பிலதெல்பியா சபை:- கிரீடத்தைப் பெற்றுக் கொண்ட சபை
பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது என்ன?
ஏழுசபைகளைக் குறித்த சத்தியங்களை கற்றுக் கொண்டு வருகிறோம்.
பிலதெல்பியா சபையைக் குறித்து கிறிஸ்து என்ன சொன்னார் என்ற சத்தியங்களை கற்றுக்கொள்ளுவோம்.
இந்த சபைக்கு கிறிஸ்து தன்னை எப்படி வெளிப்படுத்துகிறார்?
வெளி 3:7 பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது;
- கிறிஸ்துதன்னை பரிசுத்தமுள்ளவர் என்றும் சத்தியமுள்ளவர் என்றும் தாவீதின் திறவுகோலை உடையவர் என்றும் அந்த திறவுகோல் மீது என்ன அதிகாரம் உள்ளது என்பதையும் வெளிப்படுத்தினார்.
- ஒருவரும் பூட்டக்கூடாத படிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் என்ற வார்த்தை அவருக்கு இருக்கக்கூடிய அதிகாரத்தை வெளிப்படுத்துகிறது.
பிலதெல்பியா சபையார் தங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் எப்படி இருந்தார்கள் என்று கிறிஸ்து வெளிப்படுத்தினார்.
வெளி 3:8 உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே,
- பிலதெல்பியா சபையார் உபத்திரவ காலகட்டத்தில் கிறிஸ்துவை மறுதலியாமல் அவருடைய வசனத்தை கைக் கொண்டார்கள்.
இந்த கிரியைக்காக கிறிஸ்து அவர்களுக்கு என்ன வாக்குத்தத்தம் செய்தார்?
வெளி 3:8 ,,,,, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.
சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலர் பிலதெல்பியா சபையினருடைய பாதங்களுக்கு வந்து அவர்களை பணிந்துகொள்ளுவார்கள்
வெளி 3:9 இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.
எதற்காக கிறிஸ்து சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை பிலதெல்பியா சபையாருடைய பாதங்களுக்கு கீழ்ப்படுத்துகிறார்?
வெளி 3:9 ,,,, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.
நீதிமொழிகள் 16:7 ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
- சாத்தானுடைய கூட்டத்தார் பிலதெல்பியா சபையாரின் பாதங்களுக்குவந்து பணியும் போது கிறிஸ்து அவர்களிடத்தில் எந்தளவுக்கு அன்பு கூர்ந்தார் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளுவார்கள்.
பிலதெல்பியா சபையார் பொறுமையைக் குறித்து சொல்லிய வசனங்களை அவர்கள் காத்துக் கொண்டபடியினால் அவர்களுக்கு அதற்கான பலனை பலனையும் கிறிஸ்து வாக்குத்தத்தம் செய்தார்.
வெளி 3:10 என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.
- பூமியெங்கும் வரப்போகிற சோதனை காலத்திற்குத் அவர்கள் தப்பும்படி அவர்களை கிறிஸ்து காப்பேன் என்று வாக்குத்தத்தம் செய்தார்.
பிலதெல்பியா சபையாருக்கு கிரீடம் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கிறிஸ்து வெளிப்படுத்தினார். ஆனால் அவர்கள் அதை இழந்து போகாதபடிக்கு அவர்கள் பற்றிக் கொள்ளவேண்டிய அவசியம் அவர்களுக்கு இருந்தது.
வெளி 3:11 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.
- அவர்கள் தேவனுடைய சத்தியத்தை பற்றிக் கொள்ளாதபட்சத்தில் கிரீடத்தை இழந்து போவதற்கும் அவர்களுக்கு வாய்ப்பு இருக்கிறது.
பிலதெல்பியா சபையார் ஜெயங்கொள்ளும் போது அவர்களுக்கு என்ன கிடைக்கும்?
வெளி 3:12 ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.
இந்த சத்தியம் பிலதெல்பியா சபையாருக்கு மாத்திரம் தானா?
வெளி 3:13 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.
- தேவனுடைய வார்த்தைகளைக் கேட்கக்கூடிய காது உள்ள யாவருக்கும் இந்த சத்தியங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
பாடம்: கிறிஸ்துவுக்காக பாடுகளை சகிக்கும் போது தான் அவரோடு கூட ஆளுகையும் செய்வோம். பாடுகள் மாத்திரமே நம்மை கிறிஸ்துவைப் போல் பூரணராக்கும், பாடுகள் வரும் போது தான் நாம் பொறுமையில் வளரமுடியும், பலனையும் பெற்றுக் கொள்ள முடியும்.