தோல்வி பிரச்சனைகள்

தோல்வி பிரச்சனைகள்

தேர்விலோ அல்லது வாழ்க்கையிலோ தோல்வி அடைந்து விட்டேன் என்பதற்காக தற்கொலை செய்து கொள்ளுவது சரியான முடிவா?

பல காரணங்களுக்காக மனிதர்கள் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள்.

தற்கொலை செய்து அவர்கள் மரித்து மீளமுடியாத துயரமுள்ள இடத்திற்கு போய் விடுவார்கள் என்பதைக் குறித்து நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிற நமக்கு முன்பாக எந்த பிரச்சனை வந்தாலும் அதை சரி செய்து கொள்ளுவது எப்படி என்றோ இல்லை அந்த பிரச்சனையில் இருந்து எப்படி விலகி விட வேண்டும் என்றோ தான் நினைக்க வேண்டுமே தவிர தற்கொலை செய்து கொள்ளுவது தான் ஒரே முடிவு என்கிற நிலைக்கு நாம் ஒரு போதும் வந்து விடக்கூடாது.

இன்றைய காலகட்டதில் தேர்வில் தோல்வி அடைந்து விட்டேன். அவமானமாக இருக்கிறது, அதனால் சாகப்போகிறேன் என்று சிலர் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள்.

இன்னும் சிலர் வாழ்க்கையில் தோற்றுவிட்டேன் நான் வாழ தகுதியற்றவன் அதனால் தற்கொலை செய்து கொள்ளுகிறேன். இப்படி சொல்லி தற்கொலை பண்ணிக் கொள்ளுகிறார்கள்.

நீங்கள் தற்கொலைப் பண்ணி செத்தால் உங்களைத் தூக்கி கொண்டு போய் அடக்கம் பண்ணி விடுவார்கள்.

உங்களை அடக்கம் செய்த உங்கள் வீட்டாருக்கு ஆறு மாதமோ ஒரு வருடமோ தான் வேதனை. அதற்கு பிறகு அவர்கள் தங்கள் இயல்பு நிலைக்கு பெரும்பாலும் திரும்பி விடுவார்கள்.

ஆனால் உங்கள் ஆத்துமா பாதாளத்தில் வேதனையுள்ள ஸ்தலத்திற்கு போய் நித்திய நித்தியமாக அக்கினியிலே வேதனைப்படுவீர்களே அப்போது என்ன செய்வீர்கள்?

அப்போது உங்களுக்கு என்ன தோன்றும் இங்கே இந்த அளவுக்கு வேதனைப்படுவதற்கு பூமியிலே உயிரோடு இருந்தால் எல்லா பிரச்சனைகளையும் சமாளித்து ஜெயித்து இருக்கலாம் என்று தோனாதா?

இன்றைக்கு தேர்வில் தோல்வியடைந்தவர்களும் வாழ்க்கையில் தோல்வியடைந்தேன் என்று சொல்லிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டவர்கள் அப்படி தான் யோசிப்பார்கள் அல்லவா?

நாம் எந்த தோல்வியாக இருந்தாலும் அதை சரி பண்ணுவதற்கு நமக்கு காலங்களையும் பெலனையும் கர்த்தர் கொடுத்து இருக்கும் போது எதற்காக நாம் தற்கொலைப் பண்ணிக் கொள்ள வேண்டும்.

நாம் தாழ்வு காலத்தில் சிந்தை செய்ய வேண்டும் என்று தான் தேவன் நமக்கு ஆலோசனைக் கொடுக்கிறார்.

பிரசங்கி 7:14 வாழ்வுகாலத்தில் நன்மையை அநுபவித்திரு, தாழ்வுகாலத்தில் சிந்தனைசெய்; மனுஷன் தனக்குப்பின் வருவதொன்றையும் கண்டுபிடியாதபடிக்குத் தேவன் இவ்விரண்டையும் ஒன்றுக்கொன்று எதிரிடையாக வைத்திருக்கிறார்.

யோசுவாவின் காலத்தில் ஆயி பட்டணத்தைப் பிடிக்கப் போனவர்கள் தோல்வி அடைந்து திரும்பி வந்து தேவனுடைய சமூகத்தில் அழுதார்கள்.

யோசுவா 7:6 அப்பொழுது யோசுவா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பரும் சாயங்காலமட்டும் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள்

அவர்கள் தங்களுடைய தோல்விக்கு என்ன காரணம் என்பதைக் கண்டுப்பிடித்தார்கள்?

யோசுவா 7:11 இஸ்ரவேலர் பாவஞ்செய்தார்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள்; சாபத்தீடானதில் எடுத்துக்கொண்டதும், களவுசெய்ததும், வஞ்சித்ததும், தங்கள் பண்டம்பாடிகளுக்குள்ளே வைத்ததும் உண்டே.

யோசுவா அதை சரி செய்த போது வெற்றிப் பெற்றார்கள்.
யோசுவா 8:24 இஸ்ரவேலர் வனாந்தரவெளியிலே தங்களைத் துரத்தின ஆயியின் குடிகளையெல்லாம் வெட்டித் தீர்ந்தபோதும், அவர்கள் அனைவரும் நாசமாகுமட்டும் பட்டயக்கருக்கினால் விழுந்து இறந்தபோதும், இஸ்ரவேலர் எல்லாரும் ஆயிக்குத் திரும்பி, அதைப் பட்டயக்கருக்கினால் சங்கரித்தார்கள்.

நாம் தோல்வி அடைந்ததற்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை நாம் கண்டுபிடித்து சரி செய்தால் வெற்றி பெறலாம்.

கோலியாத்தை ஜெயித்த தாவீதுக்கு அவருடைய காலகட்டத்தில் தன் குடும்பத்தையும் தன்னை நம்பி இருந்த மனுஷர்களுடைய குடும்பத்தையும் இழந்து விட்ட ஒரு சூழ்நிலை வந்தது.

தாவீது சவுலுக்குத் தப்பி இருந்த நேரத்தில் அவரும் அவரோடு கூட இருந்த மனுஷர்களும் ஒரு ராஜாவுக்கு உதவி செய்ய போய் இருந்தார்கள்.

அந்த நேரத்தில் அமலேக்கியர்கள் சிக்லாகில் இருந்த அவர்களுடைய மனைவிகளையும் பிள்ளைகளையும் சிறைபிடித்து போய் விட்டார்கள்.

1சாமுவேல் 30:1 தாவீதும் அவன் மனுஷரும் மூன்றாம் நாளிலே, சிக்லாகுக்கு வந்து சேருகிறதற்குள்ளே, அமலேக்கியர் தென்புறத்துச் சீமையின்மேலும் சிக்லாகின்மேலும் விழுந்து, சிக்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து,

1சாமுவேல் 30:2 அதிலிருந்த ஸ்திரீகளாகிய சிறியவர்களையும் பெரியவர்களையும் சிறைபிடித்து, ஒருவரையும் கொன்றுபோடாமல், அவர்களைப் பிடித்துக்கொண்டு, தங்கள் வழியே போய்விட்டார்கள்.

1சாமுவேல் 30:3 தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள்.

தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் சத்தமிட்டு அழுதார்கள்.
1சாமுவேல் 30:4 அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள்.

தாவீதின் மனைவிகளையும் சிறைபிடித்துக் கொண்டு போய் விட்டார்கள்.

1சாமுவேல் 30:5 தாவீதின் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமும், கர்மேல் ஊராளான நாபாலின் மனைவியாயிருந்த அபிகாயிலும், சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள்.

தாவீதை கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று தாவீதோடு கூட இருந்த மனுஷர்கள் சொல்லிக் கொண்டார்கள்.

1சாமுவேல் 30:6 தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்;

தாவீது மிகவும் நெருக்கப்பட்டார். ஆனால் அவர் சோர்ந்து போகவில்லை.

தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டார்.

1சாமுவேல் 30:6,, தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.

நமக்கும் எந்த சூழ்நிலைகள் வந்தாலும் தேவனாகிய கர்த்தருக்குள் நம்மை எப்போதும் திடப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எந்த பிரச்சனையாக இருந்தாலும் தேவன் மாத்திரமே விடுதலையை தர முடியும் என்பதை நாம் உணர வேண்டும்.

தோல்வியைக் கண்டு அவர் துவண்டு போக வில்லை எழுந்தார் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவர் யோசித்து செயலில் இறங்கினார்.

1சாமுவேல் 30:7 தாவீது அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை என்னிடத்தில் கொண்டுவா என்றான்; அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்தான்.

தாவீது தேவனிடத்தில் விசாரித்தார்.

1சாமுவேல் 30:8 தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். ,,,,,

தேவன் தாவீதிடம் என்ன சொன்னார்?
1சாமுவேல் 30:8 ,,,,,, அதற்கு அவர்: அதைப் பின் தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார்.

தேவன் சொன்னது போல தாவீது எல்லாவற்றையும் திருப்பிக் கொண்டார்.

1சாமுவேல் 30:18 அமலேக்கியர் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான்.

1சாமுவேல் 30:19 அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும் பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்.

இந்த வெற்றியைப் பெற தாவீது கடுமையாக உழைக்க வேண்டியதாய் இருந்தது.

தாவீதோடு கூட அறுநூறுபேர் போனார்கள். ஆனால் இருநூறுபேர் விடாய்த்து போனபடியினால் பேசோர் ஆற்றைக் கடக்கமாட்டாமல் நின்று போனார்கள்.

1சாமுவேல் 30:9 அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த அறுநூறுபேரும் போனார்கள்; அவர்கள் பேசோர் ஆற்றண்டைக்கு வந்தபோது அங்கே சிலர் நின்றுபோனார்கள்.

ஆனாலும் தாவீது சோர்ந்து போகவில்லை தொடர்ந்து நானூறு பேரோடு முயற்சி செய்தார்.
1சாமுவேல் 30:10 தாவீதோ, நானூறுபேரோடுங்கூடத் தொடர்ந்து போனான்; இருநூறுபேர் விடாய்த்துப்போனபடியினால் பேசோர் ஆற்றைக் கடக்கமாட்டாமல் நின்றுபோனார்கள்.

தேவன் தாவீதின் முயற்சிக்கு கைக்கொடுத்தார்.

தாவீதுக்கு உதவி செய்ய தேவன் ஒரு எகிப்தியனை உயிரோடு வைத்து இருந்தார்.

தாவீது ஒரு எகிப்தியனுக்கு நன்மை செய்து அவன் மூலமாக அமலேக்கியர்கள் இருக்க கூடிய இடத்தைக் கண்டுபிடித்து தன்னோடு இருந்த நானூறு பேரைக் கொண்டு முறியடித்தார்.

1சாமுவேல் 30:17 அவர்களைத் தாவீது அன்று சாயங்காலந்தொடங்கி மறுநாள் சாயங்காலமட்டும் முறிய அடித்தான்; ஒட்டகங்கள் மேல் ஏறி ஓடிப்போன நானூறு வாலிபர் தவிர, அவர்களில் வேறொருவரும் தப்பவில்லை

தனக்கு அந்த வெற்றியைக் கொடுத்தவர் தேவன் என்பதை தாவீது அறிந்து இருந்தார்.

1சாமுவேல் 30:23 அதற்குத் தாவீது: ,,,,, கர்த்தர் நம்மைக் காப்பாற்றி, நமக்கு விரோதமாய் வந்திருந்த அந்தத் தண்டை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்.

நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
1யோவான் 5:4 தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.

எந்த தோல்வியாக இருந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்தால் ஜெயிப்பதற்கான அநுகூலமான கதவுகளைத் தேவன் நமக்கு திறப்பார்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME