ஆவிக்குரிய காரியங்களுக்காக கவலைப்படுங்கள்

ஆவிக்குரிய காரியங்களுக்காக கவலைப்படுங்கள்

நாம் கர்த்தருக்குரியவைகளுக்காக கவலைப்பட வேண்டுமா?

1கொரிந்தியர் 7:32 …. விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.

1கொரிந்தியர் 7:34 …. விவாகமில்லாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாயிருக்கும்படி, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்; ….

  • தேவனுடைய சித்தத்தின்படி செய்வதற்கு கணவன் மனைவியின் மீதும் மனைவி கணவன் மீதும் கவலைப்பட வேண்டும்.
  • விவாகமில்லாதவர்கள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாய் இருக்கும்படி கர்த்தருக்குரியவைகளுக்காக கவலைப்பட வேண்டும்.

சபையைப் பற்றி கவலை நமக்கு எப்போதும் இருக்க வேண்டும்

2கொரிந்தியர் 11:28 இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது.

  • இன்றைக்கு இருக்கக்கூடிய பெரும்பாலான விசுவாசிகள் சபையைப் பற்றியெல்லாம் அதிகம் கவலைப்படுவதில்லை.
  • நம்மில் எத்தனை பேருக்கு  சபையானது பக்திவிருத்தி வளரவேண்டும் என்கிற கவலை இருக்கிறது .

நாம் பெற்றுக் கொண்ட பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலைப்பட வேண்டும்.

எபிரெயர் 2:4 அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.

  • தேவன் நமக்கு கொடுத்த பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாள் தோறும் கவலைப்பட வேண்டும்.

நாம் பெற்றுக் கொண்ட இரட்சிப்பைக்  குறித்து நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?

நம்முடைய இரட்சிப்பு நிறைவேற நாம் பிரயாசப்பட வேண்டியது அவசியமாக இருக்கிறது.

ரோமர் 13:11 …. நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.

பிலிப்பியர் 2:12 ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.

அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் நம்முடைய இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்பட வேண்டும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME