மரியாள் திரும்பிப் பார்த்து போதகரே என்று அழைத்தாள்.
Jesus said to her, Mary!. She turned and said to Him, Teacher. (John 20:13)
John 10:3; Luke 10:41; Acts 9:4; Acts 10:3; Genesis 22:1,11; Exodus 3:4; Exodus 33:17; 1Samuel 3:6,10; Isaiah 43:1; Hebrew 6:1-8.
இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.(யோவான் 20:13)
யோவான் 10:3; லுக்கா 10:41; அப்போஸ்தலர் 9:4; அப்போஸ்தலர் 10:3; ஆதியாகமம் 22:1,11; யாத்திராகமம் 3:4; யாத்திராகமம் 33:17; 1சாமுவேல் 3:6,10; ஏசாயா 43:1; எபிரெயர் 6:1-8.
அழைக்கும் இயேசுவும், திரும்பிப் பார்த்த மரியாளும்.
இயேசு கிறிஸ்துவிடமே இயேசுவின் மரித்த சரீரத்தை பார்க்கும்படியாக கேட்ட மரியாளை இயேசு கிறிஸ்து மரியாளே என்று அழைத்தார். இந்த அழைப்பின் சத்தத்தை உணர்ந்துக் கொண்ட மரியாள், புரிந்துக் கொண்ட மரியாள் திரும்பிப் பார்த்து போதகரே என்று மறுமொழி கொடுத்தாள். இப்பகுதியில் காணப்படும் இரு விஷயங்களை நமது வாழ்வின் மையத்தில் வைத்து சிந்தனைச் செய்வோமாக.
முதலாவது, இயேசுவின் அழைப்பு. கர்த்தராகிய இயேசு பாவிகளை மட்டுமல்ல தாம் நேசித்தவர்களையும், தமக்கு கீழ்படிகிறவர்களையும் அழைக்கிறார். யார் அவரின் அழைப்பின் சத்தத்தை புரிந்துக் கொள்கிறார்களோ அல்லது புரிந்துக் கொள்ள முயற்சிக்கிறார்களோ அவர்களை அழைக்கிறார். தம்மை அறிந்துக் கொள்கிறார்களா இல்லையா என்று பார்க்கவும், தமக்கு கீழ்படிகிறார்களா இல்லையா என்று அறிந்துக்கொள்ளவும் அழைக்கிறார். தமது பணிகளை செய்யும்படியாகவும் அழைக்கிறார். அரவணைக்கும்படியாகவும். ஆசீர்வதிக்கும்படியாகவும் அழைக்கிறார். மரியாள் இயேசுவின் அழைப்பைக்கேட்டாள். அறிந்தாள். புரிந்துக் கொண்டாள். ஆம், நம் தேவன் நம்மை நேரடியாகவோ, வசனங்களின் மூலமாகவோ, செய்திகளின் மூலமாகவோ, தரிசனங்களின் மூலமாகவோ அழைக்கிறார். இன்னும் அழைத்துக் கொண்டேயிருக்கிறார்.
இரண்டாவது, திரும்பி பார்த்த மரியாள். இயேசு கிறிஸ்து தம்மை மரியாளுக்கு வெளிபடுத்தும்போது மரியாளுக்கு பின்னால் நின்று வெளிபடுத்தியுள்ளார். ஆகையினால்தான் அவள் அவரை திரும்பி பார்த்தாள். இயேசுவின் சத்தத்தை அறிந்திருந்த மரியாளுக்கு அவரின் அழைப்பின் சத்தம் ஆர்வத்தையும், உள்ள கிளர்ச்சியையும் கொடுத்தது. எனவே அவள் என் மீட்பர் உயிரோடிருக்கிரார், அவர் மரிக்கவில்லை என்று அறிந்தவளாய் அவரை போதகரே என்று அழைத்தாள். சத்தத்தை கேட்டே அவர் உயிரோடிருக்கிறார் என்றும், இன்னும் போதிக்கிறவராகவே இருக்கிறார் என்றும் அறிந்துக் கொண்ட ஆற்றல் சாதாரணமானதல்ல. காலமெல்லாம் அவர் குரலை கேட்டு, அவரோடு பழகி, அவரை அறிந்தவர்கள் கூட அவர் இடைபடுவதை அறிய இயலாது பின்வாங்கிப்போயுள்ளார்கள். பரம ஈவை ருசிபார்த்தவர்கள் பின்வாங்கிப்போய் அந்நிய மார்க்கங்களிலும், அந்நிய நுகங்ககளிலும், அந்நிய மாம்சங்களிலும் தங்களை ஈடுபடுத்தி தங்கள் ஆன்மாவையும், மாம்சத்தையும் கறைபடுத்தி தோலைந்துப் பொயுள்ளார்கள்.
பின்னிட்டு போனவர்கள் திரும்பிபார்த்து அவரை முழுமனதோடு ஏற்றுக்கொள்ளும்படியாகவும், அவருக்கு கீழ்படியும்படியாகவும் வித்தியாசமான தருணங்களிலே அவர் அழைக்கிறார். உன் பெயரையும் உன்னையும் அறிந்தவர் அழைக்கிறார். நீ என்னச் செய்யப்போகிறாய்?
கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது. அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும், அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன். அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தது; அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம்போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது. தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது. நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். வெளிப்படுத்தல் 1: 10-18.