என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்காதவனை என் வசனமே நியாயந்தீர்க்கும்.
He who rejects Me, and does not receive My words, has that which judges him. (John 12:48)
Deuteronomy 18:19; 1Samuel 8:7; 1Samuel 10:19; Isaiah 53:3; Matthew 21:42; Mark 8:31; Mark 12:10; Luke 7:30; Luke 9:26; Luke 10:16; Acts3:23; Hebrew 10:29-31; Hebrew 12:25; 2Peter 2:20-22.
என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது, நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். (யோவான் 12:48)
உபாகமம் 18:19; 1சாமுவேல் 8:7; 1சாமுவேல் 10:19; ஏசாயா 53:3; மத்தேயு 21:42; மாற்கு 8:31; மாற்கு 12:10; லூக்கா 7:30; லூக்கா 9:26; லூக்கா 10:16; அப்போஸ்தலர் 3:23; எபிரெயர் 10:29-31; எபிரெயர் 12:25; 2பேதுரு 2:20-22.
வசனமே நியாயந்தீர்க்கும்.
இரட்சிக்க வந்தவரை சிட்சைக்கொடுத்து தள்ளிவிடுவதும், நற்செய்தியைக் கொடுத்து ஆறுதலளிக்கும் வார்த்தைகளை முதுகுக்கு பின்னால் எறிந்து விடுவதும் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவானதே.
கர்த்தருடைய வசனத்தினால் யாவும் உருவாக்கப்பட்டதானால் அதே வசனத்தினால் யாவும் உருவழிக்கப்படும். அவருடைய வசனத்தினால் ஆசீர்வாதம் உண்டானதானால் அவருடைய வசனத்தினால் சாபமும் உண்டாயிருக்கும். அதாவது அவருடைய வசனத்தை ஏற்றுக்கொள்ளுவதையும், ஏற்றுக்கொள்ளாததையும் பொறுத்தே இவ்வுலகத்தின் காரியங்கள் நடந்தேறும்.
நிராகரிக்கப்பட்ட வசனத்தினால் பாவங்களும், துன்மார்க்கங்களும், பொல்லாப்புகளும், அசுத்தங்களும் உண்டாகி நியாயத்தீர்ப்புக்கு காத்துக்கொண்டிருக்கிறது.
எவரொருவர் அவருடைய வசனத்தை நிராகரிக்கின்றாரோ அவரின் துன்மார்க்கத்தின் உளையே அவரில் காணப்படும். நறுமணத்துக்கு பதில் துர்மணம் வீசும். இதன் இறுதிநிலை நியாயத்தீர்ப்பே ஆகும்.
வசனத்தை தள்ளிவிடுவதினால் பரிசுத்த ஆவியை அசட்டை செய்கிறோம். பரிசுத்த ஆவியை அசட்டை செய்வதினால் தேவகுமாரனை அவமதிக்கிறோம். தேவகுமாரன் அவமதிக்கப்படுவதினால் தேவனும் தேவ நாமமும் தூஷிக்கப்படுகிறது. தேவநாமம் தூஷிக்கப்படுவதினால் தேவகுமாரனுடைய சபை துன்மார்க்கர்களின், காசுகடைகாரர்களின் வீடாகின்றது. அவருடைய ஜெபவீடு துன்மார்க்கத்தின் வீடாக மாறுவதினால் நியாயத்தீர்ப்பை அவருடைய வீட்டிலிருந்து பிரசங்கிக்கப்பட்ட வசனத்தை கொண்டு துவங்கி நியாயம் விசாரிக்கின்றார்.
வசனம் நியாயந்தீர்க்கும். வசனம் ஒன்றுமில்லாமையில் எல்லாவற்றையும் உண்டாக்கியதுபோல கண்ணுக்கு தெரியாத நரகத்தையும் பாதாளத்தையும் கொண்டு வரும். அதிலிருந்து ஒருவரும் தப்ப முடியாது. அவருடைய வசனம் செல்லாத இடமில்லை. எனவே அவருடைய நியாயத்தீர்ப்புக்கு ஒருவரும் ஒன்றும் தப்பமுடியாது.
நாம் கையில் சுமக்கும் விவிலியமே நம்மை நியாயந்தீர்க்கும் என்பதை அறிந்து ஆவியானவரால் புதுப்பிக்கப்பட்ட மனசாட்சியை உடையவர்களாய் வாழுவோம்.
ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு. எபிரேயர் 6:4-8.