விசுவாசியாதபடியினால் பாவத்தைக் கண்டித்துணர்த்துவார்

விசுவாசியாதபடியினால் பாவத்தைக் கண்டித்துணர்த்துவார்.

He convict the sin, because they do not believe in Me. (John 16:9)

John 8:23,24,42-47; John 12:47,48; John 15:22-25; Act 2:28-38; Act 3:14-20; Act 7:51-54; Romans 3:19,20; Romans 7:9; 1Thessalonians 2:15,16;Hebrew 3:12; Hebrew 10:28,29.

அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும், (யோவான் 16:9)

யோவான் 8:23,24,42-47; யோவான் 12:47,48; யோவான் 15:22-25; அப்போஸ்தலர் 2:28-38; அப்போஸ்தலர் 3:14-20; அப்போஸ்தலர் 7:51-54; ரோமர் 3:19,20; ரோமர் 7:9; 1தெசலோனிக்கேயர் 2:15,16; எபிரெயர் 3:12; எபிரெயர் 10:28,29.

பாவத்தைக் கண்டிப்பார்:

விசுவாசத்தினால் வராத யாவும் பாவமே என்று விவிலியம் கூறுகின்றது. இயேசுவை இஸ்ராயேலர் விசுவாசிக்காத காரணம் அவர்களில் பாவம் குடிகொண்டிருந்ததுவேயாகும். அதாவது ஆதியிலிருந்தே மோசேக்கும், நியாயபிரமாணத்துக்கும் கீழ்படியாமல் எதிர்த்து நின்று பழகிபோனவர்களாயிருந்தனர். தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாமல் அவர்களைப் பாடுகளுக்கு உட்படுத்தினார்கள். அவர்கள் சிந்தை துன்மார்க்கமாய் போனதற்கு காரணம் கீழ்படியாமையும் தெய்வபயமற்ற செய்கையுமே. இயேசுவை விசுவாசிக்காதபடியினால் அவர்களில் இருந்த பாவம் அப்படியே நிலைக்கொண்டுள்ளது. தேவனாலும், கிறிஸ்துவாலும் அனுப்பப்பட்ட ஆவியானவர் அவர்களில் இருந்த பாவங்களைக் கண்டித்து அவர்களை சீர்படுத்த முயலுவார்.

நாம் புறஜாதிகளாயிருந்தபோது கீழ்படியாமையையும் தெய்வபயமற்ற செய்கைகளையும் மிகுதியாக செய்து வந்தோம். இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன் நம்மேல் கொண்ட அன்பினிமித்தம் தமது குமாரனை நமது பாவங்களை போக்கும் பலியாக அனுப்பி நம்மை மீட்டுக்கொண்டார். நாம் கிரியைகளினால் அல்ல, கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு மீட்கப்பட்டோம். மீட்கப்பட்ட நம்மில் தேவனுடைய ஆலோசனைகளுக்கும், ஆவியின் பிரமாணங்களுக்கும் கீழ்படியாமல் போகும் தன்மையையும் அவருக்கு பயப்படாமல் அவருக்கு பிரியமில்லாதவைகளில் ஆவலோடு ஈடுபடும் சுபாவம் உள்ளவர்களாயும் இருப்பதைக் கண்டு அவரால் அனுப்பப்பட்ட ஆவியானவர் நம்மை கண்டித்துணர்த்துகின்றார்.

தெயபயத்தினாலும் கீழ்படிதலினாலும் நம்மில் உள்ள விசுவாசத்தை உறுதிபடுத்தி நற்கிரியைகளுக்கு மாதிரியாக நம்மை வெளிப்படுத்த வேண்டும் என்றே விரும்புகின்றார்.

பாவங்களையும், அக்கிரமங்களையும் கண்டித்துணர்த்தும் தன்மை தற்காலங்களில் குறைவாக உள்லது. பெற்ற தகப்பன் தன் பிள்ளையின் தவறுகளைக் கண்டித்து தண்டித்து சீர்படுத்துவது போலவே ஆவியானவரும் மணவாளனுக்கென்று நியமிக்கப்பட்ட கன்னிகைகளாகிய நம்மில் பாவம் குடிகொள்ளாதபடிக்கு கவனமாயிருக்கிறார்.

கண்டித்தல் அன்பின் வெளிப்பாடு.

என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை. அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை. வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள், நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான். நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே.
அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமலிருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள். யோவான் 5:37-39,45-47.

ADD YOUR COMMENT

Powered By Indic IME