அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல் போனார்கள்.
Therefore they could not believe, because Isaiah said again. (John 12:39-41)
Isa6:9,10; Isa44:18-20; Isa48:8; 2Thes2:11,12; Rev17:17; Jas5:19,20.
ஆகையால் அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல்போனார்கள். ஏனெனில் ஏசாயா பின்னும்: (யோவான் 12:39-41)
ஏசாயா 6:9,10; ஏசாயா 44:18-20; ஏசாயா 48:8; 2தெசலோனிக்கேயர் 2:11,12; வெளி 17:17; யாக்கோபு 5:19,20.
ஏன் விசுவாசிக்கவில்லை?
இஸ்ராயேலரை பொறுத்தமட்டில் அவர்களின் முன்னோர்களின் நிமித்தம் விசுவாசிக்கவில்லை. தகப்பன் எவ்வழியோ பிள்ளைகளும் அவ்வழியே என்பதைப்போல.
2வதாக, அவர்களின் இருதயம் எகிப்தின் கொழுமையானவைகளினால் கொழுத்துபோய் காணப்பட்டது. இருதயத்தில் தேவனை நினைக்கிற தன்மைகளினால் காணப்பட்டாலும் பெருந்திண்டியாயிருந்ததினால் விசுவாசிக்க இயலவில்லை.
3வதாக, எகிப்தின் அழகு, செல்வம், வளமை போன்றவைகள் இவர்களின் கண்களுக்குள் நிழலாட்டமாய் காணப்பட்டது. அந்த கவர்ச்சிகளைவிட்டு கண்களை விலக்கிக் கொள்ள இயலவில்லை.
4வதாக, அகிப்திய ஞானோந்திரியங்களிலும், மந்திர தந்திரங்களினாலும் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். பயத்தினிமித்தமாகவோ, ஆச்சரியத்தினிமித்தமாகவோ பாதிப்புக்குள்ளாயிருந்தனர்.
5வதாக, எகிப்தின் சுதந்தர வாழ்வும், அனுபவிக்கவே மனிதன் பிறந்துள்ளான் என்ற அணுகுமுறையும் இஸ்ராயேலின் கட்டுபாடான வாழ்வியல் முறைமைக்கு எதிரிடையாக காணப்பட்டது. இஸ்ராயேலர் எகிப்தின் வாழ்க்கைமுறையை பழகிக்கொண்டதினால் கட்டுபாடான வாழ்க்கைமுறையில் நிலைத்து நிற்க முடியவில்லை.
இஸ்ராயேலரின் வீழ்ச்சிகள் இந்த 5 தன்மைகளையே சுற்றி வந்தது. இவர்களைபோலவே இக்கால கிறிஸ்தவ விசுவாசிகளும் ஊழியகாரர்களும் காணப்படுகின்றனர். உள் அமைந்து வாழ கடினமாயுள்ளது. வெளிசார்ந்து வாழ்வது சுலபமாயுள்ளது. இதனால் இஸ்ராயேலரைபோலவே வழுவிப் போகிறவர்களாகவும், விசுவாச கப்பலை சேதப்படுத்துகிறவர்களாகவும் கவிழ்த்துபோடுகிறவர்களாகவும் காணப்படுகின்றனர்.
இஸ்ராயேலருக்கு நியாயதீர்ப்பு வைக்கப்பட்டது போலவே நமக்கும் வைக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்வோம்.
ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள். அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, நாற்பது வருஷகாலம் என் கிரியைகளைக் கண்டார்கள். ஆதலால், நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி; என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார். எபிரேயர்3:7-11.