ஒன்றானமெய் சபையைக் குறித்து இதுவரை நாம் என்ன கற்றுக் கொண்டு இருக்கிறோம்

ஒன்றானமெய் சபையைக் குறித்து இதுவரை நாம் என்ன கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

  • ஒன்றான மெய் சபைஅப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.
  • நாம் சீஷராகி ஞானஸ்நானம் பெறுகின்ற போது கர்த்தர் அந்த சபையிலே சேர்க்கிறார்.
  • ஒன்றான மெய் சபை கிறிஸ்துவின் இரத்தத்தால் வாங்கப்பட்டது. 
  • கிறிஸ்துவின் சபையின் விசுவாசிகள் கிறிஸ்துவின் சீஷர்கள் என்றும்,கிறிஸ்துவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
  • ஒன்றான மெய் சபை கிறிஸ்து மூலைக்கல்லாகவும் அப்போஸ்தலர்கள் தீர்க்கதரிசிகள் அஸ்திபாரமாக இருக்கிறார்கள்.
  • ஒன்றான மெய் சபை கிறிஸ்துவின் மணவாட்டி என்று அழைக்கப்படுகிறது.
  • ஒன்றான மெய் சபை திராட்ச தோட்டம் என்று அழைக்கப்படுகிறது.
  • ஒன்றான மெய் சபை தேவனுடைய மந்தை என்று அழைக்கப்படுகிறது.
  • ஒன்றான மெய் சபை தேவனுடைய ஆலயம் என்று அழைக்கப்படுகிறது.
  • ஒன்றான மெய் சபை ஒலிவ மரம் என்றும் கிளைகள் என்று அழைக்கப்படுகிறது.
  • ஒன்றான மெய் சபை தேவனுடைய வீடு என்று அழைக்கப்படுகிறது.
  • ஒன்றான மெய் சபை கிறிஸ்து சரீரம் என்று அழைக்கப்படுகிறது.
  • ஒன்றான மெய் சபை தேவனுடைய ராஜ்யம் அல்லது பரலோக ராஜ்யம் என்று அழைக்கப்படுகிறது.
  • ஒன்றான மெய் சபை கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சம்பாதிக்கப்பட்டபடியினாலே அது  கிறிஸ்துவின் சபை என்று அடையாளப்படுத்தப்படுகிறது.

இதில் ஒவ்வொன்றிலும் நாம் எப்படி இருக்கிறோம் என்பதையும் நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

அநேகர் இந்த சத்தியங்களை ஏற்றுக் கொள்ளுதில்லை ஏனென்றால் தேவனுடைய சத்தியங்களை விட்டு மனுஷர்களுடைய வார்த்தைகளுக்கு செவிகொடுப்பதே அதற்கான காரணமாய் இருக்கிறது.

நாம் இங்கே கற்றுக் கொண்ட எல்லா சத்தியங்களும் வேத வாக்கியங்களோடு தான் கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

ஒன்றான மெய் சபையை தேடி கண்டுபிடியுங்கள் அதில் மாத்திரமே உங்களுக்கு நித்திய ஜீவனும் பரலோகத்திற்கான பலனும் இருக்கிறது.

Mat 7:24 ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.

Mat 7:25 பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.

Mat 7:26 நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.

Mat 7:27 பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.

ஜீவனுக்கு போகிற வாசலை கண்டுபிடிக்கும்படி கிறிஸ்து நமக்கு கட்டளையிட்டு இருக்கிறார்

Mat 7:13 இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.

Mat 7:14 ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.

  • ஒன்றான மெய் சபையே ஜீவனுக்கு போகிற வாசல் அதின் வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருந்தாலும் அதில் மாத்திரமே நித்திய ஜீவனுக்கான பலன்கள் இருக்கிறது

Rom 16:16 ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME