ஞானஸ்நானம் என்பது சுவிசேஷத்தின் முக்கியமான பகுதியா

ஞானஸ்நானம் என்பது சுவிசேஷத்தின் முக்கியமான பகுதியா?

ஒன்றான மெய் சபையில் சேர்க்கப்படுவதற்கு ஞானஸ்நானம் தான் உதவி செய்கிறது என்பதை குறித்து நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

இன்னும் அநேக வேத ஆதாரங்கள் இருக்கிறது

1) அப்போஸ்தலனாகிய பவுல் ஞானஸ்நானம் பெற்றுதான் பாவங்கள் போக கழுவப்பட்டார்.

Act 22:15 நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய்.

Act 22:16 இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.

Act 9:18 உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதிள்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான்.

  • அப்போஸ்தலனாகிய பவுல் இயேசு கிறிஸ்துவை தரிசித்ததினாலோ அல்லது அவரோடு பேசியதினாலே அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படவும் இல்லை அவர் இரட்சிக்கப்படவும் இல்லை.
  • கர்த்தருடைய சீஷனாகிய அனனியா பவுலை நோக்கி ஞானஸ்நானம் பெற்று உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்று கட்டளையிட்டார். ஞானஸ்நானம் பெறாமல் எந்த மனுஷனுடைய பாவங்களும் கழுவப்படாது என்பதே இங்கே சத்தியமாய் இருக்கிறது.
  • ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பாகவே இரட்சிக்கப்படுகிறோம் என்று சொல்லக்கூடியவர்கள் இந்த வேத வாக்கியங்களை தங்களுக்கு கேடுண்டாக புறம்பே தள்ளுகிறார்கள்.

யோப்பா பட்டணத்தில் அநேகர் எப்படி கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்கள் ஆனார்கள்?

Act 9:42 இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.

விசுவாசமுள்ளவர்கள் என்பதற்கு அர்த்தம் என்ன?

Act 6:7 … ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.

விசுவாசத்திற்கு கீழ்ப்படிவது என்பது ஞானஸ்நானம் பெற்று இரட்சிக்கப்படுவதாகும்.

Mar 16:16 விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்;

  • கிரியை இல்லாத விசுவாசத்தை தேவன் ஏற்றுக் கொள்ளுவதில்லை அது செத்தது என்கிறார் .ஆகையால் விசுவாசம் என்பது கிரியையுள்ளதாக இருக்க வேண்டும்.

கொர்நேலியு தன் குடும்பத்தாரோடு எப்படி இரட்சிக்கப்பட்டார்?

பேதுரு இயேசு கிறிஸ்துவின்  மரணம் அடக்கம் உயிர்த்தெழுதலைப்பற்றி பிரசங்கம் செய்தார்.

Act 10:39 யூதருடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்தவைகளெல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள்.

Act 10:40 மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படி செய்தார்.

பேதுரு ஏன் கிறிஸ்துவின் மரணம் அடக்கம் உயிர்த்தெழுதலை பிரசங்கம் பண்ண வேண்டும்?

ஏனென்றால் கிறிஸ்துவின்பாடு மரணத்திலும் உயிர்த்தெழுதலில் தான் ஒவ்வொரு மனிதனுடைய இரட்சிப்பு இருக்கிறது.

இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தான் பாவமன்னிப்பு இருக்கிறது என்று பேதுரு பிரசங்கித்தார்.

Act 10:43 அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.

பேதுரு அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி கட்டளையிட்டார்.

Act 10:47 அப்பொழுது பேதுரு: நம்மைப்போலப் பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி,

Act 10:48 கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். 

(கர்த்தருக்கு சித்தமானால் கொர்நேலியுவைக் குறித்து தனியாக வேறொரு நாளில் கற்றுக் கொள்ளுவோம்)

அநேக ஜனங்கள் எப்படி கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்?

Act 2:41 அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.

Act 11:24 … அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.

இவர்கள் எல்லாரும் பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்று இரட்சிக்கப்படாத பட்சத்தில் கர்த்தரிடத்தில் எப்படி சேர்க்கப்படமுடியும்.

அவர்கள் சபையிலே கர்த்தரால் சேர்க்கப்பட்டார்கள்.

Act 2:47  இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.

அப்போஸ்தலனாகிய பவுல் அநேகரை சீஷராக்கினார் என்பதின் அர்த்தம் என்ன?

Act 14:21 அந்தப் பட்டணத்தில் அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அநேகரைச் சீஷராக்கினபின்பு

சீஷர்கள் தான் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

Act 11:26 அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்கள். முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.

ஞானஸ்நானத்தின் மூலம் கிறிஸ்துவை தரித்து கொண்டபடியினாலே சீஷர்கள் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

Gal 3:27 ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.

  • அப்போஸ்தலர்கள் உலகமெங்கும் போய் அநேகரை சீஷராக்கி தான் பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் கொடுத்தார்கள் பின்பு தான் கிறிஸ்து கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணினார்கள்.
  • ஒருவன் ஞானஸ்நானம் பெறாதபட்சத்தில் அவன் ஆவிக்குரிய ரீதியில் கர்த்தரால் சபையிலே சேர்க்கப்படுவதில்லை.

கர்த்தருக்கு சித்தமானால் இன்னும் அநேகர் எப்படி ஞானஸ்நானம் பண்ணப்பட்டு இரட்சிக்கப்பட்டார்கள் என்பதை தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம்

ADD YOUR COMMENT

Powered By Indic IME