யார் இரட்சிக்கப்படப் போகிறார்கள்

யார் இரட்சிக்கப்படப் போகிறார்கள்?

Who Will be Saved?

(வெளி 3:14-17)

பூமியில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டு இருக்கிற எல்லா மனிதர்களுக்கும் நியாயத்தீர்ப்பு ஒன்று இருக்கிறது. அந்த நியாயத்தீர்ப்பிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது எல்லாரும் நியாயந்தீர்க்கப்பட்டு அவர்களுக்கேற்ற பலனை அடைவார்கள்.

எல்லா ஜனங்களும் என்ன விசுவாசிக்கிறார்கள்?

அநேகர் நியாயத்தீர்ப்பு என்பதை ஏற்றுக் கொள்ளுவதில்லை அதை மறுக்கிறார்கள்.

அதிகமான ஜனங்கள் நரகத்தை விட பரலோகத்தை அதிகம் விசுவாசிக்கிறார்கள்.

மத்தேயு 7:13 இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.

மத்தேயு 7:14 ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.

  • அநேகர் அக்கினி கடலை விசுவாசிப்பதினால் அதைப் பற்றி நடுங்குகிறார்கள்.
  • பிரிவினைக் கூட்டத்தார்கள் பரலோகம் செல்லுவதாக முழு நம்பிக்கையாக உள்ளார்கள். ஆனால் மரணத்திற்கு பயப்படுகிறார்கள்.

அநேக சபையின் அங்கத்தினரும் கூட கிறிஸ்து தங்களை நியாயத்தீர்ப்பு செய்வதில்லை என்று விசுவாசிக்கிறார்கள்.

1கொரிந்தியர் 4:4 என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே.

1கொரிந்தியர் 4:5 ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.

  • பவுல் தன்னை தானே தீர்ப்பு செய்து கொள்ளவில்லை. தனக்கு நியாயத்தீர்ப்பு இருக்கிறது. கர்த்தர் தன்னை விசாரிப்பார் என்பதையும் அறிந்து இருந்தார்.

ஓட்டத்தை முடிக்கும் வரைதான் உயிர்த்தெழுதலை அடைந்தாயிற்று என்று பவுல் விசுவாசிக்கவில்லை.

பிலிப்பியர் 3:11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.

பிலிப்பியர் 3:12 நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்.

பிலிப்பியர் 3:13 சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,

பிலிப்பியர் 3:14 கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.

  • பவுலுக்கு இருந்த அதே மனது தேவனுடைய உண்மையுள்ள பிள்ளைகளுக்கும் இருக்கிறது.

அவர்கள் கிறிஸ்துவை விசுவாசித்து தங்களுடைய ஓட்டபந்தயத்தை அவருடைய கட்டளைகளை கொண்டு ஓடுகிறார்கள்.

1கொரிந்தியர் 9:24 பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.

1கொரிந்தியர் 9:25 பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.

சில மனிதர்கள் தாங்கள் இரட்சிக்கப்படாத போதும் தாங்கள் இரட்சிக்கப்படுவதாக நினைக்கிறார்கள். ஆனால் சாலமோன் இதை பற்றி இரண்டு தரம் எச்சரிக்கிறார்.

நீதிமொழிகள் 14:12 மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.

சாலமோன் ஓரே சத்தியத்தை இரண்டு வெவ்வேறு நீதிமொழிகளில் தருகிறார்.

நீதிமொழிகள் 16:25 மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.

  • தேவன் இது மிக முக்கியமானது என்பதற்காக சாலமோன் மூலம் இரண்டு முறை கொடுத்து இருக்கிறார்.

வேதனையுள்ள ஸ்தலத்தில் விழித்து எழுந்தபோது ஐஸ்வர்யவான் ஆச்சரியம் அடைந்திருப்பார்கள்.

லூக்கா 16:23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.

வேதனை உள்ள இடத்தில் ஐஸ்வர்யவானின் சகோதரர்கள் விழித்து எழும்போது நிச்சயம் அவர்களும் ஆச்சரியப்படுவார்கள்.

லூக்கா 16:27 அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு,

லூக்கா 16:28 நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.

  • மரிப்பதற்கு முன்பு ஐஸ்வர்யவானுக்கு தான் வேதனையுள்ள இடத்தை அடைவோம் என்ற நினைவு இருந்திருக்குமானால் அவர் தனது வழியை மாற்றிக் கொண்டிருப்பார்.
  • மரிப்பதற்கு முன்பு தனது சகோதரர்களுடன் பேசி அவர்களை எச்சரித்திருப்பார்.

ஏன் அநேகர் மரணத்தை பற்றி பயப்படுகிறார்கள்?

ஏனெனில் தங்களின் இருதயத்தில் தேவனுக்கு முன்பாக தாங்கள் சரியாக இல்லை என்பதை அவர்கள் அறிந்து இருப்பதால் பயப்படுகிறார்கள்.

மனிதனின் இருதயத்திற்குள் தனது கிரியைகள் பொல்லாதது என்பது அவனுக்கு தெரியும்.

ரோமர் 1:32 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.

தாங்கள் தொடர்ந்து பாவம் செய்து கொண்டு இருக்கிறோம் என்பதை எத்தனை பேர் அறியாமல் இருக்கிறார்கள்?

உங்கள் பாவங்களோடு நீங்கள் இரட்சிக்கப்பட முடியும் என்று போதிக்கிற போதகர்களுக்கு இவர்கள் செவி கொடுக்கிறார்கள்.

இயேசு பரலோகத்தில் இருந்து மேகங்கள் மீது வரும்போது எல்லா மனிதரும் வானத்தில் அவரை காண்பார்கள்.

வெளி 1:7 இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.

வெளி 6:12 அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம் போலாயிற்று.

வெளி 6:13 அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.

வெளி 6:14 வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிப்போயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோயின.

வெளி 6:15 பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு,

வெளி 6:16 பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்;

வெளி 6:17 அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்.

  • இயேசுவின் வருகையின் போது அநேக ஜனங்கள் ஜீவிப்பார்கள் என்றும் தேவன் தங்கள் மீது கோபமாய் இருக்கிறார் என்பதை அறிந்திருப்பார்கள் என்று வேத வசனத்தில் காணப்படுகிறது.
  • எல்லாரும் இதை விசுவாசிக்கிறார்கள் ஆனால் தங்களின் இருதயத்தின் ஆழத்தில் தாங்கள் செய்யும் பாவம் தவறானது என்பதையும் அறிந்திருக்கிறார்கள்.

சபையிலே உண்மையில்லாதவர்கள் தாங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவோம் என்று கற்பனை செய்து கொள்ளுகிறார்கள்.

வெளி 3:14 லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;

வெளி 3:15 உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.

வெளி 3:16 இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.

  • உண்மையில்லாத லவோதிக்கேயா சபையார் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

தேவன் தம்மை ஏற்றுக் கொள்ளும்படியான நன்மை எதுவோ அவற்றை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

ஆதியாகமம் 4:5 காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது.

ஆதியாகமம் 4:6 அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?

ஆதியாகமம் 4:7 நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.

நம்முடைய இருதயத்தில் நாம் நீதியாய் இல்லை என்று அறிந்தோமானால் நாம் எது நல்லதோ சரியானதோ அவற்றை நாம் செய்ய வேண்டும்.

1யோவான் 3:7 பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.

எல்லா மனிதரும் தங்களது இருதயத்தின் பாவத்தை தேவன் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பதை அறிந்திருக்கிறார்கள்.

தேவன் தங்களோடு இல்லாதபோதும் தங்களோடு இருப்பதாக அநேகர் நினைத்து கொள்ளுகிறார்கள்.

நியாயாதிபதிகள் 16:20 அப்பொழுது அவள்: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்.

  • ஒரு ஸ்திரீயின் மீது சிம்சோன் வைத்த நேசம் அவர் பெரிய தவறுகள் செய்யும்படியான காரியத்தை கொண்டு வந்தது.
  • பெலிஸ்தியர்களில் யார் ஒருவரையும் நம்ப கூடாது என்பதை சிம்சோன் அறிந்து வைத்து இருந்தது நல்லது தான் ஆனால் அந்த ஸ்திரீயின் மீது அவர் கொண்ட நேசம் அவர் கண்களை குருடாக்கினது.

ஒரு ஸ்திரீயின் மீது சிம்சோன் கொண்ட நேசம் தேவன் அவரை விட்டு விலகும்படியான பலம் வாய்ந்த காரணமாய் இருந்தது.

நியாயாதிபதிகள் 16:15 அப்பொழுது அவள் அவனைப் பார்த்து: உன் இருதயம் என்னோடு இராதிருக்க, உன்னைச் சிநேகிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நீ இந்த மூன்று விசையும் என்னைப் பரியாசம் பண்ணினாய் அல்லவா, உன்னுடைய மகாபலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று எனக்குச் சொல்லாமற்போனாயே என்று சொல்லி,

தேவன் அவரோடு இல்லாத போது சிம்சோன் தன்னுடன் தேவன் இருப்பதாக மிகவும் உறுதியான நம்பிக்கையுள்ளவராக இருந்தார்.

நியாயாதிபதிகள் 16:20 அப்பொழுது அவள்: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்.

மனிதன் தன்னை குறித்து பண்ணிக் கொள்ளுகிற தீர்ப்பை கர்த்தர் ஏற்றுக் கொள்ளுகிறதில்லை.

நீதிமொழிகள் 16:2 மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.

பரிசேயர் கிறிஸ்துவை கொல்ல வேண்டும் என்று நினைத்த போது  அவர்கள் நினைவுகளில்  சரியானதை செய்கிறோம் என்று நினைத்தார்கள்.

யோவான் 16:2 அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்.

யோவான் 16:3 அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்.

யூதர்கள் தேவனை அறிந்து இருக்கிறோம் நினைத்தார்கள்.

யோவான் 8:19 அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார்.

சமாரிய ஸ்திரீ தனது ஆராதனை ஏற்றுக் கொள்ளப்படுவதாக நினைத்தாள். ஆனால் அந்த ஆராதனை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

யோவான் 4:21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.

யோவான் 4:22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது.

  • அவள் பழைய ஏற்பாட்டு வசனங்களை படித்திருப்பாளானால் சமாரியாவில் தான் செய்த ஆராதனையை தேவன் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதை அறிந்திருப்பாள்.
  • அவள் யூதர்களையும் தங்களுடைய ஜனங்களை பற்றி வேதத்தில் கூறுவதை குறிப்பிட்டாள்.

அவள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுது கொள்ள வேண்டும் என்று போதிப்பட்டு இருப்பதை அறிந்து இருந்தாள்.

யோவான் 4:20 எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள்.

யூதர்கள் நினைவில் தேவன் அவர்களை ஏற்றுக் கொள்ளுவார் என்பது அனால் அவர்கள் தவறு செய்திருந்தார்கள்.

ரோமர் 10:1 சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது.

ரோமர் 10:2 தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக்குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல.

ரோமர் 10:3 எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.

  • தங்களது வழிகாட்டிகள் மீது அவர்கள் நம்பிக்கை இருந்தது ஆனால் வேதத்தின் மீது நம்பிக்கை இல்லை.

ரோமபுரியின் சபையில் உள்ள கள்ள போதகன் தேவனுடைய பார்வையில் தான் சரியாய் இருப்பதாக நம்பிக் கொண்டு இருந்தார்.

ரோமர் 2:17 நீ யூதனென்று பெயர்பெற்று, நியாயப்பிரமாணத்தின்மேல் பற்றுதலாயிருந்து, தேவனைக்குறித்து மேன்மை பாராட்டி,

ரோமர் 2:18 நியாயப்பிரமாணத்தினால் உபதேசிக்கப்பட்டவனாய், அவருடைய சித்தத்தை அறிந்து, நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கிறாயே.

ரோமர் 2:19 நீ உன்னைக் குருடருக்கு வழிகாட்டியாகவும், அந்தகாரத்திலுள்ளவர்களுக்கு வெளிச்சமாகவும்,

ரோமர் 2:20 பேதைகளுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு உபாத்தியாயனாகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் எண்ணுகிறாயே.

ரோமர் 2:21 இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவு செய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா?

ரோமர் 2:22 விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா?

ரோமர் 2:23 நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா?

ரோமர் 2:24 எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே.

நாம் தேவனுக்கு ஏற்ற கிரியைகளை செய்யும் போது தேவன் அதை ஏற்றுக் கொள்ளுகிறார்.

ரோமர் 12:2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

  • தேவனுடைய பார்வையில் எது நல்லது எதை தேவன் ஏற்றுக் கொள்ளுகிறார் என்பதை வேத வாக்கியங்களை கொண்டு கண்டுபிடிக்க வேண்டும்.

