நித்தியமான கீழ்ப்படிதல்
தேவன் நம்மை நித்தியமான கீழ்ப்படிதலுக்குத் தான் அழைத்து இருக்கிறார்.
ஏதோ கிறிஸ்தவர்களாக கொஞ்ச காலம் இருந்தோம் என்பது கிறிஸ்தவ வாழ்க்கை அல்ல.
நாம் கிறிஸ்துவின் வருகைபரியந்தம் அல்லது நம்முடைய மரணபரியந்தம் அவருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டு இருக்கிறார்.
நாம் கிறிஸ்துவின் சீஷர்களாய் இருக்கிறபடியால் தொடர்ந்து நாம் குருவாகிய அவருக்கு கீழ்ப்படிய வேண்டும்.
கிறிஸ்துவின் காலத்தில் இருந்த சீஷர்களுக்கு ராஜ்யத்தை அறிவிக்கும்படி பெரிய வல்லமை அனுப்பப்பட்டிருந்தது.
லூக்கா 10:17 பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.
ஆனால் ஸ்கேவாவின் ஏழு குமாரர்களுக்கு இது மிக நல்ல வாய்ப்பாக இல்லை.
அப்போஸ்தலர் 19:14 பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் ஓர் யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள்.
அப்போஸ்தலர் 19:15 பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி,
அப்போஸ்தலர் 19:16 பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள்.
இயேசு தம்முடைய சீஷர்களிடத்தில் சந்தோஷப்படாதிருங்கள் என்று சொன்னது ஏன்?
லூக்கா 10:20 ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.
- கட்டாயமான கீழ்ப்படிதல் சந்தோஷமாக இருக்கிறதில்லை.
- கொடுங்கோல் ஆட்சியாளர் மாத்திரமே கட்டாயமான கீழ்ப்படிதலுக்காக சந்தோஷப்படுவான்.
- பரலோகத்தின் தேவன் கொடுங்கோல் ஆட்சியாளர் அல்ல.
- எந்த தகப்பனும் பிள்ளைகள் தனக்கு அன்பினால் மனப்பூர்வமாய் கீழ்ப்படிய வேண்டும் என்று விரும்புவான்.
- மனப்பூர்வமாக கீழ்ப்படியாத பிள்ளைகளை கட்டாயமாக கீழ்ப்படியபண்ணுவதை தவிர அந்த தகப்பனுக்கு வேறு வாய்ப்பு இல்லை. அப்படி செய்ய அவன் விரும்புகிறதில்லை.
- நம்முடைய நித்தியமான பிதாவின் நோக்கம் நித்தியத்திற்கு ஏதுவானது அவர் நம்மிடத்தில் அன்போடு கீழ்ப்படிவதை தான் அவர் விரும்புகிறார்.
யாரெல்லாம் கீழ்ப்படிதலை தெரிந்துக் கொள்ளுகிறார்கள் என்று தேடி பிதா அவர்களிடம் துவங்குகிறார்.
யார் தேவனை அன்பு கூறுகிறார் என்பதின் அடையாளத்தின் துவக்கம் என்னவென்றால் தேவன் என்ன விரும்புகிறார் என்பதை அவன் தேட துவங்குவதாக இருக்கிறது.
சங்கீதம் 53:2 தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
ஒரு ராஜாவிற்கு கீழ்ப்படியும்படி இஸ்ரவேலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார் கள்.
1சாமுவேல் 8:1 சாமுவேல் முதிர்வயதானபோது, தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான்.
1சாமுவேல் 8:2 அவனுடைய மூத்தகுமாரனுக்குப் பெயர் யோவேல், இளையவனுக்குப் பெயர் அபியா; அவர்கள் பெயெர்செபாவிலே நியாயாதிபதிகளாயிருந்தார்கள்.
1சாமுவேல் 8:3 ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.
1சாமுவேல் 8:4 அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலினிடத்தில் வந்து:
1சாமுவேல் 8:5 இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்.
ராஜாவிற்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதை எல்லா இஸ்ரவேலரும் கற்றுக் கொண்டார்கள்.
1சாமுவேல் 8:9 இப்போதும் அவர்கள் சொல்லைக் கேள்; ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார்.
1சாமுவேல் 8:10 அப்பொழுது சாமுவேல், ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட ஜனங்களுக்குக் கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் சொல்லி:
1சாமுவேல் 8:11 உங்களை ஆளும் ராஜாவின் காரியம் என்னவென்றால், தன் ரதத்திற்கு முன் ஓடும்படி அவன் உங்கள் குமாரரை எடுத்து, தன் ரதசாரதிகளாகவும் தன் குதிரை வீரராகவும் வைத்துக்கொள்ளுவான்.
