வீட்டாரனைவரும்

அவனும், அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள்.

he himself believed, and his whole household. (John 4:53)
Mt8:5-13; Lk19:1-10; Act2:39; Act16:13-15,31-34; Act18:8; 1Co16:15; Gal6:10; Heb8:10; Jos24:15.

உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்ன மணிநேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள். (யோவான் 4:53)

மத்தேயு 8:5-13; லூக்கா 19:1-10; அப்போஸ்தலர் 2:39; அப்போஸ்தலர் 16:13-15,31-34; அப்போஸ்தலர் 18:8; 1 கொரிந்தியர் 16:15; கலாத்தியர் 6:10; எபிரெயர் 8:10; யோசுவா 24:15.

குடும்பத்தாரின் விசுவாசம்:

குடும்பத்தார் முழுவதும் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்தார்கள்.

ஆனால் இக்காரியம் அவ்வளவு எளிதானதா?
ஆதியிலே தேவன் மனிதனை ஒரு குடும்பமாக படைத்திருந்தும் ஆதாமே குடும்பதலைவனாக நியமிக்கப்பட்டிருந்தான். பழைய ஏற்பாட்டின் காலத்தில் குடும்பதலைவர் ஒருவரே. அவர் குடும்பத்தின் தலை. அவர் சொல்வதுபடிதான் யாவும் நடந்தேற வேண்டும் என்ற நியமம் இருந்தது.

ஆசீர்வாதங்களானாலும், சாபமானாலும், தண்டனைகளானாலும் குடும்பத் தலைவர் மூலமாகவே நடந்தேறும்.

மனைவியானவள் தலைவனுக்கு சமமானவள் அல்ல, பக்கதுணை, ஏற்றதுணையானவள்.

புதிய ஏற்பாட்டு சபைகளிலும் ஆண்மகனே தலைவனாகவும், செயல்படுத்துகிறவனாகவும் காணப்பட்டான். இதனால் தலைக்கு கீழ்படிந்து எழிதாக குடும்பங்கள் விசுவாசத்துக்குள்ளாகின.

சமீப காலமாக தனிமனித சுதந்தரம், கணவன் – மனைவி சமமானவர்கள், அவரவர் சுயமாய் தீர்மானிக்கலாம் போன்ற துர் உபதேசங்கள் உண்டாகி பல சீர்கேடுகளை பிறப்பித்துள்ளது.

இன்றும் 90% க்கு மேல் குடும்பங்கள் ஒற்றை தலைமையின் கீழ்தான் இயங்குகின்றன. 10% த்துக்குள்ளான குடும்பங்களினாலேதான் பல சீர்கேடுகள் அரங்கேறுகின்றன.

அதிகாரம் கட்டுப்படுத்துவதற்கானதல்ல, அன்பு காட்டுவதற்கும், அரவணைப்பதற்கானதுமாகும்.

குடும்பத்தலைவன் மனந்திரும்பினால் முழுகுடும்பமும் மனந்திரும்பும் அனுபவம் கிராமங்களிலே நடைமுறையில் உள்ளது.

தலைவன் மனந்திரும்பாத குடும்பங்களில் சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்கள் நடைமுறைக்கு வருவதில் சிரமமுள்ளது.

பிதா கிறிஸ்துவுக்கு தலை, குமாரன் புருஷனுக்கு தலை, புருஷன் மனைவிக்கு தலை.

குடும்பதலைவன் தேவனோடு நல்ல ஐக்கியம் கொண்டு தேவனின் ஆசீர்வாதங்களை குடும்பத்துக்கு கொண்டுவருகிற நல்ல வேலையாள்.

விவிலியம் உண்டாக்கிய குடும்ப கட்டமைப்புகள் மாறலாகாது.
தலையே இயேசுவை குடும்பத்திற்கு கொடுக்க வேண்டும்.
தலையே ஆசீர்வாதத்தைக் குடும்பத்திற்கு கொடுக்க வேண்டும்.
தலையே குடும்பத்திற்கான வழிகாட்டி, ஆலோசகர்.

விவிலிய ஒழுங்கை மாற்றாதீர்.

குடும்பங்களின் மனந்திரும்புதல் குடும்ப ஆசீர்வாதங்களுக்கு வழிகாட்டும்.

இரட்சிக்கப்பட்ட – சிக்கனமுள்ள – பக்தியுள்ள – புத்தியுள்ள தலைக்கு அடங்காத மனைவியும், பிள்ளைகளும் சாத்தானால் பயன்படுத்தப்படும் ஆயுதங்களாக மாற அதிக வாய்ப்புள்ளது.

கர்த்தாவே, நீர் எங்கள் குடும்பத்தை இரட்சித்து, வழிநடத்தி, ஆசீர்வதித்து வருகின்றீர். உமக்கு நன்றி. நாங்கள் குடும்பமாய் உம்மில் வேரூன்றி , உம்மை ஆராதித்து, உமக்குள் ஜெபித்து, உம் வசனங்களை தியானித்து உமது ஆசீர்வாதங்களை நிறைவாய் பெற எங்களுக்கு உதவி செய்யும். எங்கள் குடும்பத்தில் அன்பு குறைவு, கீழ்படியாமை போன்ற பாவங்கள் தலைதூக்காமலிருக்க உம் ஆவியை கொண்டு எங்களை வழிநடத்தும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME