பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்

பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்.

Little children, let no one deceive you. (1யோவான் 3:7)

1John 2:26; Matthew 2:16; Matthew 24:5,24; Mark 10:19; Acts 5:2; Romans 16:18; Ephesians 4:14; Collossians 2:4; 2Thes 2:12; 1Timothy 4:1; 1John 4:6.

பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள். நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான். (1 யோவான் 3:7)

1யோவான் 2:26; மத்தேயு 2:16; மத்தேயு 24:5,24; மாற்கு 10:19; அப்போஸ்தலர் 5:2; ரோமர் 16:18; எபேசியர் 4:14; கொலோசெயர் 2:4; 2தெசலோனிக்கேயர் 2:12; 1தீமோத்தேயு 4:1; 1யோவான் 4:6.

வஞ்சிக்கப்படாதிருங்கள்.

ஆதியில் சர்ப்பம் ஏவாளை வஞ்சித்ததினால் பாவம் உலகில் உண்டானது. அன்று முதல் இன்று வரையிலும் வஞ்சிக்கிறவர்கள் பூமியில் இருக்கிறார்கள். வஞ்சிக்கிறவர்களின் வஞ்சனைகளுக்கு தப்பி பிழைத்து வாழ்வது எளிதான காரியம் அல்ல. என்றாலும் தேவன் தமது ஆவியையும், வசனத்தையும் தந்து வஞ்சனைகளிலிருந்து தப்பி வாழ வழி வகுத்துள்ளார்.

பிசாசு மனிதர்களை வஞ்சிக்கிறது. உலகத்தையும் வஞ்சிக்கிறது. இவைகளின் மாயவலையில் சிக்கி வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையுடன் வாழ வேண்டியது அவசியமாகும். பிசாசானவன் நேரடியாக வஞ்சிக்கிறான். நாம் ஆசைபடும் பொருட்களைக் கொண்டு வஞ்சிக்கிறான். நாம் நேசிக்கிறவர்களைக் கொண்டு வஞ்சிக்கிறான். பிசாசானவன் தந்திரமுள்ளவனாயிருப்பதினால் அவனுடைய யோசனைகளுக்கு உடன்படாதிருப்பது நல்லது. மத்தேயு 4:1-11.

உலகம் வஞ்சிக்கிறது. காணப்படுகிற இயற்கை யாவும் தேவனுடைய மகிமையையும், ஞானத்தையும் வெளிப்படுத்தியது உண்மை. தன்னை பணிந்துக்கொள்ளும்படி உலகமோ, இயற்கையோ ஒருபோதும் கேட்டதில்லை. ஆனால் இயற்கையை ஆராதிக்கும்படி, பணிந்துக்கொள்ளும்படி பிசாசானவன் மனிதர்களின் உள்ளங்களில் தூண்டுதல்களை உண்டுபண்ணி மாயம் பண்ணுகிறான். இயற்கையை வழிபடுவது வஞ்சக ஆவியின் வேலையாகும். சர்வ சிருஷ்டிகளும் தேவபிள்ளைகள் வெளிப்பட காத்திருக்கும்போது இயற்கையை வழிபட தூண்டுவது மாயமாகும். ரோமர் 8:19-22.

மாம்சமானவனாகிய மனிதர்கள் வஞ்சிக்கிறார்கள். நண்பர்களாயிருந்து வஞ்சிக்கிறார்கள். உறவுகளாயிருந்து வஞ்சிக்கிறார்கள். அதிகாரத்திலிருந்துக்கொண்டு வஞ்சிக்கிறார்கள். இக்காலத்தில் வஞ்சகத்தினால் பிடிபட்ட மனிதர்கள் ஏராளமாய் உள்ளனர். பொருளாசையினிமித்தம், பண ஆசையினிமித்தம், பதவிகளினிமித்தம், படிப்புகளினிமித்தம், பொய்யான உபதேசங்களினிமித்தம், ஐசுவரிய மயக்கத்தினிமித்தம் வஞ்சிக்கிறவர்கள் பெருகிவிட்டார்கள். மனிதர்களின் வஞ்சகத்துக்கு அடிப்படை காரணம் பொருளாசையும், பண ஆசையுமேயாகும். லூக்கா 12:15; எபேசியர் 5:3; கொலோசேயர் 3:5; 1தீமோத்தேயு 6:10.

கள்ள உபதேசங்கள், கள்ள தீர்க்கதரிசனங்கள், கள்ள அப்போஸ்தலர்கள், கள்ள போதகர்கள், கள்ள தீர்க்க தரிசிகள் போன்றோர் மாயம் பண்ணி வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள். இவர்களில் இரண்டு விதமான பாவ கறைகள் காணப்படும். பொருளாசை, வேசித்தன ஆவி. இத்தகைய நிலைமையை ஓசியா தீர்க்கதரிசனத்தில் காணமுடிகின்றது. தங்களை இச்சைக்கேற்ற போதகர்களாக விளங்கச் செய்கிறார்கள். இவர்களின் போதகங்கள் எளிதில் பலவீனமான விசுவாசம் கொண்டுள்ளவர்களை கவர்ந்திழுக்கும். ஆவியானவரையும், இயேசு கிறிஸ்துவையும், விவிலியத்தையும் மையப்படுத்தாத எந்த உபதேசமும் வஞ்சக போதனையேயாகும். சர்ப்பத்தின் போதனையும் இவ்வாறே இருந்தது. எக்காலத்திலும் இல்லாத அளவுக்கு கள்ள உபதேசம் சபைகளில் நதியாய் பெருகிக்கொண்டேயிருக்கின்றது.

சத்தியத்தில் நிலைநிற்கிறோம் என்று சொல்கிறவர்கள்கூட வஞ்சிக்கிற ஆவிகளுக்கு இடம் கொடுத்து பிசாசின் மாயவலையில் சிக்குண்டு கிடக்கிறார்கள். ஊழியக்காரர்கள் பணத்தை நம்பி எவ்வளவாய் ஓடுகிறார்கள் என்பதை சோதித்துப்பார்க்கவே கொரோனா போன்ற வைரஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கேள்வி. பணம் ஐசுவரியம் போன்றவைகளை மையமாக வைத்து போதிக்கும் போதனைகளைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். எபிரேயர் 3:13…

நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாய் பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைகொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார். எபேசியர் 4:14,15…

இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால், சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு, நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள். 1பேதுரு 2:1-3…

ADD YOUR COMMENT

Powered By Indic IME