ஜாதியை திரளாக்கி மகிழ்ச்சியை பெருகபண்ணினீர்

ஜாதியை திரளாக்கி மகிழ்ச்சியை பெருகபண்ணினீர்

அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர், அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்குமுன்பாக மகிழுகிறார்கள்.(ஏசாயா 9:3)

ஏசாயா 12:1; ஏசாயா 25:9; ஏசாயா 35:2,10; ஏசாயா 54:1; ஏசாயா 55:12; ஏசாயா 61:7,10; ஏசாயா 65:18; ஏசாயா 66:10; சங்கீதம் 4:7; அப்போஸ்தலர் 8:8; பிலிப்பியர் 4:4.

இருளில் உள்ள ஜனங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து அறுப்பில் மகிழ்வதுபோல அவர்களை மகிழச்செய்கிறார்…

தேவனால் பெருகச்செய்யப்பட்ட இஸ்ராயேலரை எகிப்திலே அதம்பண்ண நினைத்த பார்வோனை கர்த்தர் அதம்பண்ணினார்.

தேவனால் தரப்பட்ட மகிழ்ச்சியை சிறையிலும் இழக்காமல் பிலிப்பு சபையில் மகிழ்ச்சி பெருகும்படி கடிதம் எழுதுகிறார்.

மகிழ்ச்சியின் பெருக்கத்தினால்
1.தேவனை துதிக்கின்றோம்.
2.தேவனோடு நடக்கின்றோம்.
3.தேவனை பிறருக்கு கொடுக்கின்றோம்.
4.தேவனுக்காய் தாராளமாக கொடுக்கின்றோம்.
5.தேவனுக்காய் பலியாகின்றோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME