அவர் யோசேப்பின் குமாரன், நாசரேத்தூரானுமாகிய இயேசுவே
பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு, நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்: அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான். (யோவான் 1:45)
மத்தேயு 13:55; மாற்கு 6:3; லூக்கா 4:22; மத்தேயு 2:23; மத்தேயு 21:11; யோவான் 18:5,7; யோவான் 19:19; அப்போஸ்தலர் 2:22; அப்போஸ்தலர் 3:6; அப்போஸ்தலர் 10:38.
இயேசுகிறிஸ்து யோசேப்பின் குமாரன் எனப்படுவதினால்
அவர் ஆபிரகாமின் வழி வந்தவர்
அவர் தாவீதின் வேரானவர்
அவர் யூத குலமானவர்
அவர் மாம்சமாக வந்தவர் என்றாகிறது.
அவர் நாசரேத்தூரான் எனப்படுவதினால், அவர் வாக்குதத்த பூமியில் தோன்றியவர்
அவர் ஒரு இஸ்ராயேலர்
அவர் நாசரேத்தில் வளர்ந்தவர்
அவர் நசரேயன் எனப்படுகிறவர் என்றாகிறது
இவரை வேறு ஒன்றோடும், நாட்டோடும், நபரோடும் ஒப்பிட வேண்டாம்.
அவர் அவரே, நாம் நாமே…