1சாமுவேல் 8:12 ஆயிரம் பேருக்கும் ஐம்பது பேருக்கும் தலைவராகவும், தன் நிலத்தை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், தன் யுத்த ஆயுதங்களையும் தன் ரதங்களின் பணிமுட்டுகளையும் பண்ணுகிறவர்களாகவும், அவர்களை வைத்துக்கொள்ளுவான்.
1சாமுவேல் 8:13 உங்கள் குமாரத்திகளைப் பரிமளதைலம் செய்கிறவர்களாகவும், சமையல் பண்ணுகிறவர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான்.
1சாமுவேல் 8:14 உங்கள் வயல்களிலும், உங்கள் திராட்சத்தோட்டங்களிலும், உங்கள் ஒலிவத்தோப்புகளிலும், நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான்.
1சாமுவேல் 8:15 உங்கள் தானியத்திலும் உங்கள் திராட்சப்பலனிலும் தசமபாகம் வாங்கி, தன் பிரதானிகளுக்கும் தன் சேவகர்களுக்கும் கொடுப்பான்.
1சாமுவேல் 8:16 உங்கள் வேலைக்காரரையும், உங்கள் வேலைக்காரிகளையும், உங்களில் திறமையான வாலிபரையும், உங்கள் கழுதைகளையும் எடுத்து தன்னுடைய வேலைக்கு வைத்துக்கொள்ளுவான்.
1சாமுவேல் 8:17 உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள்.
1சாமுவேல் 8:18 நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் கர்த்தர் அந்நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான்.
1சாமுவேல் 8:19 ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல்: அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்.
- இயேசுவை மேசியா(கிறிஸ்து) என்று விசுவாசிப்பது நமக்கு மேலாக ஆளும்படி ஒரு ராஜாவாக அவரை தெரிந்து கொள்ளுவது என்பது அர்த்தமாக இருக்கிறது.
- மேசியா+கிறிஸ்து =அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவர்+ ராஜா
கிறிஸ்தவர்களாக இருப்பது என்பதின் அர்த்தம் குருவை உடையவர்களாக இருப்பது என்பது தான் என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.
மத்தேயு 23:8 நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.
மத்தேயு 23:9 பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
மத்தேயு 23:10 நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.
பிதா ஒருவரை எழும்பப்பண்ணி தாவீதின் சிங்காசனத்தில் அமரச் செய்வதாக அவர் வாக்குத்தத்தம் செய்தார்.
அப்போஸ்தலர் 2:30 அவன் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியால்,
பிதா என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுதாக வாக்குத்தத்தம் செய்துள்ளார்.
தானியேல் 2:44 அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.
- யூதர்கள் அந்த ராஜ்யத்தை பற்றி அறிந்து அதில் தாங்களும் ஒரு பாகமாக விரும்பினார்கள்.
இயேசுவின் அதிகாரத்தின் கீழ் தன்னுடைய இரண்டு பிள்ளைகளும் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்று சகோதரி செபேதேயு விரும்பினாள்.
மத்தேயு 20:21 அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலதுபாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள்செய்யவேண்டும் என்றாள்.
மத்தேயு 20:22 இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள்.
மத்தேயு 20:23 அவர் அவர்களை நோக்கி: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலதுபாரிசத்திலும் என் இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
இன்றைக்கு இயேசு கிறிஸ்து ராஜாவாக இருந்தும் எந்த மனிதனும் அவருக்கு கீழ்ப்படியும்படி கட்டாயப்படுத்தப்படுகிறதில்லை.
இன்றைக்கு எல்லா மனிதர்களும் இயேசுவை கர்த்தர் என்றும் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும்.
மத்தேயு 28:18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
உலகத்தில் உள்ள எல்லா அரசாங்கங்களையும் இயேசு ஆளுகிறார்.
ரோமர் 13:1 எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.
ரோமர் 13:2 ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.
ரோமர் 13:3 மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.
ரோமர் 13:4 உனக்கு நன்மை உண்டாகும் பொருட்டு, அவன் தேவஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவஊழியக்காரனாயிருக்கிறானே.
ரோமர் 13:5 ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படியவேண்டும்.
ரோமர் 13:6 இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவஊழியக்காரராயிருக்கிறார்களே.
ரோமர் 13:7 ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.
கர்த்தர் என்றால் எல்லா முழங்கால்களும் முடங்கும்படி கட்டாயப்படுத்தப்படும்.
ரோமர் 14:11 அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.
- நியாயத்தீர்ப்பின் நாளிலே எல்லா முழங்கால்களும் கர்த்தருக்கு முன்பாக முடங்கும்.
இயேசுவின் ராஜ்யத்தில் ஒவ்வொரு மனிதனும் பிரவேசிக்க அல்லது பிரவேசியாமல் இருக்கும்படியான தெரிந்தெடுக்கும் வாய்ப்பு உள்ளது.
மாற்கு 8:34 பின்பு அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
தேவன் மனிதர்களுக்கு தம்முடைய பிள்ளைகளாகும்படி அதிகாரம் கொடுக்கிறார். ஆனால் கட்டாயமாக அல்ல.
யோவான் 1:10 அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.
யோவான் 1:11 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
யோவான் 1:12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
யோவான் 1:13 அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
யார் கீழ்ப்படிதலை தெரிந்து கொள்ளவில்லையோ அவர்கள் கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிவதை நேரடியாக புறக்கணிக்கிறார்கள்.
எபிரெயர் 1:1 பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன்,
எபிரெயர் 1:2 இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.
மனிதர்களுக்கு தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் உள்ளது என்பதை காண்பிக்க இயேசு ஒரு உவமையை சொல்லியிருக்கிறார்.
லூக்கா 20:9 பின்பு அவர் ஜனங்களுக்குச் சொல்லத்தொடங்கின உவமையாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைத் தோட்டக்காரருக்குக் குத்தகையாக விட்டு, நெடுநாளாகப் புறத்தேசத்துக்குப் போயிருந்தான்.
லூக்கா 20:10 அந்தத் தோட்டக்காரர் திராட்சத்தோட்டத்தின் கனிகளில் தன் பாகத்தைக் கொடுத்தனுப்பும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அந்தத் தோட்டக்காரர் அவனை அடித்து, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.
லூக்கா 20:11 பின்பு அவன் வேறொரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.
லூக்கா 20:12 அவன் மூன்றாந்தரமும் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் காயப்படுத்தி, துரத்திவிட்டார்கள்.
லூக்கா 20:13 அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினால், அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி, அவனை அனுப்பினான்.
லூக்கா 20:14 தோட்டக்காரர் அவனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, சுதந்தரம் நம்முடையதாகும்படிக்கு இவனைக் கொல்லுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு,
லூக்கா 20:15 அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளி, கொன்றுபோட்டார்கள். இப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்னசெய்வான்?
லூக்கா 20:16 அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை வேறு தோட்டக்காரரிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார். அவர்கள் அதைக்கேட்டு, அப்படியாகாதிருப்பதாக என்றார்கள்.
லூக்கா 20:17 அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத்தென்ன?
லூக்கா 20:18 அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்றார்.
- நமக்கு தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் இருக்கிறது. அந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்தவில்லையென்றால் தேவன் அதற்கான தண்டனையை தருவார்.
- தேவன் நாம் அவருக்கு கீழ்ப்படிவதற்கு கட்டாயம் பண்ணுவதில்லை ஆனால் அவருக்கு நாம் மனப்பூர்வமாய் கீழ்ப்படிய வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்.
இயேசு ஒரு உவமையை சொல்லி அதிலே தன்மேல் ராஜாவாய் இராமல் புறக்கணித்த மனிதர்களின் முடிவை காண்பிக்கிறார்.
லூக்கா 19:12 பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்துக்குப் போகப் புறப்பட்டான்.
லூக்கா 19:13 புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்.
லூக்கா 19:14 அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள்மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்.
லூக்கா 19:15 அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.
இந்த சத்துருக்களுக்கு தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர்கள் அதை புறக்கணித்து அதற்கான பலனை பெற்றுக் கொண்டார்கள்.
லூக்கா 19:27 அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்.
- இப்பொழுது யார் ஒருவரும் இயேசுவுக்கு கீழ்ப்படியும்படி கட்டாயப்படுத்தப்படுகிறதில்லை ஆனால் நியாயத்தீர்ப்பின் நாளில் அவருக்கு கீழ்ப்படியும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள்.
யாரெல்லாம் தங்கள் ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.
சபையானது இயேவுக்கு முழுவதுமாக கீழ்ப்படியும்படி உற்சாகப்படுத்தப்படுகிறது.
எபேசியர் 5:24 ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.
மனைவியானவள் புருஷனுக்கு கீழ்ப்படியும்படி உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்.
எபேசியர் 5:22 மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்.
பிள்ளைகள் தங்களுடைய பெற்றோருக்கு மனப்பூர்வமாக கீழ்ப்படியும்படி உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்.
எபேசியர் 6:1 பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.
எபேசியர் 6:2 உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும்,
எபேசியர் 6:3 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.
எபேசியர் 6:4 பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.
பெற்றோர் தங்களுடைய பிள்ளைகள் கீழ்ப்படியும்படி உற்சாகப்படுத்தப்பட அடிக்க வேண்டி உள்ளது.
நீதிமொழிகள் 23:13 பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.
நீதிமொழிகள் 23:14 நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.
ஒருவனுக்கு புதிய வேலை கிடைக்கும் போது அவன் அவனுடைய எஜமானிற்கு கீழ்ப்படியும்படி ஒப்புக் கொள்ளுகிறார்.
1பேதுரு 2:18 வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள்.
தேவனுடைய பிள்ளைகள் மனப்பூர்வமாக கீழ்ப்படியும்படி உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்.
எபேசியர் 6:5 வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்து;
எபேசியர் 6:6 மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்.
எபேசியர் 6:7 அடிமையானவனானாலும், சுயாதீனமுள்ளவனானாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவானென்று அறிந்து,
எபேசியர் 6:8 மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள்.
தேவன் அவருடைய குமாரத்திகளுக்கு விசேஷித்த சோதனைகளை அளிக்கிறார்.
1தீமோத்தேயு 2:9 ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல்,
1தீமோத்தேயு 2:10 தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.
1தீமோத்தேயு 2:11 ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள்.
1தீமோத்தேயு 2:12 உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்.
1தீமோத்தேயு 2:13 என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.
1தீமோத்தேயு 2:14 மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.
1தீமோத்தேயு 2:15 அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.
பாலிய ஸ்திரீகளிடத்தில் முதிர்வயதுள்ள ஸ்திரீகள் மனப்பூர்வமாய் செய்கிறதற்கு வேலை இருக்கிறது.
தீத்து 2:3 முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறு பண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும்,
தீத்து 2:4 தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்குப் பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும்,
தீத்து 2:5தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு.
மூப்பருக்கு மாத்திரம் அல்ல ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கும் கீழ்ப்படிய வேண்டும்.
1பேதுரு 5:5 அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
நமது பிதா அவருக்கு கீழ்ப்படிய தேடும்படியான மிகவும் சிறப்பான பயிற்சியை நமக்கு அளிக்கிறா.
பிராந்திய சபையின் மற்றவர்களை பயிற்றுவிக்க அவர் உண்மையுள்ளவர்களை பயன்படுத்துகிறார்.
1கொரிந்தியர் 16:15 சகோதரரே, ஸ்தேவானுடைய வீட்டார் அகாயாநாட்டிலே முதற்பலனானவர்களென்றும், பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்திருக்கிறார்களென்றும் அறிந்திருக்கிறீர்களே.
1கொரிந்தியர் 16:16 இப்படிப்பட்டவர்களுக்கும், உடன்வேலையாட்களாய்ப் பிரயாசப்படுகிற மற்ற யாவருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்திருக்கவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
உலகத்தில் இருக்கும் போது தேவனுடைய கரத்தை கவனிக்கும்படி அவர் நம்மை உற்சாகப்படுத்துகிறார்.
எபிரெயர் 12:9 அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?
மனுஷனுடைய மிலாற்றினால் சாலோமோனை பயிற்றுவிப்பதாக அவர் வாக்குத்தத்தம் செய்துள்ளார்.
2 சாமுவேல் 7:14 நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்.
தேவன் சாலமோனை வாதிக்க மூன்று சத்துருக்களை எழுப்பினார்.
1இராஜாக்கள் 11:14 கர்த்தர் ஏதோமியனாகிய ஆதாத் என்னும் ஒரு விரோதியைச் சாலொமோனுக்கு எழுப்பினார்; இவன் ஏதோமிலிருந்த ராஜகுலமானவன்.
1இராஜாக்கள் 11:23 எலியாதாவின் குமாரனாகிய ரேசோன் என்னும் வேறொரு விரோதியை தேவன் எழுப்பினார்; இவன் தன் ஆண்டவனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜாவை விட்டு ஓடிப்போய்,
- இந்த சத்துருக்கள் எவ்விதமாக அவருக்கு உதவியாக இருந்தார்கள் என்பது நமக்கு ஒருவேலை தெரியாமல் இருக்கலாம். ஆனால் தேவனுடைய கரத்தினால் இவைகள் நடைபெற்றது என்று நாம் புரிந்துக் கொள்ளுகிறோம்.
தேவன் மூன்றாவது சத்துருவையும் எழுப்பினார் அவர் தான் அடுத்து வந்த 1000 ஆண்டுகளுக்கு யூதாவிற்கு சத்துருவாக இருந்தார்.
1இராஜாக்கள் 11:26 சேரேதா ஊரிலுள்ள எப்பிராயீம் மனுஷனாகிய நேபாத்தின் குமாரன் யெரொபெயாம் என்னும் சாலொமோனின் ஊழியக்காரனும் ராஜாவுக்கு விரோதமாய்க் கையெடுத்தான்; அவனுடைய தாய் செரூகாள் என்னும் பேருள்ள ஒரு விதவை.
- யெரொபெயம் ஏற்படுத்தின விக்கிரக ஆராதனை அவருக்கு பின்பு யூத ஜனங்களையே தேவன் அழித்துப் போடும் அளவுக்கு மோசமாக இருந்தது.
இன்னும் அதிகமாக நமது எஜமானிற்கு நாம் கீழ்ப்படியும்படி பயிற்றுவிக்கிறார்.
மத்தேயு 23:8 நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.
இயேசு தம்முடைய சீஷர்களை தனது அதிகாரத்திற்கு கீழ்ப்படிந்து மற்ற எல்லா அதிகாரங்களையும் புறக்கணிக்க பயிற்றுவிக்கிறார்.
மத்தேயு 23:10 நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.
ஓரே எஜமானிற்காக எல்லாவற்றையும் வெறுக்கும்படி நம்மை பயிற்றுவிக்கிறார்
லூக்கா 14:26 யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனைபயிற்றுவிக்கிறார். வியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
லூக்கா 14:27 தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
லூக்கா 14:28 உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து,
லூக்கா 14:29 அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்:
லூக்கா 14:30 இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம்பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ?
லூக்கா 14:31 அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?
லூக்கா 14:32 கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.
லூக்கா 14:33 அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
கிறிஸ்து ஏற்படுத்தின அதிகாரங்களுக்கு நாம் கீழ்ப்படியும்படியாக பயிற்றுவிக்கப்படுகிறோம்
கொலோசெயர் 3:22 வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள்.
கொலோசெயர் 3:23 நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து,
கொலோசெயர் 3:24 எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.
தேவனுக்கு மாத்திரம் கீழ்ப்படியும்படி உலகத்தில் உள்ள மற்ற எல்லாவற்றையும் விட்டு திரும்பும்படி அவர் நம்மை பயிற்றுவிக்கிறார்.
யாக்கோபு 4:1 உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர்செய்கிற இச்சைகளினாலல்லவா?
யாக்கோபு 4:2 நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.
யாக்கோபு 4:3 நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.
யாக்கோபு 4:4 விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.
- கிறிஸ்துவை மாத்திரம் சேவிக்கிறதினால் மற்றும் ஒன்றும்(ஒருவரும்) நம்மோடு வருகிறதில்லை.
இயேசு கிறிஸ்து இந்த வழியில் தான் பயிற்றுவிக்கப்பட்டார்.
யோவான் 5:19 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.
இயேசு கிறிஸ்து மனப்பூர்வமாக பாடுபட பயிற்றுவிக்கப்பட்டார். எபிரெயர் 5:8 அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,
எபிரெயர் 5:9 தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி,
இயேசு கிறிஸ்து தன்னுடைய பிதாவிற்கு முழுவதுமாக கீழ்ப்படிய கற்றுக் கொள்ள தன்னுடைய சொந்த விருப்பத்தை எல்லாம் விட்டுவிட்டார்.
ரோமர் 15:1 அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.
ரோமர் 15:2 நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.
ரோமர் 15:3 கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்.
நாம் பவுலை பின்பற்றும்படி பிதா நமக்கு கட்டளையிட்டுள்ளார்.
ரோமர் 7:18 அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை.
பவுல் தேவனுக்கு கீழ்ப்படியும்படி தனது மாம்ச இச்சைகளுக்கு விரோதமாக போராடினார்.
1கொரிந்தியர் 9:27 மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.
பிதா நம்மை அன்போடு கீழ்ப்படியும்படி நமக்கு பயிற்சி அளிக்கிறார்
1கொரிந்தியர் 13:1 நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் அளிக்கிறார். அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.
1கொரிந்தியர் 13:2 நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.
1கொரிந்தியர் 13:3 எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.
1கொரிந்தியர் 13:4 அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,
1கொரிந்தியர் 13:5 அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,
1கொரிந்தியர் 13:6 அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
1கொரிந்தியர் 13:7 சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
1கொரிந்தியர் 13:8 அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்.
பிசாசுகளும் தேவனை விசுவாசிக்கிறது ஆனால் தேவனை அவைகளை ஏற்றுக் கொள்ளுகிறதில்லை.
யாக்கோபு 2:19 தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.
பயத்தினால் கீழ்ப்படிய நாம் கற்றிருந்தால் அது போதுமானது அல்ல.
லூக்கா 17:5 அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்.
லூக்கா 17:6 அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
லூக்கா 17:7 உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தைமேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ?
லூக்கா 17:8 நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம்பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின் நீ புசித்துக்குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா?
லூக்கா 17:9 தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே.
லூக்கா 17:10 அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.
தேவனை சேவிப்பதற்கு மனப்பூர்வமான மனது இருக்க வேண்டும்.
2கொரிந்தியர் 8:10 இதைக்குறித்து என் யோசனையை உங்களுக்கு அறிவிக்கிறேன்; இதைச் செய்கிறதற்கு மாத்திரமல்ல, செய்யவேண்டுமென்று உற்சாகப்படுகிறதற்கும் ஒரு வருஷமாய் ஆரம்பம்பண்ணின உங்களுக்கு இது தகுதியாயிருக்கும்.
2கொரிந்தியர் 8:11 ஆகையால் அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக.
2கொரிந்தியர் 8:12 ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்.
தேவன் கொடுத்த எல்லா கட்டளைகளுக்கு நாம் அன்போடு கீழ்ப்படிய விரும்பி நம்மை பயிற்றுவிக்கிறார்.
யாக்கோபு 4:17 ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.
இப்பொழுதும் கூட இயேசு தன்னுடைய பிதாவை அன்பினால் கீழ்ப்படியும் தகுதியுள்ளவராய் தான் இருக்கிறார்.
1கொரிந்தியர் 15:24 அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.
1கொரிந்தியர் 15:25 எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகை செய்யவேண்டியது.
1கொரிந்தியர் 15:26 பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.
1கொரிந்தியர் 15:27 சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது.
1கொரிந்தியர் 15:28 சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.
- எந்த மனுஷனும் எப்பொழுதும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்கிற நமது கர்த்தர் நமக்கு அடிச்சுவடை கொடுத்துள்ளார்.
நமது பிதா அவருடைய குமாரனுக்கு ஒரு மணவாட்டி வேண்டும் என்று விரும்புகிறார்.
கிறிஸ்துவின் மணவாட்டி தன்னை ஆயத்தமுள்ளவளாக்கிக் கொள்ள வேண்டும்.
வெளி 21:2 யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
வெளி 19:7 நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.
வெளி 19:8 சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.
பிதாவாகிய தேவன் தன்னை தவிர மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி அவரை இவ்விதமாக கனப்படுத்தியுள்ளார்.
கொலோசெயர் 1:16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
இப்போதும் நமது பிதா மணவாளனை கனப்படுத்த கிறார்.
சங்கீதம் 110:1 கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.
சங்கீதம் 110:2 கர்த்தர் சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்; நீர் உம்முடைய சத்துருக்களின் நடுவே ஆளுகைசெய்யும்.
சங்கீதம் 110:3 உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமுமுள்ளவர்களாயிருப்பார்கள்; விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உம்முடைய யௌவன ஜனம் உமக்குப் பிறக்கும்.
பிதா அவருடைய(இயேசு கிறிஸ்துவின்) சத்துருக்களை எல்லாம் அவருடைய பாதத்திற்கு கீழாக்கி போடுகிறார் என்று நமது கர்த்தர் எதிர்பார்க்கிறார்.
எபிரெயர் 10:12 இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து,
எபிரெயர் 10:13 இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார்.
- யார் இயேசுவை பின்பற்ற போகிறார்கள்?
- யார் அவருடைய மணவாட்டியில் ஒரு பாகமாக இருக்க போகிறார்கள்?
- யார் என்றென்றைக்கும் இயேசுவுக்கு கீழ்ப்படிந்து அவருக்காக மாத்திரம் பிழைத்திருக்க போகிறார்கள்?