ஆலயத்தில்

தேவனுடைய ஆலயத்தில் நாம் என்னவாக இருக்கிறோம்?

ஒன்றான மெய் சபை திராட்ச தோட்டமாகவும் அதில் பிதா திராட்ச தோட்டக்காரராகவும் கிறிஸ்து திராட்ச செடியாகவும் நாம் கொடியாகவும் இருக்கிறோம் என்பதை கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

இப்போது நாம் தேவனுடைய ஆலயத்தில் எப்படி இருக்கிறோம் என்பதை கற்றுக் கொள்ளுவோம்.

நாம் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம்.

2Co 6:16 நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.

1Co 3:17  தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.

ஜீவனுள்ள தேவனுடைய ஆலயத்தின் அஸ்திபாரம் யார்? மூலைக் கல் யார்?

Eph 2:20 அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசு கிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;

  • அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் தேவனுடைய ஆலயத்தின் அஸ்திபாரமாக இருக்கிறார்கள்.
  • இயேசு கிறிஸ்து தேவனுடையஆலயத்தின் மூலைக்கல்லாக இருக்கிறார்.

இந்த தேவனுடைய ஆலயம் முழுவதும் இயேசு கிறிஸ்து மேல் தான் கட்டப்பட்டுகிறது.

Eph 2:21 அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது;

  • இயேசு கிறிஸ்துவின் மீது கட்டபடுகிறபடியால்அது கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது.

அந்த ஜீவனுள்ள தேவனுடைய ஆலயத்தில் நாம் என்னவாக இருக்கிறோம்?

நாம் அந்த தேவனுடையஆலயத்தில் ஜீவனுள்ள கற்களாக கிறிஸ்துவின் மேல் கூட்டிக் கட்டப்பட்டு வருகிறோம்.

Eph 2:22 அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக் கட்டப்பட்டு வருகிறீர்கள்.

1Pe 2:4 மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,

1Pe 2:5 ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசு கிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.

  • நாம் தேவனுடைய ஆலயமாகவும் தேவனுடைய வாசஸ்தலமாகவும் ஆவிக்கேற்ற
    மாளிகையாகவும் கட்டப்பட்டு வருகிறோம்.
  • இந்த தேவனுடைய ஆலயத்தை நீங்கள் மாம்ச கண்களினால் பார்க்க முடியாது.
  • ஏனென்றால்இந்த தேவனுடைய ஆலயம் ஆவிக்குரியதாய் இருக்கிறது.

நாம் பரிசுத்த ஆவியினாலே தான் கூட்டி கட்டப்பட்டு வருகிறோம். 

Eph 2:22 அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக் கட்டப்பட்டு வருகிறீர்கள்.

அதனால்அந்த தேவனுடைய ஆலயம் பரிசுத்த ஆவியினுடைய ஆலயம் என்று அழைக்கப்படுகிறது.

1Co 6:19 உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?

1Co 3:16 நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?

அந்த ஜீவனுள்ள ஆலயத்தில் நாம் என்ன செய்கிறோம்?

1Pe 2:5  இயேசு கிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.

  • இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்கு பிரியமான ஆவிக்கேற்ற பலிகளை செலுத்தக்கூடிய பரிசுத்தமான ஆசாரியக்கூட்டமாக இருக்கிறோம்.

தேவனுடைய ஆலயத்தில் ஆசாரியர்களாய் இருக்கிற நாம்  தேவனுக்கு பிரியமான ஆவிக்கேற்ற பலிகளை நாம் செலுத்த வேண்டும்.

Heb 13:15 ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.

Heb 13:16 அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.

அந்த தேவனுடைய ஆலயத்தில் நமக்கு என்ன வேலை இருக்கிறது?

1Pe 2:9 நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

  • ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை நாம் அறிவிக்க வேண்டும்.

ஒன்றானமெய் சபையிலே இருக்கக்கூடிய ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளும் தேவனுடைய ஆலயத்தில் ஜீவனுள்ள கற்களாக இருக்கிறார்கள்.

ஒன்றான மெய் சபை நீங்கள்அ டையாளம் காண முடியும் என்றால் இந்த தேவனுடைய ஆலயத்தையும் நீங்கள் ஆவிக்குரிய ரீதியில் பார்க்க முடியும்.

ஒன்றானமெய் சபை தேவனுடைய ஆலயமாக இருக்கிறது.

அஸ்திபாரம்                                   – அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள்

மூலைக்கல்                                                  – இயேசு கிறிஸ்து

தேவனுடைய பிள்ளைகள்        – ஜீவனுள்ள கற்கள் மற்றும் பரிசுத்த ஆசாரிய                                                                        கூட்டம்

  • நீங்கள் இருக்கும் சபை அப்போஸ்தலர்கள் அஸ்திபாரமாக இருக்கிறார்களா இயேசு கிறிஸ்து மூலைக்கல்லாக இருக்கிறாரா என்று வேத வாக்கியங்களை கொண்டு சோதித்து பாருங்கள்.
  • அப்படியில்லாதபட்சத்தில் நீங்கள் ஒன்றான மெய் சபையில் இல்லை.
  • ஒன்றானமெய் சபையை அடையாளம் கண்டு கொள்ளுவது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME