இயேசுகிறிஸ்து பூட்டப்பட்டிருந்த வீட்டுக்குள் எப்படி தரிசனமானார்

இயேசுகிறிஸ்து பூட்டப்பட்டிருந்த வீட்டுக்குள் எப்படி தரிசனமானார்?

இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு அநேக வசன ஆதாரங்களை பார்த்து இருக்கிறோம்.

இப்போது இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு பூட்டப்பட்டு இருந்த வீட்டுக்குள் சீஷர்களின் நடுவில் திடீரென்று தரிசனமானது அதை நிரூபிக்கிறது.

கதவுகள் பூட்டப்பட்டு இருந்தது என்பதை வேத வசனங்கள் ஏதோ தெரியாமல் சொல்லுகிறதா?

இல்லை அது எல்லாம் நமக்கு ஆதாரங்களாக இருக்கிறது.

அவருடைய மாம்ச சரீரத்தால் சுற்றப்பட்டு இருந்த பிரேத சீலையை கட்டவிழ்க்கப்படாமல் வெளியே வர முடியும் என்றால் கல்லறையில் மூடப்பட்டு இருந்த கல் தள்ளப்படுவதற்கு முன்பதாகவே அவரால் வெளியே வர முடியும் என்றால் வீட்டின்  கதவுகள் அடைக்கப்பட்டு இருக்கும்போது ஏன்  அவரால் உள்ளே வர முடியாது.

வேத வாக்கியங்கள் நமக்கு கொடுக்கும் ஆதாரங்கள் என்ன?

யோவான் 20:19 வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

யோவான் 20:26 மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

எம்மாவு ஊரில் சீஷர்களுடைய கண்களுக்கு முன்பதாகவே அவர் மறைந்து போனார்.

லூக்கா 24:31 அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.

எருசலேமில் அதே நாளில் சீஷர்களுடைய கண்களுக்கு முன்பதாகவே திடீரென்று தரிசனமானார்.

லூக்கா 24:36 இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

பூமிக்குரிய சரீரத்தில் உயிர்தெழுந்து இருப்பார் என்றால்,

  • பிரேத சீலையை மற்றவர்களுடைய உதவியோடு கட்டவிழ்க்கப்பட்டு தான் வந்து இருப்பார்.
  • அவர்கல்லறையிலிருந்து வெளியே வருவதற்கு கல்லறையின் வாசலில் இருக்கும் கல்லை யாராவது ஒருவர் புரட்டித் தள்ள வேண்டும்.
  • பூட்டிய வீட்டுக்குள் உள்ளே வர வேண்டும் என்றால் யாராவது வந்து கதவை திறக்க வேண்டும். அப்போது தான்  வாசலின் வழியாக தான் உள்ளே வர வேண்டும்.

ஆனால் நம்முடைய வேதவாக்கியங்கள் அப்படி போதிப்பது இல்லை.

அவர்ஆவிகுரிய உயிர்த்தெழுதலில் முதல்வராக இருக்கிறார்.

அப்போஸ்தலர் 26:23 தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுய ஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான்.

1கொரிந்தியர் 15:20 கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.

1கொரிந்தியர் 15:23 அவனவன் தன் தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவராய் இருக்கிறார்.

வெளி 1:5 உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

இயேசு கிறிஸ்துவின் மாம்ச சரீரம் ஆவிக்குரிய சரீரமாக மறுரூபப்படுத்தப்பட்டு உயிர்தெழுந்ததினாலே அவர் மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவராய் இருக்கிறார்.

கர்த்தருக்கு சித்தமானால் இயேசு கிறிஸ்துவின் மாம்ச சரீரம் ஆவிக்குரிய சரீரமாக மாற்றப்பட்டு தான் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு இன்னும் அநேக வேத ஆதாரங்களை பார்க்கலாம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME