இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா?
Jesus said,Have I been with you so long, and yet you have not known Me, (John 14:9)
Mark 9:19; John 12:45; Luke 12:56; 1Corintians 15:12; Philippians 2:6; Colossians 1:15; Psslm 11:1; Jeremiah 2:23; James 3:1.
அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? (யோவான் 14:9)
மாற்கு 9:19; யோவான் 12:45; லூக்கா 12:56; 1கொரிந்தியர் 15:12; பிலிப்பியர் 2:6; கொலோசெயர் 1:15; சங்கீதம் 11:1; எரேமியா 2:23; யாக்கோபு 3:1.
நீ என்னை அறியவில்லையா?
கர்த்தராகிய இயேசு தமது சீஷர்கள் தம்மோடு இருக்கும்படியாகவும், தம்மை அறிந்து விசுவாசித்து பிரசங்கிக்கும் படியாகவும் விரும்பினார். அவரோடு இருந்து அவரது கிரியைகளையும் உபதேசங்களையும் கண்ணார கண்டும் காதார கேட்டும் பல நேரங்களில் உணர்வில்லாமலும் அவிசுவாசிகளைப் போலும் நடந்துக் கொண்டார்கள். மூன்றரை வருட பயிற்சியிலும் தேறாத சீஷர்களாகவே காணப்பட்டனர். என்றாலும் அவர்களை வெறுக்காமல் அவர்களுக்கு மேலும் போதிக்கின்றார். என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்று அறிவுறுத்துகின்றார்.
கர்த்தருக்கு பணி செய்யும்படி அழைக்கப்பட்ட தேவ மனிதர்கள் என்ற பெயர் பெற்றவர்கள் கர்த்தராகிய இயேசுவை தனிபட்ட முறையில் அறிந்துகொள்ள இயலாதவர்களாயிருந்து பலவிதமான தவறான போதனைகளையும் கிரியைகளையும் வெளிபடுத்துகிறவர்களாயுள்ளனர். நிக்கோதேமுவைபோல காணப்படுகின்றனர். அதிக ஆக்கினை உண்டு என்று அறிந்தும் நியாயபிரமாண போதகராக இருக்க விரும்புகிறார்கள். மறுதலித்துப் போகிறவர்களுக்கு அதிக ஆக்கினை உண்டு என்று அறிந்தும் மாறுபாடானவைகளை போதிக்கிறார்கள்.
காலம் காலமாக விவிலியத்தை படித்தும் மனப்பாடம் பண்ணியும் இயேசுவை அறிகிற அறிவில்லாதவர்களாகவே உள்ளனர். சபைக்கு சென்றும் சத்தியத்தை கேட்டும் விசுவாசமில்லாத மாறுபாடானவர்களாக உள்ளனர்.
இவைகளுக்கெல்லாம் முடிவு வரப்போகின்றது. தாம் சிந்திய இரத்தத்தினால் மீட்கபடாமலிருக்கும் மனுகுலத்தினை பழிவாங்கும்படி வரப்போகின்றார். மனந்திரும்புங்கள்.
அதிக கிரயம் கொடுத்தவர் அதிகமாய் கேட்பார்.
அதிக கிருபை காண்பித்தவர் அதிக கிரியை எதிர்பார்ப்பார்.
ஆ என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன். ஆ, வனாந்தரத்தில் வழிப்போக்கரின் தாபரம் எனக்கு இருந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் என் ஜனத்தைவிட்டு, அவர்களிடத்தில் இராதபடிக்குப் போய்விடுவேன்; அவர்களெல்லாரும் விபசாரரும் துரோகிகளின் கூட்டமுமாயிருக்கிறார்கள். அவர்கள் பொய்யைப் பிரயோகிக்கத் தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்தத் தேசத்திலே பலத்துக்கொள்வது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் அவனவன் தன் தன் சிநேகிதனுக்கு எச்சரிக்கையாயிருங்கள், எந்தச் சகோதரனையும் நம்பாதிருங்கள்; எந்தச் சகோதரனும் மோசம்பண்ணுகிறான், எந்தச் சிநேகிதனும் தூற்றித்திரிகிறான். அவர்கள் மெய்யைப் பேசாமல் ஒவ்வொருவரும் தமக்கடுத்தவனை ஏய்க்கிறார்கள்; பொய்யைப்பேசத் தங்கள் நாவைப் பழக்குகிறார்கள், அக்கிரமஞ்செய்ய உழைக்கிறார்கள். கபடத்தின் நடுவிலே குடியிருக்கிறாய்; கபடத்தினிமித்தம் அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகையால், இதோ, நான் அவர்களை உருக்கி, அவர்களைப் புடமிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; என் ஜனமாகிய குமாரத்தியை வேறெந்தப்பிரகாரமாக நடத்துவேன்? எரேமியா9:1-7.