 7:10; Luke 19:32; John1:6; John 3:28,34; John 10:36; Acts 13:4; 1Peter 2:14; Romans 10:14,15.
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல. அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல. (யோவான் 13:16)
மத்தேயு 15:24; மத்தேயு 23:37; லூக்கா 1:19; லூக்கா 4:43; லூக்கா 7:10; லூக்கா 19:32; யோவான் 1:6; யோவான் 3:28,34; யோவான் 10:36; அப்போஸ்தலர் 13:4; 1பேதுரு 2:14; ரோமர் 10:14,15
அனுப்பினவரே பெரியவர்:
அனுப்பப்பட்டவன் என்ற சொல்லுக்கு அப்போஸ்றலோஸ் என்ற கிரேக்கச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரதிநிதியாக, செய்தியாளனாக, அதிகாரம் செலுத்துகிறவனாக அனுப்பப்படுகிறவனே அப்போஸ்தலன். கர்த்தராகிய இயேசுவும் ஒரு அப்போஸ்தலர் என்பதற்கு இப்பகுதி சான்றாக அமைகின்றது. 12 அப்போஸ்தலர்களும் இயேசுவால் அனுப்பப்பட்டவர்கள். இவர்கள் மனிதரிடத்திலிருந்து மனிதரிடத்துக்கு அனுப்பப்பட்டவர்கள். கர்த்தராகிய இயேசுவோ பிதாவினால் பரலோகத்திலிருந்து பூலோகத்துக்கு அனுப்பப்பட்டவர். கர்த்தராகிய இயேசு பிதாவினிடம் எவ்விதம் அதிகாரம் செலுத்த முடியாதோ அவ்விதமே அனுப்பப்பட்ட அப்போஸ்தலர்களும் கிறிஸ்துவின் மேல் அதிகாரம் செலுத்த முடியாது.
திருச்சபையின் தலைமை பொறுப்பில் உள்ள ஊழியகாரர் (பேராயர் போன்றவர்கள்) தேவனுடைய பணி இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அப்போஸ்தலர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு தங்களை அனுப்பினவர் மேல் எவ்வித அதிகாரத்தையும் காண்பிக்க முடியாது. அனுப்பப்படுகிறவர், நியமிக்கப்படுகிறவர் தன்னை அனுப்புகிறவருக்கும், நியமிக்கிறவருக்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.
அனுப்புகிறவர் பிதாவின், கிறிஸ்துவின் ஸ்தானத்தில் இருந்து அனுப்பும் உரிமை உள்ளவராயிருக்கிறார். ஆனாலும் தன்னை அனுப்பினவருக்கு மேலானவரல்ல. அனுப்பப்படுகிறவர் எதற்காக அனுப்பப்பட்டாரோ அதை மட்டுமே செய்து நிறைவேற்ற வேண்டும். அனுப்பப்படுகிறவருக்கு காலமும், நேரமும், வேளையும் கொடுக்கப்படும். அந்த காலத்துக்குள்ளாக யாவையும் செய்து முடித்தாக வேண்டும். ஒருநாளும், ஒருபோதும் தன்னை நியமித்தவருக்கு எதிராகவோ, மேலாகவோ சொல்லிலும் நினைவிலும் செயலிலும் செயல்படுவார்களெனில் அதையும் அனுப்புகிறவர் அறிவார்.
விவிலிய நியமங்களை ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்கிறவன் மட்டுமே அங்கீகரிக்கப்படுவான். தன்னை நியமித்தவர்களை விட்டு பிரிந்துபோவது இச்சையினிமித்தமாகவும், வெறுப்பினிமித்தமாகவும், உரிமையினிமித்தமாகவும் இருக்குமானால் அதற்குரிய விலைகிரயத்தைக்கொடுக்க வேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் நமது சபையால் சபைக்காக சபைஸ்தாபிக்க அனுப்பப்பட்டுள்ளோம். இடறாமல் இடறல் உண்டாக்காமல் தொடர்வோம்.
அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: வழிக்குத் தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டுபோகவும் வேண்டாம். எந்த வீட்டிலே பிரவேசிக்கிறீர்களோ, அங்கே தங்கி, அங்கிருந்து புறப்படுங்கள். உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் என்றார். அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள். லூக்கா9:1-6.