யோனாவை போல…. மனுஷகுமாரனும் இரவும் பகலும் 3 நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்…
யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். (மத்தேயு 12:40)
யோனா 1:11-2:10; சங்கீதம் 63:9; மத்தேயு 12:38-41; மத்தேயு 16:4,21; மத்தேயு 17:23; மத்தேயு 27:62-66; லூக்கா 11:29-30; யோவான் 2:19; எபேசியர் 4:8-10; பிலிப்பியர் 2:8……
யோனா மீனால் விழுங்கபட்டான்……
விலகி போகுதல் பின் வாங்குதலாகும்….
பின்வாங்குதல் விழுங்கபடுவதற்கு ஏதுவாகும்…..
விழுங்கபடுதல் நரக ஆக்கினைக்கு உட்படுதலாகும்…..
விழுங்கபடுதல் … விவிலிய ஆதாரங்கள்..
1.பாவத்தினால் மரணம்…இதுவும் விழுங்கபடுதலே…..ரோமர் 6:23……
2.அடக்கம் பண்ணப்படுதலும் விழுங்கபடுதலே….யோவான் 19:40; ரோமர் 6:4…
3.பாதாளத்தில் படுக்கைபோடுதலும் விழுங்கபடுதலே..சங்கீதம் 30:3…..
4.மீனின் வயிற்றில் இருப்பதும் விழுங்கபடுதலே…யோனா….
5.விலகி போகிறவர்கள், பின்வாங்கிப்போகிறவர்களும் விழுங்கபடுகிறார்கள்…..
6.கோராகின் கூட்டம் விழுங்கபட்டது..எண்ணாகமம் 16:32……
7.விழுங்கிப்போடும் பூமியே ஒருநாள் அழிவு என்பதால் விழுங்கிப்போடப்படும்..2 பேதுரு 3:10….
8.கிறிஸ்து விழுங்கப்பட்டிருந்தாலும் மீண்டவராய் விழுங்கப்பட்டவர்களையும், விழுங்கப்படப்போகிறவர்களையும் தப்புவிக்கிறார்..2கொரிந்தியர் 1:10; அப்போஸ்தலர் 26:18….
கிறிஸ்து விழுங்கப்பட்டு…….
அ.விழுங்கப்பட்டவர்களை மீட்டார்..1 பேதுரு 3:18-20…..
ஆ.விழுங்கப்படப்போகிறவர்களை தப்புவிக்கிறார்..சங்கீதம் 86:13……
இ.இறங்கி,ஏறி வரங்களைக் கொண்டு வந்தார்.எபேசியர் 4:8-10……
ஈ.பாதாளம்,மரணம் மீது ஜெயம் எடுத்தார்.1கொரிந்தியர் 15:55-57; வெளி 20:14…..
உ.சாத்தானின் ஆழங்களை அறிந்து,இன்று தமது ஆவியின் மூலமாகதமது ஜனங்களுக்கு வெளிபடுத்துகிறார்.வெளி 2:24; 1கொரிந்தியர் 2:7-16….