தேவனுடைய ராஜ்யம் ஒன்றான மெய் சபையாக இருக்கும் என்றால் அதற்கான ஆதாரம் என்ன?
தேவனுடைய ராஜ்யம் ஒன்றான மெய் சபையாக இருக்கிறதா என்பதை குறித்து நாம் கற்றுக் கொண்டு வருகிறோம்.
தேவனுடைய ராஜ்யம் எப்போது ஸ்தாபிக்கப்பட்டது என்றும் ஒன்றான மெய் சபையானது எப்போது ஸ்தாபிக்கப்பட்து என்று வேத வசனங்களோடு கற்றுக் கொள்ளுவோம்.
தேவன் தானியேல் தீர்க்கதரிசியின் மூலம் தம்முடைய ராஜ்யத்தை எப்போது ஸ்தாபிப்பேன் என்பதைக் குறித்து முன்னுரைத்து இருந்தார்.
Dan 2:44 அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.
- தேவன் தானியேல் மூலம் ரோம ராஜாக்களின் நாட்களிலே என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார் என்று வாக்குத்தத்தம் செய்தார்.
இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்தவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் வருவதை பார்த்த பிறகு தான் மரணத்தை ருசிபார்ப்பார்கள் என்று இயேசு கிறிஸ்து தீர்க்கதரிசனமாக உரைத்தார்.
Mar 9:1 அன்றியும், அவர் அவர்களை நோக்கி: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
- இயேசுகிறிஸ்து ஒருபோதும் பொய்யுரையாதவர், ஆனால் இன்றைக்கு அநேகர் தேவனுடைய ராஜ்யம் இனிமேல் ஸ்தாபிக்கப்படும் என்கிறார்கள்ஆனால் இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக நின்று கொண்டு இருந்த சிலர் தேவனுடைய ராஜ்யம்பலத்தோடு வருவதைக் காணும் முன் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று உரைத்தார்.
- இயேசுகிறிஸ்து இந்த வசனப்பகுதியில் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே வரும் என்றும் அங்கே நிற்கிறவர்கள் சிலர் அதை காணும் முன் மரிக்க மாட்டார்கள் என்று கூறினார்.
அது எப்படி என்று வேதவசனத்தோடு பார்ப்போம்.
இயேசு கிறிஸ்து தம்முடைய அப்போஸ்தலர்களிடத்தில் கேள்வி ஒன்றை கேட்டார்
Mat 16:15 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.
பேதுரு என்ன பதில் சொன்னார் என்று கவனியுங்கள்.
Mat 16:16 சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
பேதுரு இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சொன்ன அந்த வார்த்தையை பிதா அங்கே பேதுரு மூலமாக வெளிப்படுத்தினார்.
Mat 16:17 இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
கிறிஸ்து என்று சொன்ன அந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன் என்று கிறிஸ்து வாக்குத்தத்தம் செய்தார்.
Mat 16:18 மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
இப்போது சபை என்ற வார்த்தையை கிறிஸ்து பரலோகராஜ்யம் என்று இங்கே அழைத்தார், அந்த சபைக்கான திறவுகோல்களை உனக்கு தருவேன் என்றுவாக்குத்தத்தமும் செய்தார்.
Mat 16:19 பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.
அந்த தேவனுடைய ராஜ்யமாகிய சபையானது எங்கே ஸ்தாபிக்கப்படும்?
அந்த கர்த்தருடைய ஆலயமாகிய சபைஎருசலேமில் ஸ்தாபிக்கப்படும் தேவன் முன்னுரைத்தார். அதற்கு எல்லாஜாதிகளும்(தேசத்தார்) ஒடி வருவார்கள் என்றார்.
Isa 2:1 ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம்.
Isa 2:2 கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்.
- தேவன் ஏசாயா தீர்க்கதரிசியைக் கொண்டு அந்த ராஜ்யம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்படும் என்றார்
- மலைக்கு மேலாய் அது உயர்த்தப்படும் என்றார்
- எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள் என்றார்
எருசலேமில் இருந்து தான் வேதமும் கர்த்தரின் வசனமும் வெளிப்படும் என்றார்.
Isa 2:3 திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.
- எருசலேமில் இருந்தது தான் வேதமும் கர்த்தரின் வசனமும் வெளிப்படும் என்று தேவன் தீர்க்கதரிசனமாக உரைத்து இருப்பதை கவனியுங்கள்.
- தேவன் சொன்னது போலவே அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் புதிய ஏற்பாட்டு சத்தியங்கள் அங்கே இருந்து தான் வெளிப்பட்டது.
இந்த ராஜ்யத்தில் இருப்பவர்கள் பட்டயத்தை எடுத்து யுத்தம் செய்யமாட்டார்கள் என்று தேவன் முன்ரைத்தார்.
Isa 2:4 அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்து கொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.
முதன் முதலில் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கி சகல தேசத்தாருக்கும் அறிவிக்கப்படும் என்று கிறிஸ்து உரைத்தார்.
Luk 24:47 அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.
Luk 24:48 நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்.
இயேசு கிறிஸ்து மாற்கு 9ம் அதிகாரம் 1ம்வசனத்தில் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே வரும் என்று சொன்னார். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து பரமேறும் போது அந்த பெலத்தை பெற்றுக் கொள்ளும் படி எருசலேமில் இருங்கள் என்று கட்டளையிட்டார்.
Luk 24:49 என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.
அப்போஸ்தலர்கள் 2ம் அதிகாரத்தில் கூடி வந்தபோது பரிசுத்த ஆவியானவர் மூலமாக ஞானஸ்நானம் பெற்ற போது அந்த பெலனை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
Act 2:3 அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.
Act 2:4 அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
அப்போஸ்தலனாகிய பேதுரு இயேசுகிறிஸ்து வாக்குரைத்தபடி முதல் சுவிசேஷ பிரசங்கம் செய்து பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களை பயன்படுத்தினார்.
Act 2:14 அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.
மனந்திரும்புதலும் பாவன்னிப்பும் முதன் முதலில் கி,பி 33ம் ஆண்டு எருசலேமில் தொடங்கியது.
Act 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
- பேதுருவின் பிரசங்கத்தை கேட்டு மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று சுமார் 3000 பேர் ஞானஸ்நானம் பெற்று இரட்சிக்கப்பட்டு அந்த ராஜ்யத்திலே சேர்க்கப்பட்டார்கள்.
- ஏசாயா தீர்க்கதரிசி சொன்னது போல அந்த தேவனுடைய ராஜ்யமாகிய சபை பர்வதங்களின் கொடுமுடியாகிய எருசலேமில் ஸ்தாபிக்கப்பட்டது. எல்லா ஜாதிகளும் அதற்கு ஒடிவருகிறார்கள், அங்கே இருந்துதான் புதிய ஏற்பாட்டு(வேதம்) சத்தியங்கள்(வசனங்கள்) வெளிப்பட்டது.
இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் தம்முடைய சபையிலே சேர்த்துக் கொண்டுவந்தார்.
Act 2:47 தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.
- நாம் மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெறுகின்றபோது கிறிஸ்துவின் சபையிலே சேர்க்கப்படுகிறோம் அதே வேளையில் தேவனுடைய ராஜ்யத்திலும்தேவனுடைய வீட்டிலும் பிறக்கிறோம்.
நம்மை அந்த ராஜ்யத்தில் உட்படுத்தினவர் பிதாவாகியதேவன்.
Col 1:13 இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.
நியாயத்தீர்ப்பு நாளுக்கு பிறகு கிறிஸ்து இந்த ராஜ்யமாகிய சபையைத்தான் பிதாவிடம் ஒப்புக் கொடுப்பார்.
1Co 15:24 அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.
- இந்த ராஜ்யத்தை எந்தவொரு பூமிக்குரிய ராஜ்யமும் மேற்கொள்ள முடியாது. இது நித்தியமான ராஜ்யம்
- இந்த ராஜ்யத்தை தேவனுடைய ராஜ்யம் என்றும் பரலோக ராஜ்யம் என்றும் கிறிஸ்துவின் ராஜ்யம் என்று அழைத்தாலும் ஒன்றாகதான் இருக்கிறது.
கிறிஸ்துவின்ராஜ்யம் ஒன்றான மெய் சபையாகவும் தேவனுடைய ராஜ்யமாகவும் இன்றைக்கும் இருக்கிறது.