பெரிய மீன்களிருந்தும் வலைக் கிழியவில்லை

பெரிய மீன்களிருந்தும் வலைக் கிழியவில்லை

full of large fish, 153; and although there were so many, the net was not broken. (John 21:11)

Acts 3:12; Acts 4:8; Acts 8:20; Acts 10:34-11:30; Acts 15:7-11; John 21:3; Mark 5:1; Acts 21:6.

சீமோன்பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான், இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. (யோவான் 21:11)

அப்போஸ்தலர் 3:12; அப்போஸ்தலர் 4:8; அப்போஸ்தலர் 8:20; அப்போஸ்தலர் 10:34-11:30; அப்போஸ்தலர் 15:7-11; யோவான் 21:3; மாற்கு 5:1; அப்போஸ்தலர் 21:6. 

கிழியாத வலை:
பேதுருவும் மற்ற சீஷர்களும் , வேறுபலரும் இணைந்து மீன்களால் நிறைந்த வலையை கரையில் இழுத்தார்கள். இழுக்கப்பட்ட வலையிலிருந்த மீன்களைக் கடற்கரை மணலில் கொட்டினார்கள். அந்த மீன்கள் பெரியவைகளாகவும், 153 என்ற எண்ணிக்கையுடையதாகவும் காணப்பட்டது. பெரிய மீன்களாகவும், 153 ஆகவும் வலைக்குட்படுத்தப்பட்டதில் ஆவிக்குரிய அர்த்தம் தேட வேண்டியதில்லை. இந்த நிகழ்வில் இயேசு கிறிஸ்து சில முக்கிய உண்மைகளை சபைக்கு வைத்துள்ளார். 

அவர் வலை கிழியும்படியாக மீன்களால் வலையை நிரப்பவில்லை. ஏராளமாக அகப்பட வைத்தவருக்கு வலையை கிழியாமலிருக்கவும் செய்ய முடியும். மேலும் வலையின் கொள்ளளவை பேதுருவை விடவும் அவர் அறிந்திருந்தார். 

அவரிடமிருந்து அவரால் தருவிக்கப்படுகிற எதுவும் உயர் ரகமாகவே இருக்கும். இதனால் சிறிய மீன்களை அவர் விரும்பவில்லை என்று பொருளல்ல, இராமுழுவதும் மீன்களை தேடியும் கிடைக்காத சீஷர்களை மெய்சிலிர்க்க வைக்க பெரியவைகளை இப்பொழுது கொடுக்கிறார். மேலும் இந்த பெரியவைகளில் நிலைகொள்ளும்படியாக அல்ல, இதைவிடவும் பெரிதானவைகளையும் அவரால் செய்ய முடியும் என்று காண்பிக்க. 

153 என்பது எண்ணிக்கைக்காக அல்ல, அதனதன் கொள்ளளவு எவ்வளவோ அவ்வளவாய் அவர் கொடுக்கிறார் . இதனால் அவர் கொடுப்பதில் வேறுபாடு உண்டாகும். வலையின் கொள்ளளவு எவ்வளவோ அவ்வளவுதான் அவர் தருவார். அதாவது பரிபூரணமாக தருகிறார். 

ஆழத்தை அறிபவர் அவர். இதன்பின் சீஷர்கள் இந்த மீன்களை பிடிக்கவோ, கடலின் பக்கமோ வரவில்லை. நம்மைவிடவும் பெரிய மீன்பிடிக்கிறார் இயேசு என்று அறிந்து மனுஷரை பிடிக்க ஓடினார்கள். 

நமது உலக ஆசைகளை – விருப்பங்களை சில நேரங்களில் சில மனிதர்களில் நிறைவேற்றி தீர்த்து இராஜ்ய சேவகனாக்குகிறார். வேறு சில நேரங்களில் வேறு சில மனிதர்களில் ஆசையை நிராகரித்து இராஜ்ய சேவகனாக்குகிறார். இன்னும் சிலரில் சில நேரங்களில் ஆசையை நிறைவேற்றிகொடுத்து, நொறுக்கி இராஜ்ய சேவகனாக்குகிறார். வேறு சிலரில் ஆசையை நிறைவேற்றிக்கொடுத்து அதிலே நிலைகொண்டிருக்க செய்து தீர்ப்பிடுகிறார். 

சீஷர்களுக்கு வலைகிழியாமல் மீன்களை கொடுத்தது மீன்களை கணக்கு பார்ப்பதற்கு அல்ல, மனுஷரை பிடிக்க விரைவுபடுத்தும்படியாகவேயாகும். கிடைக்காத மீனை தேடி தேடி காலத்தையும் நேரத்தையும், தாலந்தையும் செலவழித்து ஒன்றுமில்லாமற்போகாதபடிக்கு காலமெல்லாம் பிடித்து சேர்க்க வேண்டியதை ஒரே நாளில் கொடுத்து இராஜ்ய சேவகனாக்குகிறார். இத்தோடு மனுஷரை பிடிக்க விரைந்தார்கள். அங்கே பெரிது மட்டுமல்ல, 153 மட்டுமல்ல திரளாய் பிடிக்க புறப்பட்டார்கள்.
பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.  வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான். அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். 
அவர்கள் ஜனங்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து, அவர்கள் ஜனங்களுக்கு உபதேசிக்கிறதினாலும், இயேசுவை முன்னிட்டு, மரித்தோலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், சினங்கொண்டு, அவர்களைப் பிடித்து, சாயங்காலமாயிருந்தபடியினால், மறுநாள்வரைக்கும் காவலில் வைத்தார்கள். வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது. 

அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டு சாலொமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள். மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள். திரளான புருஷர்களும் ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடத்தில் அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். அப்போஸ்தலர் 2:38-41; அப்போஸ்தலர் 4:1-4; அப்போஸ்தலர் 5:12-14.

ADD YOUR COMMENT

Powered By Indic IME