கிறிஸ்து ஏன் சிலுவையில் மரித்தார்?

கிறிஸ்து ஏன் சிலுவையில் மரித்தார்?

கிறிஸ்து ஏன் சிலுவைக்கு போனார் என்பதற்கு வேத வாக்கியத்தில் அநேக பதில்கள் இருக்கிறது

கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்பது அநேகருடைய பெதுவான பதிலாக இருக்கிறது, இது உண்மைதான் ஆனாலும் இதுவே முழு பதில் அல்ல

தேவன் ஏன் சிலுவையை தெரிந்தெடுத்தார் என்பது பற்றி நாம் அதிகமாக புரிந்து கொள்ள வேண்டும்

அந்த சிலுவையில் நம்முடைய பிதா அநேக காரியங்களை நிறைவேற்றினார்

அவற்றில் சில சத்தியங்களை நாம் கற்றுக் கொள்ளுவோம்

இயேசு கிறிஸ்து பிதாவினிடத்தில் அன்பு கூர்ந்தார் என்பதை உலகம் அறிந்து கொள்ளுவதற்காக அவர் சிலுவைக்கு போனார்

Joh 14:28 நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.

Joh 14:29 இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்குமுன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன்.

Joh 14:30 இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.

Joh 14:31 நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.

இயேசு கிறிஸ்து தன்னுடைய அன்பு பிதாவிடம் இருந்தது என்பதை சிலுவையில் நிரூபித்தார்

அவருடைய பிதா அவருக்கு கட்டளை கொடுத்திருந்தார் அதை தான் அவர் செய்து முடித்தார்

நமக்கு மேலே அதிகாரமுள்ளவர்களை நாம் அன்பு கூறுகிறோம் என்பதை நாம் காண்பிக்க அவர்களுடைய கட்டளைகளை நாம் கைக்கொள்ள வேண்டும்

Joh 14:15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.

இயேசு கிறிஸ்து தன்னுடைய பிதாவிற்கு கீழ்ப்படிந்தார்

நம்முடைய அதிகாரி நமக்கு கொடுக்கும் கட்டளைகளுக்கு  கீழ்ப்படிவதின் மூலம் அன்பு கூறும் வழியை காண்பித்துள்ளார்

Joh 14:21 என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.

நாம் தேவனுடைய கட்டளைகளை கைக்கொள்ளுவதின் மூலம் நாம் தேவனிடத்தில் அன்பு கூறுகிறோம்

1Jn 5:3 நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.

தன்னுடைய பிதாவை அன்புகூறும் மிகச்சரியான வழி இது என்பதை இயேசு கிறிஸ்து நமக்கு காண்பித்துள்ளார்

Joh 15:10 நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.

பிதாவின் மீது மேலான அன்பு தனக்கிருந்ததை இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து காண்பித்துள்ளார்

Joh 15:13 ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.

இயேசு கிறிஸ்து தன்னுடைய பிதாவிற்காக சிலுவைக்கு போனார்

Luk 22:42 பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

  • என்னுடைய சித்தத்தின்படியல்ல என்று இயேசு கிறிஸ்து சொன்ன போது பிதாவின் சித்தத்திற்கு எதிரான சித்தம் இயேசு கிறிஸ்துவுக்கு அந்த சமயத்தில் இருந்தது
  • அவர் சிலுவைக்கு போக வேண்டும் என்பது பிதாவின் சித்தமாக இருந்தது

அந்த நேரத்தில் இயேசு கிறிஸ்துவுக்கு வேறு சித்தம் இருந்தது

Luk 22:43 அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.

Luk 22:44 அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.

Luk 22:45 அவர் ஜெபம்பண்ணி முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீஷரிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே நித்திரை பண்ணுகிறதைக் கண்டு:

  • சிலுவைக்கு போக கூடாது என்பது இந்த சமயத்தில் இயேசுவின் சோதனையாக இருந்தது

இதற்கு முன்பு இயேசு கிறிஸ்து சிலுவைக்கு போக முழு தீர்மானமுடையவராய் இருந்தார்

Joh 12:27 இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.

சிலுவைக்கு போவதற்கு அநேக மாதங்களுக்கு முன்பதாகவும் அவர் சிலுவையில் மரிப்பதற்கு ஆயத்தமுடையவராக தான் இருந்தார்

Mat 20:22 இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள்.

பிதா அனுமதி கொடாதிருந்தால் இயேசு சிலுவைக்கு போய் இருக்க கூடுமா?

Luk 22:42 பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

  • பிதாவின் சித்தம் இல்லாமல் இயேசு கிறிஸ்து சிலுவைக்கு போய் இருக்க முடியாது
  • இயேசு கிறிஸ்து சிலுவைக்கு போக வேண்டும் என்பதே பிதாவின் சித்தமாக இருந்தது

அந்த பாத்திரம் நீங்கும்படி பிதா அனுமதி கொடுத்திருந்தால் இயேசு நமக்காக மரித்திருக்க கூடுமா?

