யூதருடைய இராஜாவே வாழ்க என்று சொல்லி அவரைக் கையினால் அடித்தனர்

யூதருடைய இராஜாவே வாழ்க என்று சொல்லி அவரைக் கையினால் அடித்தனர்.

Hey said,Hail, King of the Jews!.And they struck Him with their hands. (John 19:3)

Matthew 26:49; Matthew 27:29; Mark 15:16-20; Psalm 38:11-15; Proverb 12:17; Proverb 14:25; Proverb 27:6; Philippians 1:18; Colossians 2:4; 1Thes 2:3; 2The 2:12.

யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள். (யோவான் 19:3)

மத்தேயு 26:49; மத்தேயு 27:29; மாற்கு 15:16-20; சங்கீதம் 38:11-15; நீதிமொழிகள் 12:17; நீதிமொழிகள் 14:25; நீதிமொழிகள் 27:6; பிலிப்பியர் 1:18; கொலோசெயர் 2:4; 1தெசலோனிக்கேயர் 2:3; 2தெசலோனிக்கேயர் 2:12.

வஞ்சகப் புகழ்ச்சி:

யூதருடைய இராஜாவாக வந்த மேசியாவாகிய இயேசுவை இஸ்ராயேலர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசு கிறிஸ்துவின் இராஜ மேன்மை துறப்பை புரிந்து கொள்ளாத ஆட்சியாளர்களும், அவர்களுடைய அதிகாரிகளும், சிப்பாய்களும் இயேசுவை இராஜா என்று சொல்லி இகழ்கின்றார்கள். நெஞ்சில் துரோகத்தை – கசப்பை – வெறுப்பை வைத்துக் கொண்டு வாய் நிறையை புகழ்மாலை சூட்டுகிறவர்களாய் போர்சேவகர்கள் காணப்படுகின்றனர். சேவகர்களாகிய எங்களுக்கே எதிர்த்து நிற்க பெலமில்லாத இராஜா என்றும், இவர் வாய் சொல்லில் மட்டுமே இராஜா என்றும் கூறி ஏளனபடுத்துகின்றனர். கொல்லுவதையும், காயபடுத்துவதையும் மனதில் வைத்து புகழ்மாலை சூட்டுகின்றனர்.

ஆதியிலே சர்ப்பத்தின் வஞ்சகத்தினால் ஏவாள் ஏமாற்றப்பட்டாள். பாவம் உலகில் வந்தது. உலகத்தில் மக்களோடே – மக்களின் கலாச்சாரங்களோடே – மக்களின் பழக்கவழக்கங்களோடே பாவம் பின்னி பிணைந்து மனுகுலத்தை ஏமாற்றி வஞ்சித்து நரகிற்கு வழிகாட்டியது. தேவன் தமது நியாயபிரமாணத்தைக் கொடுத்து மனதினுள்ளும், மார்க்கங்களினுள்ளும், கலாச்சாரங்களினுள்ளும் மறைந்து கிடந்த பாவத்தை வெளியே கொண்டுவந்தார். இதனால் பாவம் இன்னதென்று அறியப்பட்டது.

வெளியரங்கமாக்கப்பட்ட பாவத்தை அழிக்க – அகற்ற தேவன் திரும்பவும் தமது குமாரனாகிய கிறிஸ்துவை உலகிற்கு அனுப்பினார். இயேசு கிறிஸ்துவோ தம்மை பலியாக கொடுத்து பாவத்துக்கு முடிவுண்டாக்கினார். நியாயபிரமாணத்துக்குட்படாத புறஜாதியாரிடையில் கிறிஸ்துவாகிய சுவிசேஷம் புறப்பட்டு சென்று புறஜாதிகளுக்குள் மறைந்திருந்த – இருளுக்குள் மறைந்திருந்த பாவத்தை வெளிபடுத்தியது. நியாயபிரமாணம் பாவத்தை வெளியரங்கமாக்குதலை மாத்திரம் செய்ய, சுவிசேஷமோ பாவத்தை வெளிபடுத்தி கிறிஸ்துவை கொண்டு முடிவையும் உண்டாக்கியது.

இந்த இரட்சண்ய கிரியையை செய்த இயேசு இராஜாவாக வரப்போகிறார். இவர்கள் ஏற்றுக்கொண்டாலும் சரி அல்லாவிட்டாலும் சரி, அவர் இராஜாவாக வரப்பொகிறார். உள்ளங்களிலும், இல்லங்களிலும், தெருக்களிலும், கிராமம்ங்களிலும், பட்டணங்களிலும் இயேசுவே இராஜா என்ற தொனி கேட்கப்படப்போகின்றது.

இயேசுவை கேலியும் கிண்டலும் பேசுகின்ற வாய்களே இயேசுவை புகழ்ந்து பேசும் காலம் வரப்போகின்றது.

நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.

இதோ, கர்த்தருடைய நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும். எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை. கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார். அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.
அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும். சகரியா 12:10, 14:1-5,9.

ADD YOUR COMMENT

Powered By Indic IME