இயேசு கிறிஸ்து எப்படிப்பட்ட சரீரத்தோடு மரியாளுக்கும் தம்முடைய சீஷர்களுக்கும் தரிசனமானார்

இயேசு கிறிஸ்து எப்படிப்பட்ட சரீரத்தோடு மரியாளுக்கும் தம்முடைய சீஷர்களுக்கும் தரிசனமானார்?

கதவு பூட்டப்பட்ட வீட்டுக்குள் எப்படி இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு தரிசனமானார் என்பதை நாம்கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

இயேசு கிறிஸ்து தம்முடைய ஆவிக்குரிய சரீரத்தை எப்படி மறுரூபப்படுத்தி அப்போஸ்தலர்களுக்கும் மற்றவர்களுக்கும் தரிசனமானார் என்பதை கற்றுக் கொள்ளுவோம்.

இயேசு கிறிஸ்து முதன்முதலில் மரியாளுக்கு தரிசனமாகும் போது ஒரு தோட்டக்காரனைப்போல தரிசனமானார்.

யோவான் 20:15 இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ,,,,,.

இயேசு கிறிஸ்துவை பார்த்த போது மரியாளுக்கு அடையாளம் தெரியவில்லை.

யோவான் 20:14 இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.

  • இயேசு கிறிஸ்துவை மரியாளினால் அடையாளங் கண்டு பிடிக்க முடியவில்லை.
  • மரியாளுக்கு இயேசுகிறிஸ்து தரிசனமான போது ஒரு தோட்டக்காரனைப் போல வேறொரு ரூபத்தில் அவருக்கு தரிசனமானார்.

வெள்ளை வஸ்திரம்தரித்தோ அல்லது மகிமையான வஸ்திரம் தரித்தவரைப் போல அவளுக்கு இயேசு கிறிஸ்து தரிசனமாகவில்லை, சாதாரணமான ஒரு தோட்டக்காரனைப்போல தரிசனமானார்.

யோவான் 20:15 இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.

  • இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்று தினங்கள் தான் முடிந்து போய் இருந்தது.
  • இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட காயங்களோடும் தலையில் முள்முடி சூடப்பட்ட காயங்களோடு கூட மரியாளுக்கு தரிசனமாகவில்லை.
  • ஒருவேளை இயேசு கிறிஸ்து சரீரம் முழுவதும் காயங்கள் இருந்து இருக்கும் என்றால் மரியாள் ஒருவேளை அடையாளம் கண்டு பிடித்து இருக்கலாம்.
  • இயேசு கிறிஸ்து மரியாளுக்கு அந்த ரூபத்தில் தரிசனமாகவில்லை.

அவர் மரியாளை அழைத்த விதத்தைப் வைத்து தான் அடையாளம் கண்டு கொண்டாள்.

யோவான் 20:16 இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.

அப்போஸ்தலர்களுக்கு தரிசனமாகும் போது கைகளிலும் விலாவிலும் காயங்களோடு தரிசமானார்.

யோவான் 20:19 வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

யோவான் 20:20 அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.

  • இயேசுகிறிஸ்து மாம்ச சரீரத்தில் உயிர்த்தெழுந்து இருப்பார் என்றால் கைகளிலே ஆணிகளால் கடவப்பட்ட துவாரத்தின் வழியாகவும் விலாவின் துவாரத்தின் வழியாகவும் இரத்தம் வந்து இருக்கும். ஏனென்றால் இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்து மூன்றுநாட்கள் தான் ஆகி இருந்தது.
  • இயேசுகிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தபடியால் அவருடைய சரீரத்தை எப்படி வேண்டுமானாலும் மறுரூபப்படுத்த முடியும்.

எம்மாவுக்கு போன சீஷர்களுக்கு தரிசனமாகும் போது ஒரு அந்நியனைப் போல தரிசனமானர்.

லூக்கா 24:13 அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்.

இயேசு எம்மாவு சீஷர்களோடு நடந்து போகும் போது அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவை அடையாளம் தெரியவில்லை.

லூக்கா 24:14 போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.

Luk 24:15 இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்து போனார்.

  • இயேசுகிறிஸ்து இங்கே அவர்களோடு நடந்து போகும் போதுஅவருடைய கைகளில் ஆணிகளால் கடாவப்பட்ட துவாரத்தையோ அல்லது கால்களில் துவாரத்தையோ அவர்கள் பார்க்கவில்லை.

எருசலேமில் இருந்து எம்மாவுக்கு போவதற்கு எட்டு மைல் (12 கீலோ மீட்டர்) தொலைவு ஆனாலும் அவர்தான் இயேசு என்பதை அறியாத அளவுக்கு வேறொரு ரூபத்தில் அவர்களுக்கு கிறிஸ்து தரிசனமாகி இருந்தார்.

லூக்கா 24:13 அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்.

Mar 16:12 அதன்பின்பு அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார்.

இயேசு கிறிஸ்து அப்பத்தை பிட்டு ஆசீர்வதித்து கொடுத்த பின்பு மறைந்து போனார்.

லூக்கா 24:29 அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்.

லூக்கா 24:31 அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.

  • இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தபடியால்தான் அவரால் தீடீரென பூட்டப்பட்டு இருக்கிற வீட்டிற்குள் பிரவேசிக்கவும் முடிந்தது அவர்களுக்கு முன்பாக மறைந்து போகவும் முடிந்தது.

அந்த இரண்டு சீஷனில் ஒரு சீஷன் அப்போஸ்தலனாகிய சீமோன் பேதுரு.

லூக்கா 24:34 கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானார் என்று அவர்கள் சொல்லக் கேட்டு,

லூக்கா 24:35 வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கையில் தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள்.

இயேசுகிறிஸ்து ஏதோ பொழுது போக வில்லை என்பதற்காக ஒவ்வொருக்கும் வித்தியாசமான ரூபத்தில் தரிசனமாகிக் கொண்டு இருக்கிறாரா?

இல்லை அந்த ஆவிக்குரிய சரீரம் எப்படிப்பட்டது என்பதை தம்முடைய சீஷர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இத்தனை தரிசனங்களையும் அவர் காண்பித்துக் கொண்டு இருக்கிறார்.

  • லாசருவைப் போல அவர் மாம்சத்தில் உயிர்த்தெழுந்து இருப்பார் என்றால் லாசருவைப் போல தன்னுடைய வீட்டிற்கோ அல்லது மறுபடியும் பிரசங்கம் பண்ணவோ  போய் இருப்பார்
  • ஆனால்ஆவிக்குரிய உயிர்த்தெழுதலை பெற்று இருந்ததினாலே தான் அதைஅவர் நிரூபிப்பதற்கு அநேக வித்தியாசப்பட்ட ரூபங்களில் தரிசனமாக வேண்டியதாய் இருந்தது.
  • நாமும் நித்திய உயிர்தெழுதலில் ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுவோம் என்பதற்கு இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதல் நமக்கு மேன்மையான ஆழமான ஆதாரமாக இருக்கிறது.

கர்த்தருக்கு சித்தமானால் இன்னும் இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்பதைக்  குறித்து கற்றுக் கொள்ளுவோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME