கடன் வாங்கி என்னால் திருப்பி செலுத்த முடியவில்லை என்பதற்கு தற்கொலை செய்து கொள்ளுவதுதான் தீர்வா?
கடன் வாங்கி திரும்ப செலுத்த முடியாமல் போகிறவர்கள் தான் தற்கொலை செய்து கொள்ளுவதில் பெரும்பாலும் முதல் இடத்தில் இருக்கிறார்கள்.
கிறிஸ்தவர்களுக்கு தற்கொலை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எந்த சூழ்நிலையிலும் வரக்கூடாது.
ஏனென்றால் அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் சிக்கும் போது சாத்தான் அதை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுவான்.
இயேசு கிறிஸ்து தற்கொலை செய்து கொள்ளுவதற்கு சாத்தான் எப்படி தூண்டிவிட்டான் என்பதை கவனியுங்கள்.
மத்தேயு 4:5 அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி:
மத்தேயு 4:6 நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
நீர் தேவனுடைய குமாரனாய் இருந்தால் தாழ குதியும் அப்போது தேவன் தம்முடைய தூதர்களை அனுப்பி உம்மை கைகளில் ஏந்திக்கொள்வார்கள் என்கிறான்.
இயேசு கிறிஸ்து அந்த சோதனையை தேவனுடைய வார்த்தையைக் கொண்டு மேற்கொண்டார்.
மத்தேயு 4:7 அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.
இயேசு கிறிஸ்து உப்பரிக்கையின் மேலிருந்து குதித்து தேவனை பரீட்சை பார்க்கவில்லை.
நாம் சோதனையில் சிக்கிக் கொள்ளும் போது சாத்தான் நம்முடைய இருதயத்தைத் தூண்டி விடுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.
தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவையே தேவலாயத்தின் உப்பரிக்கையின் மேல் நிறுத்தி தாழ குதியும் என்று சொல்வான் என்றால் தற்கொலை செய்யக்கூடிய எண்ணத்தை நமக்கும் தூண்டிவிடுவான் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
இயேசு கிறிஸ்துவை காட்டிக்கொடுப்பதற்கு யூதாஸ்காரியோத்தின் இருதயத்தை சாத்தான் தூண்டி விட்டான்.
யோவான் 13:2 சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம் பண்ணிக்கொண்டிருக்கையில்;
யூதாஸ்காரியோத்தை தற்கொலை செய்ய தூண்டியது யாராக இருக்கும்?
மத்தேயு 27:5 அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்.
பாவம் செய்ய தூண்டுகிறவன் சாத்தானாக தான் இருக்கும்.
1கொரிந்தியர் 7:5 ,,,,,,, உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடி வாழுங்கள்.
தற்கொலை எண்ணங்களில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ள வேத வாக்கியங்கள் நமக்கு என்ன போதிக்கிறது?
கடன் வாங்கி விட்டேன் திருப்பி என்னால் செலுத்த முடியவில்லை. அதனால் தற்கொலை பண்ணி சாகப்போகிறேன் என்றால் தேவன் கடனை திரும்ப செலுத்தாதவனை துன்மார்க்கன் என்று அழைக்கிறார்.
சங்கீதம் 37:21 துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்; நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்.
நான் துன்மார்க்கனாய் செத்தேன் என்றால் என் ஆத்துமா எங்கே போகும்?
சங்கீதம் 9:17 துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.
நாம் வாங்கின கடனுக்கு தேவன் நம்முடைய வங்கி கணக்கில் பணம் எல்லாம் செலுத்தமாட்டார்.
அப்படி போதிக்கக்கூடிய நபர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்.
நாம் கடன் வாங்கி விட்டோம் என்றால் அதை தீர்ப்பதற்கு என்ன முயற்சியோ அதை தான் செய்ய வேண்டும்.
ராஜாவிடம் ஒரு ஊழியக்காரன் கடன் பட்டு இருந்தான் அதை அவனால் திரும்ப செலுத்த முடியவில்லை.
மத்தேயு 18:25 கடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான்.
ராஜா அவனையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் (மனைவி, பிள்ளைகள்) விற்று கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டார்.
அதைக் கேட்ட போது அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து பணிந்து பொறுமையாயிரும் எல்லாவற்றையும் உமக்கு கொடுத்து தீர்க்கிறேன் என்று மன்றாடினான்.
மத்தேயு 18:26 அப்பொழுது, அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து, வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான்.
அந்த ஊழியக்காரனுக்கு ராஜாவுடைய கண்களில் மிகப்பெரிய தயவு கிடைத்தது.
மத்தேயு 18:27 அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைபண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.
நாம் கடன் கொடுத்தவர்களிடத்தில் மனத்தாழ்மையாய் பேசினால் நமக்கு திரும்ப செலுத்துவதற்கு அதிக காலங்கள் கொடுக்கப்படலாம்.
