அந்த மனுஷன் இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப்போனான்.
man believed the word that Jesus spoke to him, and he went his way. (John 4:50)
Mt8:13; Mt15:28; Mk7:29,30; Mk9:23,24; Lk5:13; Lk7:10; Lk17:14; Act14:9,10; Ro4:20,21; 1Ki14:12; 1Ki17:13-16; Ps40:17; Ps88:10-12; Ecc9:7.
இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார்.அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப்போனான்.
(யோவான் 4:50)
மத்தேயு 8:13; மத்தேயு 15:28; மாற்கு 7:29,30; மாற்கு 9:23,24; லூக்கா 5:13; லூக்கா 7:10; லூக்கா 17:14; அப்போஸ்தலர் 14:9,10; ரோமர் 4:20,21; 1இராஜாக்கள் 14:12; 1இராஜாக்கள் 17:13-16; சங்கீதம் 40:17; சங்கீதம் 88:10-12; பிரசங்கி 9:7.
வார்த்தையை நம்புதல். நம்பக்கூடிய தேவ வாக்குகள்.
– உரைக்கபட்ட வார்த்தை. விவிலியம் எழுதப்படுமுன்பு.
– எழுதபட்ட வார்த்தை. விவிலியம் எழுதப்பட்டபின்பு.
– தரிசன வார்த்தைகள். காட்சியில் கிடைக்கும் வார்த்தைகள்.
– கேட்கப்படும் வார்த்தைகள். இதில் இரு பகுதிகள் உண்டு. ஒன்று தேவன் நேரடியாக பேசுவதை நம்புவது. இன்னொன்று, ஊழியக்காரனின் பிரசங்க வார்த்தையை கேட்டு நம்புவது.
கர்த்தருடைய வார்த்தையானது இந்த 4 முறைகளிலும் நமக்குள் விசுவாசத்தை உண்டுபண்ணுகின்றது.
கர்த்தருடைய வார்த்தைகள் நம்பப்படுவதற்கான காரணங்கள் எவை?
– வார்த்தைகள் தேவனிடமிருந்து வருகின்றது.
– வார்த்தை இயேசுவாக அறியப்படுகின்றார்.
– வார்த்தைக்குள் ஜீவன், வல்லமை, வடிவம் இருக்கிறது.
– கர்த்தரின் வார்த்தை அனேகரின் வாழ்க்கையை மாற்றியிருக்கின்றது.
– வார்த்தையினாலேதான் யாவும் உண்டாக்கப்பட்டுள்ளது.
எனவே நாம் அவரின் வார்த்தைகளை நம்பித்தான் ஆக வேண்டும்.
வார்த்தை என்னில் செயல்பட்டு எனக்குள் நம்பிக்கையை ஊட்ட நான் என்னச் செய்ய வேண்டும்?
– விவிலியத்தை அன்றாடம் வாசித்து, தியானித்து கொள்ளுதல்.
– வாசித்து, தியானித்தவைகளில் இருதயத்தை தொடும் பகுதியை சொந்தமாக்கிக் கொள்ளுதல்.
– சொந்தமாக்கப்பட்டவைகளுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றியமைத்துக் கொள்ளுதல்.
– தன்னில் உண்டாகும் மாற்றத்தின் அடிப்படையில் தனக்கு தானேயும், பிறருக்கும் நேராக உரைப்பது.
– வார்த்தை செயல்வடிவம் பெறுவது வரையிலும் ஜெபத்திலும், ஆவிக்குரிய வாழ்விலும் தரித்திருந்து பொறுமையாய் சகித்துக் கொள்ளுதல்.
நாம் எழிதான இம்முறையை பின்பற்றி வார்த்தையின் மகத்துவத்தைக் காண்போம்.
கர்த்தாவே, உம்மிலிருந்து வெளிப்பட்ட வாக்குகள் என்னை மாற்றியது, உயிர்ப்பித்தது, கட்டி எழுப்பியது, அனல் மூட்டியது, பிரசங்கிக்க வைக்கிறது. அதற்காய் உமக்கு நன்றி. அன்றாடம் நான் கற்கும் இந்த தியானங்கள் என் வாழ்விலும், பிறர் வாழ்விலும் தெய்வீக மாற்றத்தை ஏற்படுத்த பரிசுத்த ஆவியை கொண்டு உதவிடும்.