உயர்பட்சமாய் தன்னுடைய பிதாவிற்காக இயேசு கிறிஸ்து சிலுவைக்கு சென்றார்

பிதாவிற்காக இல்லாதிருந்தால் இயேசு கிறிஸ்து சிலுவைக்கு போய் இருக்க மாட்டார் என்பது இதில் தென்படுகிறது

அவர் தம்முடைய பிதாவிற்காக சிலுவைக்கு போனார்

Joh 15:10 நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.

இயேசு கிறிஸ்து யூதர்களுக்காக மரித்தார்

நியாயப்பிரமாணத்தினாலே யூதர்கள் சாபத்தின் கீழ் இருந்தார்கள்

Gal 3:10 நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.

Gal 3:11 நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.

Gal 3:12 நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.

Gal 3:13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.

அ)தன்னுடைய மரணத்தினாலே நியாயப்பிரமாணத்தை சிலுவையில் அறைந்தார்

Col 2:14 நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;

Col 2:15 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.

ஆ)கிறிஸ்துவின் மரணத்தினாலே யூதர்கள் நியாயப்பிரமாணத்திற்கு மரித்தவர்களானார்கள்

Rom 7:4 அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்.

பழைய ஏற்பாட்டு காலத்தில் இருந்தவர்களின் பாவங்களுக்காக இயேசு கிறிஸ்து மரித்தார்

Rom 3:25 தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும்,

Rom 3:26 கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்.

அவர்களுடைய மிருக பலிகள் ஒருபோதும் அவர்களுடைய பாவங்களை மன்னிக்கவில்லை

Heb 10:14 ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.

இயேசு கிறிஸ்து எல்லா மனுஷரையும் தம்மிடம் இழுத்துக் கொள்ளும்படி மரித்தார்

Joh 12:32 நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்.

Joh 12:33 தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார்.

எல்லா மனிதர்களும் மரித்திருக்கிறபடியால் எல்லாருக்காகவும் இயேசு கிறிஸ்து மரித்தார்

2Co 5:14 கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்;

2Co 5:15 பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.

அவர்கள் இரட்சிக்கப்பட்டாலும் இரட்சிக்கப்படாவிட்டாலும் அவர் எல்லாருக்காகவும் மரணத்தை ருசி பார்த்தார்

Heb 2:9 என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.

தன்னுடைய பிதாவின் மீது உள்ள அவருடைய அன்பை எல்லா மனிதர்களும் அறிந்து கொள்ளுவதற்காக இயேசு கிறிஸ்து சிலுவையிலே மரித்தார்

Joh 14:31 நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.

பேதுரு தான் மரிக்கப்போகிற மரணத்தினாலே தேவனை மகிமைப்படுத்துவார் என்றால் கிறிஸ்து மரித்த தன்னுடைய மரணத்தினாலே எவ்வளவு அதிகமாய் பிதாவை மகிமைப்படுத்தினார்?

Joh 21:18 நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைகட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய்; வேறொருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Joh 21:19 இன்னவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறானென்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனை நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார்.

மரித்தோர் மற்றும்  ஜீவனுள்ளோர் எல்லா மனிதருக்கும் ஆண்டவராயிருக்கும் பொருட்டு இயேசு கிறிஸ்து மரித்தார்

Rom 14:9 கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்.

பிசாசானவனை தன்னுடைய மரணத்தினாலே அழிக்கும்படிக்கு இயேசு கிறிஸ்து சிலுவையிலே மரித்தார்

Heb 2:14 ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,

சாத்தானுடைய அதிகாரத்திலிருந்து கிறிஸ்துவுக்கு முன் இருந்த உண்மையுள்ளவர்களை விடுவிக்கும் படி இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார்

Heb 2:15 ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.

மரண உபாதிகளின் கட்டை அவிழ்க்க இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார்

Act 2:24 தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.

இயேசு கிறிஸ்து தன்னுடைய சொந்த ஜனங்களுக்காக சிலுவையில் மரித்தார்

Joh 15:13 ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.

தேவனுடைய எல்லா பிள்ளைகளையும் ஒரே மந்தை தொழுவத்திற்குள் கூட்டிச் சேர்ப்பதற்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார்

Joh 11:50 ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான்.

Joh 11:51 இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும்,

Joh 11:52 அந்த ஜனங்களுக்காக மாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான்.

யூதர்கள் மற்றும் புறஜாதிகளை ஒப்புரவாக்கும்படி இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார்

Eph 2:16 பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.

தேவனோடு நம்மை ஒப்புரவாக்கும்படி இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார்

Rom 5:10 நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

அவபக்தியுள்ளவர்களை தன்னிடம் திரும்பும்படி இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார்

Rom 5:6 அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்.

தாம் கூட்டிச்சேர்க்கிறவர்களை சம்பாதித்துக் கொள்ளும்படி இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார்

Act 20:28 ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.

நாம் பின்பற்றும்படி மாதிரியை வைக்கதக்கதாக இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார்

1Pe 2:19 ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்.

1Pe 2:20 நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்.

1Pe 2:21 இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.

இயேசு கிறிஸ்து மாம்சத்தில் பாடுபட்டபடியால் நாமும் அப்படிபட்ட சிந்தையுள்ளவர்களாக இருக்க வேண்டும்

1Pe 4:1 இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்த சிந்தையானது நமக்கு இருக்க வேண்டிய மாதிரியாக இருக்கிறது

Php 2:5 கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;

Php 2:6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,

Php 2:7 தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.

Php 2:8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

இயேசு கிறிஸ்து மரித்ததினாலே நாம் பின்பற்ற வேண்டிய மிக உயர்வான மாதிரி நமக்கு இருக்கிறது

Joh 15:13 ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.

1Jn 3:16 அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்ததினாலே பிதாவின் மேலுள்ள அவருடைய அன்பை நாம் நினைவு கூற வேண்டும்

1Co 11:26 ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.

நாம் நித்திய சுதந்திரத்தை அடைந்து கொள்வதற்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார்

Heb 9:15 ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.

நாம் என்றென்றைக்கும் அவரோடு சேர்ந்து பிழைத்து இருக்கும்படியாக இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து இருக்கிறார்

1Th 5:10 நாம் விழித்திருப்பவர்களானாலும், நித்திரையடைந்தவர்களானாலும், தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே.

பிழைத்திருக்கிறவர்கள் இனி தங்களுக்கென்று பிழைத்திராமல் தங்களுக்காக மரித்து ஏழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி அவர் சிலுவையில் மரித்தார்

2Co 5:15 பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.

எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை சுதந்தரிக்கும் படி இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார்

Php 2:11 பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

பழைய ஏற்பாட்டு வேத வாக்கியங்களில் உள்ள தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றும்படி அவர் மரித்தார்

Mat 26:54 அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்.

Mat 26:56 ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார். அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.

Mat 27:35 அவரைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

Mar 15:28 அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதனாலே நிறைவேறிற்று.

Joh 19:28 அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.

Joh 19:36 அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது.

இயேசு கிறிஸ்து சிலுவையிலே மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்

Rom 5:8 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.

பரலோகத்திலுள்ளவைகள் பூலோகத்திலுள்ளவைகள் யாவையும் தமது மூலமாய் சமாதானத்தையும் ஒப்புரவாக்குதலையும் உண்டாக்கும்படி அவர் மரித்தார்

Col 1:20 அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.

Eph 1:9 காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று,

Eph 1:10 தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்.

வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கு கிறிஸ்து சிலுவையில் மரித்தார்

Php 2:10 இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,

சிலுவையானது பிதாவிடம் கிறிஸ்துவிற்கு உள்ள அன்பை உலகத்திற்கு காண்பிக்கிறது

Joh 12:31 இப்பொழுதே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்.

உலகத்தில் உள்ள இதுவரை அறியப்பட்ட எந்த அன்பைவிட இந்த அன்பு மிகவும் உன்னதமான அன்பாக இருக்கிறது

Joh 15:13 ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.

பிதா இயேசு கிறிஸ்துவை உலகத்திற்காக அனுப்பி அவருடைய அன்பை காண்பித்து இருக்கிறார்

Rom 5:8 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.

இந்த காரியங்களுக்காக உலகம் நியாயத்தீர்ப்பு நாளில் என்னவென்று பதில் அளிக்கும்?

நமக்கு இருக்க வேண்டிய கிறிஸ்துவின் அன்பை நமக்கு காண்பித்துள்ளார்

1Pe 2:19 ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்.

1Pe 2:20 நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்.

1Pe 2:21 இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.

1Pe 2:22 அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை;

1Pe 2:23 அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.

இந்த அன்பு இல்லாத போது நியாயத்தீர்ப்பு நாளில் நாம் என்ன பதில் சொல்லுவோம்?

பரலோகத்திலுள்ளவைகள் பூலோகத்திலுள்ளவைகள் யாவையும் ஒப்புரவாக்கிக் கொள்ளவும் அவருக்கு பிரியமாயிற்று

Col 1:20 அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.

பிதாவின் மீது இயேசு கிறிஸ்துவுக்கு இருந்த அன்பு தான் எல்லாவற்றிற்க்கும் மையமாய் இருக்கிறது

Php 2:5 கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;

Php 2:6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,

Php 2:7 தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.

Php 2:8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME