நாம் நித்தியஜீவன் அடைய மனுஷகுமாரன் உயர்த்தபட வேண்டும்.
பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.
சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும். (யோவான் 3:13,14)
எண்ணாகமம் 21:4-9; யோவான் 8:28; யோவான் 12:32-34; யோவான் 17:2,3; லூக்கா 18:31-33; லூக்கா 24:25-27,44-49; அப்போஸ்தலர் 2:23-25
அவமானத்தால் கிறிஸ்து உயர்த்தப்படவில்லை.
இயேசு கிறிஸ்து இரு விதங்களில் உயர்த்த படுகிறார்.
1.சிலுவையில் உயர்த்த படுதல். யோவான் 3:14,15; எண்ணாகமம் 21:4-9
2.எல்லா நாமங்களுக்கும் மேலாக உயர்த்த படுதல். பிலிப்பியர் 2:9-11
எனவே நாமும்
1.அவரை நோக்கி இருக்க வேண்டும். சங்கீதம் 37:24
2.அவரை நோக்கி பார்க்க வேண்டும். சங்கீதம் 34:5
3.அவரை நோக்கி கூப்பிட வேண்டும். சங்கீதம் 30:2
அன்று கொள்ளி வாய் சர்ப்பத்தால் கடிபட்ட இஸ்ராயேலர் வெண்கல சர்ப்பத்தை நோக்கி பார்த்து பிழைத்தனர்.
இன்று பாவத்தால் கடிபட்டவர்கள் சிலுவையில் உயர்த்தபட்ட கிறிஸ்துவை நோக்கி பார்த்து பிழைக்காமல் ஜனங்கள் சிலைகளையும் பாம்புகளையும் நோக்கி பார்க்கின்றனர்.