வித்துள்ள தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்வதில்லை.

வித்துள்ள தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்வதில்லை.

Whoever has been born of God does not sin, for His seed remains in him; and he cannot sin. (1John 3:9)

1John 2:29; 1John 4: 1John 7;5:1,4,18; John 1:13; 1Peter 1:23; Matthew 7:18; Acts 4:19,20; Romans 6:2; Galathians 5:17.

தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். (1யோவான் 3:9)

1யோவான் 2:29; 1யோவான் 4:7; 1யோவான் 5:1,4,18; யோவான் 1:13; 1பேதுரு 1:23; மத் 7:18; அப் 4:19,20; ரோமர் 6:2; கலா 5:17.

தேவனால் பிறந்தவன்.

தேவனால் பிறந்தவனில் அவருடைய வித்து தரித்திருக்கிறதினால் அவன் பாவம் செய்வதில்லை என்றுக் கூறுகின்றார். ஆதியில் தேவனால் உண்டாக்கப்பட்டவனில் தேவனுடைய வித்து காணப்பட்டது. சர்ப்பத்துக்கு இடம் கொடுத்து பாவம் உண்டானபோது அவருடைய வித்து அகன்று சர்ப்பத்தின் வித்து ஆதிமனிதனில் நிலைகொண்டது. சர்ப்பத்தின் வித்தினிமித்தம் தேவனையும் தேவனுக்குரியவைகளையும் பின்பற்றும் சுபாவம் இல்லாதபடிக்கு மனம் குருடாக்கப்பட்டவனாய் காணப்பட்டான். ஆதி மனிதனுக்குள் இருந்த சர்ப்பத்தின் வித்தை அகற்றி தேவனுடைய வித்தை நிலைநிறுத்த நியாயபிரமாணத்தைக் கொடுத்தார் தேவன். நியாயபிரமாணத்தைக் கொடுக்க இரண்டு காரணங்களை வைத்திருந்தார் தேவன். ஒன்றுஅவரின் பிரமாணத்தை அவனுக்குள் வைப்பது. இன்னொன்று அவரின் பிரமாணத்தை அவனுக்குள் வைக்க முடியாவிட்டால் அவனுக்குள் இருக்கிற சாத்தானின் வித்தை பிரமாணத்தைக் கொண்டு வெளிபடுத்துவதாகும்.

இந்த இரு நோக்கங்களில் இரண்டாவது நோக்கமே நிலைபடலாயிற்று. இதனால் மனிதன் மேலும் பாவியானான். எனவே முதலாவது நோக்கத்தை நிறைவேற்றும்படியாக பிரமாணங்களினூடாக வெளிப்பட்ட தமது குமாரனை தேவன் உலகிற்கு அனுப்பினார். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டவனில் தேவனின் வித்தாகிய பிரமாணமாகிய – வார்த்தையாகிய இயேசு நிலைகொள்ள ஆரம்பித்தார். அவரின் வித்து அவனில் முளைத்து கிறிஸ்துவின் சாயலாகிய நற்கனிகளை கொடுக்க தேவன் தமது ஆவியை அவனுக்குள் கொடுத்தார். கிறிஸ்துவால் சுத்தமாக்கப்பட்டவனில் கிறிஸ்துவும் ஆவியும் அதாவது வார்த்தையும் ஆவியும் இணைந்து வாழலாயிற்று. இந்த கூட்டுக் கலவையே அவருடைய வித்து ஆகும்.

இந்த வித்தைக் கொண்டிருக்கிறவன் பாவம் செய்ய இயலாதவனாக இருப்பான் என்றல்ல, பாவம் செய்யும் வாய்ப்பிருந்தும் அதற்கு கீழ்படியாமல் தேவனுக்கு மட்டுமே கீழ்படிய தன்னை ஒப்புக்கொடுக்கிறவனாயிருப்பான். பாவத்தினால் எளிதில் தூண்டபடக்கூடிய சரீரத்தைக் கொண்டிருந்தாலும் ஆவியோடு இணைந்து செல்லும் ஆத்துமாவை உடையவனாயிருப்பதினால் பாவத்துக்கு அடிமையாகமாட்டான். அவரின் வித்தாகிய ஆவியோடு இணைந்த வார்த்தை அவனுக்குள் வாழ்ந்திருந்து அவன் இடறிப்போகாமல் அவனை வழிநடத்தம்.

அவரின் வித்து அவனுக்குள் வாழ்ந்திருப்பது குறித்த செய்தி ஒரு பெரிய பாடம் ஆகும். அதை நாம் இங்கு விளக்கமாக அறிய இயலாது. அவருடைய வசனத்தினால் தன்னை கார்த்துக்கொள்ளுகிறவனே அவரால் பிறந்தவன்.

கேள்வி. வாயில் கர்த்தரின் வாக்கை கொண்டிருப்பதிலும் இருதயத்தில் கர்த்தரின் வாக்கை கொண்டிருப்பதே மேல். விளக்குக?.

என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன்; என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன். நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை. என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள். ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன். நீங்கள் பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கமும் உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன்.
அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள். அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள். என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள். ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள். பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும். எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான். நீதிமொழிகள் 1:23 – 33.

ADD YOUR COMMENT

Powered By Indic IME