கிறிஸ்துவின் வருகையில் மரித்தவர்கள் எதற்காக எழுந்திருப்பார்கள் ?
இயேசு கிறிஸ்து வானங்களைத் திறந்து வருகின்ற போது பூமியிலுள்ள உயிரோடு இருக்கிற ஒவ்வொருவரும் அவருடைய சத்தத்தைக் கேட்பார்கள்.
பிரேதக் குழியில் உள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்பார்கள் என்பது இயேசு கிறிஸ்துவின் வாக்குத்தத்தமாய் இருக்கிறது.
இந்த பூமியில் பிறந்து மரித்த ஒவ்வொரு மனுஷனும் உயிர்த்தெழுவான்.
அவர்கள் எப்படி மரித்து இருந்தாலும் உயிர்த்தெழுவார்கள்.
மரித்து மண்ணில் புதைக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவின் வருகையின் நாளில் உயிர்த்தெழுவார்கள்.
யோவான் 5:28 இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;
சமுத்திரத்தில் மரித்தவர்கள் அங்கே இருந்து உயிர்த்தெழுவார்கள்.
வெளி 20:13 சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
இன்றைக்கு மரித்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
லூக்கா 16:23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
இன்றைக்கு எந்த மனிதனும் மரித்தாலும் தற்காலிக தேவனுடைய தீர்ப்பாய் இருக்கிற பாதாளத்திற்கு போகிறார்கள்
பாதாளத்தில் இரண்டு பிரிவுகள் இருக்கிறது?
1)ஒரு பகுதி பரதீசு என்று அழைக்கப்படுகிறது.
2)இன்னொரு பகுதி வேதனையுள்ள ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.
இன்றைக்கு கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் பரதீசுக்கு போகிறார்கள்
வெளி 14:13 பின்பு, ,,,,,,,,, அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று.
இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்த போது மனந்திரும்பி மரித்த கள்ளனும் பரதீசுக்கு சென்றான்.
லூக்கா 23:43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்த போது பாதாளத்திலே உள்ள பரதீசுக்கு சென்றார்.
லூக்கா 23:43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இயேசு கிறிஸ்துவின் ஆத்தமா பாதாளத்திலேயே விடப்படவில்லை என்று தேவன் முன்னறிவித்து இருந்தார்.
அப்போஸ்தலர் 2:31 அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.
சங்கீதம் 30:3 கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்.
இயேசு கிறிஸ்து மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து இன்றைக்கு மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராய் இருக்கிறார்.
வெளி 1:18 மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
மரித்தவர்கள் ஏன் உயிர்த்தெழ வேண்டும்?
யோவான் 5:29 அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருப்பார்கள். தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருப்பார்கள்.
இப்போது கேள்வி என்னவென்றால் நாம் யாரால் உயிர்ப்பிக்கப்படுவோம்?
அப்போஸ்தலர் 26:8 தேவன் மரித்தோரை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் எண்ணுகிறதென்ன?
யோவான் 6:39 அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.
யோவான் 6:40 குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.
யோவான் 6:44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
யோவான் 6:54 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
தேவன் துன்மார்க்கமாய் வாழ்ந்து மரித்தவர்களையும் உயிர்த்தெழ வைப்பார் பரிசுத்தமாய் வாழ்ந்து கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களையும் உயிர்த்தெழ வைப்பார்.
இயேசு கிறிஸ்துவின் வருகையின் நாளில் எக்காளம் தொனிக்கும் போது மரித்தவர்கள் அழிவில்லாத சரீரத்தோடு எழுந்திருப்பார்கள்.
1கொரிந்தியர் 15:52 எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
1கொரிந்தியர் 15:22 ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
ஆதாம் முதற்கொண்டு கிறிஸ்துவின் வருகை மட்டும் மரித்தவர்கள் வரை உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
1கொரிந்தியர் 15:23 அவனவன் தன் தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
தன் தன் வரிசை என்பது ஒருவேளை ஆதாம் முதற்கொண்டு யார் எந்ததெந்த காலகட்டத்தில் மரித்தார்களோ அவர்கள் எல்லாரும் வரிசை கிரமமாக உயிர்த்தெழுவார்கள்.
கிறிஸ்துவின் வருகையில் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்
ஆதாம் முதற் கொண்டு கிறிஸ்து வருகை வரை மரித்தவர்கள் தங்கள் தங்கள் வரிசையில் உயிர்ப்பிக்கப்படுவார்கள்
இயேசு கிறிஸ்து வரும் போது பவுல் என்ன இரகசியத்தை அறிவிக்கிறார்?
1கொரிந்தியர் 15:51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
அந்த இரகசியம் என்ன?
இயேசு கிறிஸ்து வருகையின் நாளில் மரித்தவர்கள் உயிர்த்தெழுந்த பின்பு கடைசி எக்காளம் தொனிக்கும் போது போது தான் உயிரோடு இருக்கிறவர்கள் மறுரூபமாக்கப்படுவார்கள்.
கடைசி எக்காளம் தொனிக்கும் போது தான் ஒரு நிமிஷத்திலே ஒரு இமைப்பொழுதிலே நாம் எல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
ஆகையால் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக் கொள்ளுவதில்லை.
1தெசலோனிக்கேயர் 4:15 கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.
மரித்தவர்கள் உயிர்த்தெழுந்த பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போவோம்.
1தெசலோனிக்கேயர் 4:14 இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.
1தெசலோனிக்கேயர் 4:17 பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.