மோசேயின் நாளில் இருந்த இஸ்ரவேலின் பிள்ளைகள் தங்கள் தேவனுடைய பார்வையில் சரியானதை செய்யும் படி போதிக்கப்பட்டார்கள்.

உபாகமம் 12:8 இங்கே இந்நாளில் நாம் அவனவன் தன் தன் பார்வைக்குச் சரியானதையெல்லாம் செய்கிறதுபோல நீங்கள் செய்யாதிருப்பீர்களாக.

ஆனால் வாக்குத்தத்தம் பண்ணின தேசத்திற்கு அவர்களை தேவன் கொண்டு வந்த பிறகும் அவர்கள் அதையே செய்தார்கள்.

நியாயாதிபதிகள் 17:6 அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை, அவனவன் தன் தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.

தாவீது தனது பார்வைக்கு சரியானதை அல்ல தேவனுடைய பார்வையில் சரியானதை செய்தார்.

1இராஜாக்கள் 14:8 நான் ராஜ்யபாரத்தைத் தாவீது வம்சத்தாரின் கையிலிருந்து பிடுங்கி உனக்குக் கொடுத்தேன்; ஆனாலும் என் கற்பனைகளைக் கைக்கொண்டு, என் பார்வைக்குச் செம்மையானதையே செய்ய, தன் முழு இருதயத்தோடும் என்னைப் பின்பற்றின என் தாசனாகிய தாவீதைப்போல நீ இராமல்,

இயேசு கிறிஸ்து தேவனை பிரியப்படுத்த அவருக்கு பிரியமான எல்லாவற்றையும் எப்போதும் செய்தார் தேவன் அவரை ஏற்றுக் கொண்டார்.

யோவான் 8:29 என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார்.

ஏனோக் தேவன் என்ன சொன்னாரோ அதை எப்போதும் செய்து தேவனை பிரியப்படுத்தினார் தேவன் அவரை ஏற்றுக் கொண்டார்.

எபிரெயர் 11:5 விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சி பெற்றான்.

நம்முடைய இருதயம் நம்மை குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால் தேவன் நமது ஜெபத்தை கேட்பார்.

1யோவான் 3:20 நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.

1யோவான் 3:21 பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து,

1யோவான் 3:22 அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.

கிறிஸ்துவினால் மாத்திரம் இரட்சிப்பு என்பதை ஒவ்வொரு மனிதனும் அறிந்து கொள்ள வேண்டும்.

இரட்சிப்பின் வழியை இயேசு கிறிஸ்து வந்து நமக்கு காண்பித்துள்ளார்.

யோவான் 8:24 ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.

கிறிஸ்துவுக்கு வெளியே இரட்சிப்பு இல்லை

அப்போஸ்தலர் 4:12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.

வானத்திலேயும் பூமியிலேயும் சகல அதிகாரமும் இயேசு உடையவராய் இருக்கிறார்.

இயேசு இல்லாமல் யார் ஒருவரும் நித்திய இரட்சிப்பை அடைய முடியாது.

பழைய ஏற்பாட்டில் விருத்த சேதனம் இல்லாதவர்கள் தேவனால் இரட்சிக்கப்பட்டது போல புதிய ஏற்பாட்டிலும் அங்கத்தினர் அல்லாதவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று விவாதிக்கிறார்கள்.

ரோமர் 2:26 மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்துக்கேற்ற நீதிகளைக் கைக்கொண்டால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை விருத்தசேதனம் என்றெண்ணப்படுமல்லவா?

ரோமர் 2:27 சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாயிருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாயிருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாயிருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானல்லவா?

ரோமர் 2:28 ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல.

ரோமர் 2:29 உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.

  • தேவனுடைய பிரமாணத்தை கைக்கொண்டால் ஞானஸ்நானம் பெறமால் இரட்சிக்கப்படக்கூடும் என்று விவாதிக்கிறார்கள்.
  • பழைய ஏற்பாட்டில் அவர்கள் ஒருவேளை சரியாக இருக்கலாம் ஆனால் புதிய ஏற்பாட்டில் அப்படி இல்லை.

இயேசு கிறிஸ்துவை இந்த மனிதர்கள் கர்த்தாவே என்கிறார்கள் ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் உபதேசங்களுக்கு செவி கொடுப்பதில்லை.

மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

சிலுவைக்கு பிறகு பிரமாணம் மாற்றப்பட்டது.

அப்போஸ்தலர் 17:30 அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.

  • சிலுவைக்கு பிறகு பிரமாணம் மாற்றப்பட்டதினால் தான் தேவன் எங்கும் உள்ள மனுஷரெல்லாரையும் மனந்திரும்பும்படி கட்டளையிட்டு இருக்கிறார்.

கிறிஸ்து இல்லாமல் இன்றைக்கு இரட்சிப்பு இல்லை.

எபேசியர் 2:11 ஆனபடியினால் முன்னே மாம்சத்தின்படி புறஜாதியாராயிருந்து, மாம்சத்தில் கையினாலே செய்யப்படுகிற விருத்தசேதனமுடையவர்களால் விருத்தசேதனமில்லாதவர்களென்னப்பட்ட நீங்கள்,

எபேசியர் 2:12 அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள்.

எபேசியர் 2:13 முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.

அநேகர் இரட்சிக்கப்பட்டதாக விசுவாசிக்கிறார்கள். ஆனால் கிறிஸ்துவுக்குள் இருப்பது என்பதை பற்றி அறியாமல் இருக்கிறார்கள்.

கலாத்தியர் 3:27 ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.

கிறிஸ்துவின் ஆவிக்குரிய சரீரத்தில் கொரிந்து சபையார் உள்ளார்கள்.

1கொரிந்தியர் 12:18 தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.

கொரிந்தியர்கள் ஆலயத்தில் உள்ளார்கள். அதே வேளையில் கிறிஸ்துவின் சரீரத்திலும் உள்ளார்கள்.

1கொரிந்தியர் 3:16 நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?

1கொரிந்தியர் 12:27 நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.

இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தில் கொரிந்தியர்கள் எப்படி இணைந்தார்கள்?

கொரிந்தியர்கள் கிறிஸ்துவின் சபையில் எப்படி இருந்தார்கள்.

எபேசியர் 1:22 எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,

எபேசியர் 1:23 எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.

கிறிஸ்துவின் சபையில் நாம் சேர்வது எப்படி?

நாம் கிறிஸ்துவின் சரீரத்தில் எப்படி சேர்க்கப்படுகிறோமோ அதே போல் தான் கிறிஸ்துவின் சபையிலும் பிரவேசிக்கிறோம்.

இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தின் இரட்சகராக இருக்கிறார்.

எபேசியர் 5:23 கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.

தேவனுடைய ஆவிக்குரிய ஆலயத்தில் கொரிந்தியர்கள் உள்ளார்கள்.

1கொரிந்தியர் 3:16 நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?

தேவனுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் தேவனுடைய ஆலயத்தில் உள்ளார்கள்.

எபேசியர் 2:20 அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசு கிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;

எபேசியர் 2:21 அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது;

எபேசியர் 2:22 அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக் கட்டப்பட்டு வருகிறீர்கள்.

இரட்சிக்கப்பட்டவர்களே தேவனுடைய குடும்பத்திலும் தேவனுடைய ஆலயத்திலும் இருக்கிறார்கள்.

எபேசியர் 2:19 ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,

கிறிஸ்துவின் சபையில் இல்லாதவர்களை பிதா அழித்துப்போடுவார்.

மத்தேயு 15:13 அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.

தேவனுடைய குடும்பத்தில் இல்லாதபோது நாம் பரலோகம் போக கூடுமா?

எபிரெயர் 12:8 எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.

இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் அவசியம் இல்லை என்று அநேகர் விவாதிக்கிறார்கள்.

தேவனுடைய குடும்பத்தில் நீங்கள் இருக்கிறீர்களா? அப்படியானல் அதற்குள் நீங்கள் எப்படி பிரவேசித்தீர்கள்?

கிறிஸ்துவுக்குள் நீங்கள் இருக்கிறீர்களா? அவருடைய சபைக்குள் இருக்கிறீர்களா? அப்படியானால் அதற்குள் நீங்கள் எப்படி பிரவேசித்தீர்கள்?

கிறிஸ்துவின் ஆவிக்குரிய சரீரத்தில் நீங்கள் இருக்கிறீர்களா? அப்படியானல் அதற்குள் நீங்கள் எப்படி பிரவேசித்தீர்கள்?

1கொரிந்தியர் 12:13 நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME