பேதுரு, ஆண்டவரே நீர் என் கால்களைக் கழுவலாமா

பேதுரு, ஆண்டவரே நீர் என் கால்களைக் கழுவலாமா?

Peter said to Him, “Lord, are You washing my feet? (John 13:6)

John1:27; Matthew 3:11-14; Matthew 16:22; Mark8:32; Luke5:8; Gensis3 19:18f; Exodus 18:17f; 2 Samuel 6:20f; Jeremiah 13:2f.

அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான். (யோவான் 13:6)

யோவான் 1:27; மத்தேயு 3:11-14; மத்தேயு 16:22; மாற்கு 8:32; லூக்கா 5:8; ஆதியாகமம் 19:18f; யாத்திராகமம் 18:17f; 2சாமுவேல் 6:20f; எரேமியா 13:2f.

நீர் என் கால்களை கழுவலாமா?
இயேசுகிறிஸ்துவிடம் பேதுரு கேட்ட கேள்வி இதுவாகும். உம்மை நான் ரபீயாக, போதகராக, தேவகுமாரனாக காண்கிறேன். அப்படிபட்ட நீர் பாவியாகிய அடியேனின் கால்களை கழுவுவது என்ன நியாயம்? நீர் சொன்னால் நானே என் கால்களை முழுவதும் கழுவி பிறரின் கால்களையும் கழுவியிருப்பேனே என்று வருத்தத்துடனும், ஆதங்கத்துடனும் கூறினான்.

பேதுருவின் கேள்வியில் தவறில்லை. ஆனால் இயேசுகிறிஸ்துவின் உள் நோக்கத்தை அறிந்திராது இக்கேள்வியைக் கேட்டது இயேசுவுக்கு சற்று வேதனையாகவே இருந்தது. இயேசுவோடு வாழ்ந்த பயணித்த அனுபவித்த சீஷர்கள் இயேசுவின் உளகிடக்கையை அறியாமல் பல நேரங்களில் அவரின் விருப்பத்துக்கு மாறாக செயல்பட்டதுமுண்டு, பேசியதுமுண்டு. அவ்விதமாகவே இவ்விடத்திலும் நடந்தது. அநேக நேரங்களில் நாம் சரியாக சொல்வதைபோலும், செம்மையாக செயல்படுவதைபோலும் நினைத்துக்கொண்டு அவருக்கு பிரியமில்லாததை பேசியும் செய்தும் வருகிறோம். அவருடைய விருப்பம் அறிந்து செயல்பட அவரின் ஆவியை பெற்றிருந்தும் இவ்விதமான மாறுபாடுகள் நடந்தேறுவது ஆபத்தானதாகும். நமது பழமையான அணுகுமுறைகள், பழக்க வழக்கங்கள் போன்றவைகளில் முழுமையான் மாற்றம் பெற்றிருக்காமல் அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற இயலாது. அவைகள் நமக்கு நலமாய் தோன்றினாலும் அது நம்மை நலமல்லாத வழியிலே கொண்டுபோய் சேர்க்கும்.

வழியிலே நின்று பூர்வபாதை எவையென்று கேட்டு அதிலே நடவுங்கள்.

கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும் யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். ஏசாயா2:2-5.

ADD YOUR COMMENT

Powered By Indic IME