மேன்மையான சாட்சி - நான் செய்யும் என் கிரியைகள்

மேன்மையான சாட்சி – நான் செய்யும் என் கிரியைகள்.

I have a greater witness than John’s;the very works that I do. (John 5:36)
Jn5:32; 1Jn5:9,11,12; Jn3:2;9:30-33; Jn10:25,32,37,38; Jn11:37; Jn14:10,11; Jn15:24; Jn17:4; Act2:22; 1Jn2:1; Mt11;2-6.

யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு,அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று எனனைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறது. (யோவான் 5:36)

யோவான் 5:32; 1 யோவான் 5:9,11,12; யோவான் 3:2;9:30-33; யோவான் 10:25,32,37,38; யோவான் 11:37; யோவான் 14:10,11; யோவான் 15:24; யோவான் 17:4; அப்போஸ்தலர் 2:22; 1 யோவான் 2:1; மத்தேயு 11;2-6.

மேன்மையான சாட்சி:

யோவான் 5:32 – மெய்யான சாட்சி, 1 யோவான் 5:9 – அதிகமான சாட்சி, யோவான் 10:25 – கிரியைகளே சாட்சி.

இயேசு செய்த கிரியைகள் அவரை குறித்து சாட்சி கொடுக்கிறது. இயேசுவை குறித்து பலர் பல சூழல்களில் சாட்சி கூறியிருந்தும் அவைகளில் உள்ள மறைபொருளை நாம் அறியாமல் இருக்க முடியாது.

இந்த சாட்சியங்கள் யாவுமே இயேசு ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்பதாகும்.

பேதுருவுக்கு பிதாவினால் வெளிபடுத்தப்பட்ட சாட்சியமும் – அறிக்கையும் இதுவே. மத்தேயு 16:16,17; யோவான் 6:69.

இயேசுவாகிய மூலைகல்லின்மேல் இந்த அறிக்கைதான் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை செய்து வாழ்பவர் மட்டுமே இந்த அறிக்கையின்மேல் கற்களாய் வைக்கப்பட்டு கிறிஸ்துவின் சரீரமாகிய சபை கட்டப்படும்.

விவிலியம் எழுதபட்டதின் நோக்கமும் இதுதான் என்று யோவான் கூறுகின்றார். யோவான் 20:31.

மாம்சத்தில் வந்த இயேசுவே ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று அறிக்கை பண்ணுவதற்குதான் பரிசுத்த ஆவி தரப்பட்டுள்ளார்.1 யோவான் 4:2. இந்த அறிக்கை செய்யாது வாழ்பவர் யாவரும் அந்திகிறிஸ்துவின் ஆவி உடையவர்களே.
இதனை பின்னர் தியானிக்கலாம்.

இயேசுவின் கிரியைகளே அவரை ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று வெளிப்படுத்தியது.

அவர் செய்த கிரியைகள் என்ன?
இயேசுகிறிஸ்து 3 கிரியைகளை செய்துள்ளார்.

1. அற்புதங்களும், அடையாளங்களும். அவர் அற்புதமானவர் ஆகையினால் அற்புதங்களை செய்தார். பலவிதமான அற்புதங்கள் சுவிசேஷங்களில் உண்டு.

2. நற்கிரியைகள். இயேசுவின் உபதேசத்தின் ஒருபகுதியும் நற்கிரியைகளை செய்யவேண்டும் என்பதே. அவர் பலவிதமான நற்கிரியைகளை செய்துள்ளார். அவர் நன்மை செய்கிறவராக சுற்றிதிரிந்தார் என்று அப்போஸ்தலர் 10:38 கூறுகின்றது. சபையின் முக்கிய உபதேசமும் இதுவே.

3. இயேசு செய்த கிரியைகளிலெல்லாம் முக்கியமான கிரியை இரட்சண்ய கிரியை ஆகும். அவரின் உயிர்மூச்சு இதுதான். எல்லா கிரியைகளும், உபதேசங்களும் இந்த மையபொருளை சுற்றிதான் ஓடும். இயேசுவே இரட்சகர் – உலக மீட்பர். தன்னை பலியாக தந்து இந்த கிரியையை செய்து முடித்து வெற்றி வேந்தராய் உயர்ந்து நிற்கிறார்.

உலகம் இரட்சிக்கப்பட கிறிஸ்துவின் ஸ்தானத்தில் நின்று தன்னை பலியாகக் கொடுப்பவனே உண்மை கிறிஸ்தவன்.

கர்த்தாவே, உமது கிரியைகள் அதிசயம், ஆச்சரியம், பெரியது. உமது மகனைகொண்டு நீர் செய்துள்ள இந்த 3 கிரியைகளும் அவரையன்றி வேறொரு இரட்சகர் இந்த பூமியில் இல்லையென்று விளங்க செய்துள்ளீர். நாங்களும் அவர் வழிநின்று உம்முடைய விருப்பம் செய்ய எங்களை உமது ஆவியினால் நிரப்பி அபிஷேகித்து பலபடுத்தும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME