மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரம் கொடுத்தீர்

மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரம் கொடுத்தீர்.

As You have given Him authority over all flesh. (John 18:2)

John 3:35; John 5:21-29; Matthew 11:27; Matthew 28:18; 1Corinthians 15:25; Ephesians 1:20-23; Philippians 2:10,11; Hebrew 1:2; Hebrew 2:8,9; 1Peter 3:22.

பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். (யோவான் 17:2)

யோவான் 3:35; யோவான் 5:21-29; மத்தேயு 11:27; மத்தேயு 28:18; 1கொரிந்தியர் 15:25; எபேசியர் 1:20-23; பிலிப்பியர் 2:10,11; எபிரெயர் 1:2; எபிரெயர் 2:8,9; 1பேதுரு 3:22.

எல்லாம் இயேசுவுக்கு கீழே:

அதிகாரம், வல்லமை, உரிமை யாவும் தேவனிடமிருந்து வந்தது. முடிவில் அவரிடமே சென்று முடிவு பெறும். பிசாசானவன் தேவனிடமிருந்து வெளியேற்றப்பட்டபின்பு தனக்கென்று அதிகாரங்களையும், வல்லமையையும், உரிமையையும் பெறுவதற்காக பாவத்தை – மீறுதலை பயன்படுத்தினான். தேவனிடமிருந்து மனிதர்க்கு தரப்பட்ட ஆளுகைக்குட்பட்ட மூன்றும் சாத்தானிடம் கைமாறியது. அதிலிருந்து அந்த ஆளுகையின் மூன்றையும் தேவனுக்கும் தேவனின் மனிதர்களுக்கும் எதிராக பயன்படுத்தி வருகின்றான் பிசாசு. பிசாசை தோற்கடித்து அவனிடமிருக்கும் அதிகாரங்கள் அனைத்தையும் உரிந்துகொண்டு அவனை வெளியரங்க கோலமாக்கி நிராயுதபாணியாக்குவதற்காகவே இயேசு பூமிக்கு அனுப்பப்பட்டார்.

கர்த்தராகிய இயேசு பிறப்பிலேயே ஆளுகை உடையவர்தான். என்றாலும் ஆதாம் கீழ்படியாமையினால் இழந்ததை புதிய ஆதாமாக கீழ்படிந்து சொந்தமாக்கிக் கொள்ள விரும்பினார். இயேசுகிறிஸ்து பிதாவுக்கு கீழ்படிந்து எல்லா அதிகாரங்களையும் உடையவராயிருக்கின்றார். இயேசு கிறிஸ்து பிதாவின் விருப்பப்படி இரட்சண்ய கிரியையை செய்து முடிப்பார் என்று முன்னதாகவே அறிந்தவராய் எல்லா அதிகாரங்களையும் இயேசுவுக்கு கொடுக்கின்றார். இயேசு கிறிஸ்து அதிகாரம், வல்லமை, உரிமை உடைய ஆளுகிறவரே.

மாம்சமானவர்கள் சாத்தானிடமிருந்து ஆளுகையை பெற்று அதிகாரம், வல்லமை, உரிமை உடையவர்களாக கானப்படுகின்றனர். அவர்கள் தங்கள் பிறப்பிலே ஆளுகை உடையவர்களாய் தங்களை காண்பிக்க விரும்புகின்றனர். மாம்சமானவர்கள் தங்களிடம் உள்ள அதிகாரங்கள் கானல்நீர் என்று தெரிந்துகொள்ளாதபடிக்கு பிசாசானவன் அவர்களின் கண்களை குருடாக்கியுள்ளான். அவர்களின் கண்கள் ஜீவஒளியாகிய இயேசுகிறிஸ்துவினால் திறக்கப்படும்போது தாங்கள் பொய்மையின் வழியில் சென்றுள்ளோம் என்பதை அறிந்தவர்களாய் இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்களில் ஒருவன் இயேசுகிறிஸ்து ஆளுகையாளராய் வருவதை கண்டு உம்முடைய இராஜ்யத்தில் என்னையும் இணைத்துக்கொள்ளும் என்று மன்றாடியதுபோல் மன்றாடுவார்கள்.

மாயை விலகும்போது மாம்சம் புல்லைபோலாகும். நிராகரிக்கப்பட்ட இயேசு அதிகாரமுடையவராய் உயர்ந்திருப்பார். ஆளுகைகளும், அதிகாரங்களும், உரிமைகளும், வல்லமைகளும் அவருக்கு அடக்கமே. மனிதனையும், உலகத்தையும், பிசாசையும் நியாயந்தீர்க்கப் போகிற கர்த்தராகிய இயேசுவை கெட்டியாய் பிடித்துக் கொள்வோம்.

அவர் எழும்பினால் யார் அவர் முன் நிலை நிற்பான்?

மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டியது. பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம். சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும் போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார். 1கொரிந்தியர் 15:21-28.

ADD YOUR COMMENT

Powered By Indic IME