வார்த்தை மாம்சமாகி நமக்குள் வாசம் பண்ணினார். அவர் மகிமையை கண்டோம்.
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.(யோவான் 1:14)
இவசனத்தில் 5 விஷயங்கள் உள்ளன……
1. வார்த்தை மாம்சமான இயேசு. 1 தீமோத்தேயு 3:16; எபிரெயர் 2:14; எபிரெயர் 5:7; ரோமர் 1:5; கலாத்தியர் 4:5…. மாம்சமானவனுக்காக மாம்சமானார்..
மாம்சத்தில் கெட்டுப்போனவனை மீட்க மாம்சமானார்..
மாம்சத்தில் பாவமின்றி, பிழையின்றி வழமுடியும் என்று காண்பிக்க மாம்சமானார்..
மாம்சம் தேவனுக்கு விரோதமான பகை என்றல்ல – மாம்சம் மகிமைபடுதலுக்கானது என்று காண்பிக்க மாம்சமானார்..
2. கிருபை, சத்தியம் நிறைந்த இயேசு.
சங்கீதம் 85:10; சங்கீதம் 89:14; நீதிமொழிகள் 3:3……
கிரியைகளுக்கு பதில் கிருபை..
பிரமாணத்துக்கு பதில் சத்தியம்..
கிரியை பிரமாணம் இணைந்தபோது மனிதன் தேவனை சந்திக்க முடியலை..கிருபை சத்தியம் இணைந்தபோது மனிதன் தேவனை சந்திக்க முடிந்தது..
கிரியை பிரமாணம் மோசே மூலம் வந்தது.
மோசே மூலம் வந்ததை தேடினால் தேவ கோபம் வெளிப்படும்..
கிருபை சத்தியம் இயேசு மூலம் வந்தது.. இயேசு மூலம் வந்ததை தேடினால் தேவ இரட்சிப்பு வரும்……
3. நமக்குள் வாசம் செய்த இயேசு.
யோவான் 14:17,23; 2கொரிந்தியர் 6:16; 1தீமோத்தேயு 6:16……
பாவம் நிறைந்த இடங்களில்- பாவிகளின் மத்தியில்- அசுத்தம் நிறைந்த இடத்தில்- சாத்தானின் ஆழம் இருந்த இடத்தில்- மரணம் வியாதி நிறைந்த இடத்தில்- பூமியில் வாசம் செய்தார்…..
4. பிதாவின் மகிமையை சுமந்து வந்த இயேசு.
மாற்கு 10:37; லூக்கா 9:28-36; யோவான் 12:41……
பிதாவின் மகிமையை திருமுழுக்கின்போது யோவான் கண்டார்..
மறுரூபமலையில் சீஷர்கள் கண்டனர்..
உயிர்த்தபின்பு பலர் கண்டனர்..
இயேசு பிதாவின் சாயலை தன்மையை ஒளியை கிரியையை செய்தியை சுமந்து வந்தார்…..
5. பிதாவின் மகிமையை வெளிபடுத்திய இயேசு
யோவான் 1:18; யோவான் 11:40; மத்தேயு 16:27; யோவான் 2:11; யோவான் 11:4.
பிதாவின் மகிமையை தம் செய்திகள் மூலம் வெளிபடுத்தினார்…அற்புதங்கள் மூலம் வெளிபடுத்தினார்….ஜனங்கள் பிதாவின் மகிமையை கிறிஸ்துவில் கண்டு தேவனை மகிமைபடுத்தினர்..
இன்று ….நீங்கள் மீட்கபட்டதினால் உங்கள் மூலம் கிறிஸ்து மகிமைபடுகிறாரா?….
அன்பானவர்களே…
இதற்குள் ஆழமான ரகசியங்கள் உள்ளன…
தேடுங்கள்…தேடி கண்டு பிடியுங்கள்….
அவைகள் இந்தியா மீட்படைய கூடியதாக இருக்கும்..
நீங்களும் ஆவியில் பெலனடைவீர்கள்….