இந்த ஊழியக்காரன் தன்னுடைய உடன்வேலைக்காரனுடைய கடனை மன்னிப்பதற்கு அவன் மனம் இரங்கவில்லை
மத்தேயு 18:28 அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன் உடன்வேலைக்காரரில் ஒருவனைக் கண்டு, அவனைப் பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான்.
நம்மிடத்தில் சிறிய அளவில் கடன் பட்டவர்களை நாம் மன்னிக்க ஆயத்தமாய் இருக்க வேண்டும்.
அந்த ஊழியக்காரனுடைய உடன்வேலைக்காரன் அவனுடைய காலில் விழுந்து பொறுமையாய் இருக்கும்படி வேண்டிக்கொண்டான்.
மத்தேயு 18:29 அப்பொழுது அவனுடைய உடன்வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான்.
ஆனால் அந்த ஊழியக்காரன் மனம் இரங்காமல் அந்த உடன்வேலைக்காரனை காவலில் போடுவித்தான்.
மத்தேயு 18:30 அவனோ சம்மதியாமல், போய், அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான்.
நம்மிடத்தில் சிறிய அளவில் கடன்பட்டவர்களை நாம் மன்னிக்கவில்லை என்றால் என்ன சம்பவிக்கும்?
மத்தேயு 18:31 நடந்ததை அவனுடைய உடன்வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள்.
மத்தேயு 18:32 அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.
மத்தேயு 18:33 நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,
மத்தேயு 18:34 அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.
கடன்பட்டவர்கள் தாங்களைத் தாழ்த்தி கேட்டுக் கொண்டால் நிச்சயமாக வாய்ப்புகள் கொடுக்கப்படலாம்.
நம்மிடத்தில் கடன்பட்டவர்களை மன்னிப்பதற்கு நாம் தயராக இருக்க வேண்டும்.
நீங்கள் கடன் வாங்கி திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து விடுவீர்கள் என்றால் உங்கள் குடும்பத்தார் எப்படி அதை அடைப்பார்கள் என்பதை யோசித்து இருக்கிறீர்களா?
அவர்கள் எவ்வளவு அவமானப்படுத்தப்படுவார்கள் என்பது தெரியுமா?
கிறிஸ்தவர்களில் கடன் கொடுக்கிறவர்கள் நீதிமான்கள் என்றும் கடன் வாங்கினவர்கள் பாவிகள் என்று அநேகர் போதித்துக் கொண்டு இருக்கிறார்கள் இது சரியா?
இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்கு கீழ்ப்படியும் போது எப்படி ஆசீர்வதிக்கப்படுவார்கள்?
உபாகமம் 15:6 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை.
உபாகமம் 28:12 ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்.
இந்த வசனத்தில் அவர்கள் அநேக ஜாதிகளுக்கு கடன் கொடுக்க வேண்டும் என்றால் தேவன் மழையைப் பெய்யப்பண்ண வேண்டும்.
மழை பெய்யவில்லை என்றால்?
இந்த வசனத்தை வைத்துக் கொண்டு நாம் கடன் வாங்குவது பாவம் என்று அநேகர் போதித்து கொண்டு இருக்கிறார்கள்.
இஸ்ரவேலர்கள் தேவனுக்கு கீழ்ப்படியாத போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை யாரும் மேற்கோள் காட்டுவதில்லை.
உபாகமம் 28:43 உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேற்பட்டு மேன்மேலும் உயர்ந்திருப்பான்; நீ மிகவும் தாழ்த்தப்பட்டுப்போவாய்.
உபாகமம் 28:44 அவன் உன்னிடத்தில் கடன்படான், நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் தலையாயிருப்பான், நீ வாலாயிருப்பாய்.
இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்கு கீழ்ப்படியும் போது தேவன் கொடுக்கும் ஆசீர்வாதம்
உபாகமம் 28;1-14 வசனங்கள் வரை தான் ஆசீர்வாதம்.
இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்கு கீழ்ப்படியாத போது தேவன் கொடுக்கும் சாபங்கள்.
உபாகமம் 28:15-68 வசனங்கள் வரை எல்லாம் சாபங்கள் தான்.
கடன் கொடுப்பதை பற்றி தேவனுடைய ஆலோசனை என்ன?
உபாகமம் 15:8 அவனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக.
உபாகமம் 15:9 விடுதலை வருஷமாகிய ஏழாம் வருஷம் கிட்டியிருக்கிறதென்று சொல்லி, உன் இருதயத்திலே பொல்லாத நினைவு கொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடாமல் மறுத்து, அவன்மேல் வன்கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி அபயமிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும்.
உபாகமம் 15:10 அவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதினிமித்தமாக உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.
புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவின் கட்டளை என்ன?
மத்தேயு 5:42 உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
லுக்கா 6:34 திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன்கொடுக்கிறார்களே.
லுக்கா 6:35 ,,,,,, கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்,,,,,,,
ஒருவரிடத்திலொருவர் அன்பு கூருகிற கடனேயல்லாமல் மற்றொன்றிலும் கடன்படாதிருங்கள்.
ரோமர் 13:8 ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; ,,,,,,,