வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்

வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.

My little children, let us not love in word or in tongue, but in deed and in truth. (1John 3:18)

Matthew 25:41-45; Romans 12:9; 1Corithians 13:4-7; Galathians 5:13; Galathians 6:1,2; Ephesians 4:1-3,15; James 2:14-16; Exodus 33:21.

என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். (1 யோவான் 3:18)

மத்தேயு 25:41-45; ரோமர் 12:9; 1கொரிந்தியர் 13:4-7;கலா5:13;6:1,2;எபே4:1-3,15;யாக்2:14-16;யாத்33:21.

உண்மையான அன்பு.

இப்பகுதியில் நமது அன்பு 4 விதங்களில் வெளிப்படுகிறது. வசனத்தினால் என்றால் வார்த்தைகளினால் அன்புகூருதல். இல்லையெனில் கர்த்தருடைய வாக்கியத்தை சொல்லளவில் சொல்லி அன்பு காட்டுதல். நாவினால் என்றால் வாயளவில் என்று பொருள். இந்த இரண்டையும் சேர்க்து கவனிக்கும்போது வாயின் வார்த்தைகளினால், நாவின் சொற்களினால் கர்த்தருடைய வாக்கியங்களை நாவினால் மட்டுமே கூறுதல் ஆகியவை உண்மையான அன்பு அல்ல என்பதாகும். இந்த அன்பு பிறருக்குள் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறதோ என்னவோ, அன்புகூருகிறேன் என்று வார்த்தையளவில் சொல்லுகிறவனில் வீழ்ச்சியையும் தெய்வதண்டனைக்குடபடுதலையும் ஏற்படுத்தும்

கிரியையினால் அன்புகூருதல் என்பது செயலகளினால் அன்புகூருதலை காண்பிப்பதாகும். நடவடிக்கைகள் யாவும் அன்பை வெளிபடுத்தும். பிரயாசங்கள், நற்கிரியைகள், காணிக்கைகள், உதவி செய்தல் போன்றவைகள் யாவும் அன்பின் கிரியைகள் ஆகும். உண்மையினால் அன்புகூருதல் என்பது உளபூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும், பொய்மையற்றதாகவும் காணப்படுகிறது. இவையிரண்டும் இணைந்து தேவனின் அன்பையும் கிறிஸ்துவின் அன்பையும் வெளிபடுத்துகிறது. தேவன் தமது மகனை நமக்காய் கொடுத்தார். மகனோ தமது ஜீவனை நமக்காய் கொடுத்தார். இந்த அன்பினிமித்தம் கிறிஸ்துவை பின்பற்றியவர்கள் புறஜாதியாரின் மீட்புக்காக தங்கள் உடமைகளையும் உயிரையும் ஒப்புக்கொடுத்து தேவனின் அன்பை வெளிபடுத்தினார்கள். உணர்ச்சி பூர்வமான அன்பினால் அல்ல, உணர்வுபூர்வமான அன்பை வெளிபடுத்தினார்கள். இந்த அன்பு உண்மை அன்பாகும். இதினிமித்தம் அனேகர் தங்களை இரத்தசாட்சிகளாக ஒப்புக்கொடுத்தார்கள்.

முந்தியது மாய்மால அன்பாகும். பிந்தியது உண்மை அன்பாகும். இயேசு கிறிஸ்துவின் மரணத்தினால் உணடான மீட்பு ஆவியுலகில் நடந்த வெறும் காட்சி செயலல்ல.. நிகழ் உலகத்தில் நடந்த உண்மை சம்பவமாகும். ஆகவே நமது அன்பும் நிகழ் உலகத்தில் காட்டப்படும் வரலாற்று செயலாகும்.

கேள்வி. உண்மை அன்பு உயிரை காக்கும், மாய்மால அன்பு உயிரை மாய்க்கும். விளக்குக.

ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள். உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்து, அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத் தின்னும். கடைசிநாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள். இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய, கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது. பூமியிலே நீங்கள் சம்பிரமமாய் வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்; கொழுத்தவைகளை அடிக்கும் நாளில் நடக்கிறதுபோல உங்கள் இருதயங்களைப் போஷித்தீர்கள்.
நீதிமானை நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்துக் கொலைசெய்தீர்கள்; அவன் உங்களோடே எதிர்த்து நிற்கவில்லை.
இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே. சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். யாக்கோபு 5:1-9.

ADD YOUR COMMENT

Powered By Indic IME