விசுவாசமே தப்பி பிழைக்கும் வழி
He who believes in Him is not condemned; but does not believe is condemned already. (John 3:18)
Jn3:36; Jn5:23,24; Jn6:40,47; Jn7:17,18; Jn20:31; Ro5:1; Ro8:1,33,34; 1Jn5:12.
அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினையடையான்,விசுவாசியாதோர் ஆக்கினையடைவர். (யோவான் 3:18)
யோவான் 3:36; யோவான் 5:23,24; யோவான் 6:40,47; யோவான் 7:17,18; யோவான் 20:31; ரோமர் 5:1; ரோமர் 8:1,33,34; 1 யோவான் 5:12.
ப.ஏ ல் நியாயபிரமாணத்தை கேட்டு, அதற்கு செவிகொடுத்து, அதன்படி வாழ்ந்தால் பிழைக்க இயலும். இதனை கிரியை சார்ந்த விடுதலை எனலாம்.
பு.ஏ ல் இயேசுகிறிஸ்துவையும்,அவரது வார்த்தைகளையும், அவரது நாமத்தையும் நம்பி விசுவாசித்து அவரை போல மாறினால் பிழைக்கவியலும்.
ப.ஏ ல் எழுத்து சார்ந்த கிரியை.
பு.ஏ ல் காட்சி சார்ந்த கிரியை.
அதாவது இயேசு என்ற ஆளுமை நமக்கு காண்பிக்கபட்டுள்ளது. அவரை போல மாற வேண்டும் என்பதே அதன் நோக்கம்.
சபை காலத்தில் இயேசுவின் ஆளுமையை சுட்டி காட்ட 3 காரியங்கள் வைக்கபட்டுள்ளன.
– சுவிசேஷங்கள். எல்லா சுவிசேஷங்களும் இயேசுவின் ஆளுமையை விளித்து காட்டுகிறது.
– சுவிசேஷத்தை கேட்டு விசுவாசித்து இயேசுவை ஏற்றுக்கொண்டு அவரை போல வாழும் சபை. இதுவே தற்காலத்தில் சிறந்த ஆளுமை. சபையானது கிறிஸ்துவின் ஆளுமையை வெளிபடுத்த வேண்டும். விசுவாசிகள் கிறிஸ்துவின் ஆளுமையை வெளிபடுத்துவதினாலேயே பிறரில் விசுவாசம் உண்டாகும்.
– பரிசுத்த ஆவியானவர் சபைக்குள் தங்கியிருந்து கிறிஸ்துவின் ஆளுமையை வெளிபடுத்துகிறார். அதாவது கிறிஸ்துவின் சாயலை வெளிபடுத்துவதே அவரின் திருப்பணி ஆகும்.
விசுவாசிக்கிறவன் பிழைப்பான். விசுவாசியாதவன் சாவான். இயேசுகிறிஸ்துவை அறிவிக்கவே பிதாவினால் சபை நிறுவபட்டுள்ளது. அங்கே ஆவியானவர் தங்கியிருந்து கிறிஸ்துவை அறிவிக்கிறவராக இருக்கிறார். ஆனால் சமீப காலமாக, பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களை குறித்து பிரசங்கித்து கிறிஸ்துவின் சுவிசேஷத்தை களங்கபடுத்துகின்றனர். சபை ஆபிரகாமையோ,தாவீதையோ, எலியாவையோ, வேறு எவரையோ பிரசங்கிக்க அழைக்கபடவில்லை. கிறிஸ்துவை சபைக்குள்ளும், சபைக்கு வெளியேயும் பிரசங்கிக்க வேண்டும்.
ப.ஏ சத்தியங்கள் யாவும் திருஷ்டாந்தங்கள். அவை கிறிஸ்துவிலே நிறைவேறியது.
ப.ஏ இயேசுவை முன்னறிவித்தது.
இயேசு கிறிஸ்து பரலோக செய்தியை அறிவித்தார். சபையானது கிறிஸ்துவை பிரசங்கிக்க வேண்டும்.
விசுவாசம் கிறிஸ்துவிலே திரும்ப வேண்டும். மரிக்காமல் பிழைக்க கிறிஸ்துவை விசுவாசி.
பணம், பொன், மண்ணுக்காக அல்ல அழியாத நித்திய ஜீவன் பெற விசுவாசி. விசுவாசத்தினால் நித்திய ஜீவன்.
உன் உழைப்பால் உயர்வு.
கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பி உம்முடையவர்களானோம். உம்மையே அறிவிக்க கட்டளை பெற்றோம். வரலாற்றில் நிகழ்ந்த சீர்கேடுகளுக்கு தப்பி பிழைப்பதற்கு பதில் அவைகளையே பின்பற்ற ஆரம்பித்தோம். அதனால் தூய்மையான உமது சுவிசேஷம் பழைய ஏற்பாட்டில் பாவ பட்டியல்களினால் தீட்டாகி விட்டது. இப்பொழுதும் உமது ஆவியானவரின் நடத்துதலினால் உணர்த்தபட்டு சுவிசேஷத்தில் விசுவாசம் வைக்க தூண்டபடுகிறோம். எங்களுக்கு உதவியாயிரும். God bless you