பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.
Put to death your members which are on the earth. (Col3:5)
Romans 6:6,7; Romans 8:13; 1Corinthians 5:1-7,11; Galatians 5:24; Ephesians 5:3-6; 2Timothy 2:16-18; Matthew 5:29,30; Mark 8:34.
ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளை உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள். (கொலோசெயர் 3:5)
ரோமர் 6:6,7; ரோமர் 8:13; 1கொரிந்தியர் 5:1-7,11; கலாத்தியர் 5:24; எபேசியர் 5:3-6; 1தீமோத்தேயு 2:16-18; மத்தேயு 5:29,30; மாற்கு 8:34.
அழித்துபோட வேண்டியவை:
அழித்துபோடுதல் என்ற வார்த்தைக்கு சாகடித்தல், மறையப்பண்ணுதல், பூஜ்யமாக்குதல், இல்லாமலாக்குதல், வெட்டி எறிந்துவிடுதல் என்று அந்தந்த வசனங்களுக்கேற்ப பொருள் கூறப்பட்டுள்ளது.
பொருள் சம்பாதிப்பது அவசியமே. பொருள், பணம் யாவும் தேவையின் அடிப்படையில் சம்பாதிக்க வேண்டும். ஆசையினிமித்தமாய், பேராசையினிமித்தமாய் முயல்வோமெனில் விபசாரம், அசுத்தம், இச்சை போன்ற சுபாவங்களுக்கு சமமான பொருளாசையாகி விடும். பொருளாசையை உண்டுபண்ணுகிற சரீர அவயவங்களை அழித்துவிட வேண்டும் என்பதே விவிலிய உபதேசம்.
இச்சைகளை உண்டுபண்ணுகிற கண்கள், வாய், நாக்கு, கைகள், இருதயம், சிந்தனைகள் போன்ற யாவையும் அழித்துதானாக வேண்டும். இல்லையெனில் அவைகளை கொண்டிருக்கிற நம்மை அவர் அழித்துப்போடுவார்.
ஏன் அழித்துவிட வேண்டுமெனில் 1யோவான் 2:6 ன் படி மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய இவைகள் யாவும் தேவனால் அல்ல, உலகத்தினால் உண்டானவைகள்.
2வதாக, ஏன் அழித்துவிட வேண்டுமெனில் சிந்தைக்குள்ளோ, மாம்சத்துக்குள்ளோ, குடும்பத்துக்குள்ளோ, சபைக்குள்ளோ ஒரு கசப்பான வேர் உண்டாகி கலகமுண்டாக்கி அநேகர் தீட்டுப்பட்டுப்போக வைக்கிறது. எபிரெயர் 12:15.
3 வதாக ஏன் அழித்துவிட வேண்டுமெனில் இவைகள் உங்களுக்குள் கீழ்படியாமையை உண்டாக்கி தேவனுடைய கோபம் பற்றியெரிய வழிவகுத்துவிடும். கொலோர்செயர் 3:6.
4 வதாக ஏன் அழித்துவிட வேண்டுமெனில் நாம் பாவத்துக்கு ஊழியம் செய்கிறவர்களாகவும், செத்துபோன பாவத்தை உயிர்ப்பிக்கிறவர்களாகவும் காணப்படுவோம்.ரோமர்6:6.
5 வதாக ஏன் அழித்துவிட வேண்டுமெனில் இவைகளில் ஒன்றும் தேவனுடைய இராஜ்ஜியத்தை சுதந்தரிப்பதில்லை.கலாத்தியர்5:21.
அன்பானவர்களே, உன்னில் இச்சையை உண்டாக்கும் அவயவங்களை அழித்துபோட ஒப்புக்கொடு. உன்னுடையவர்களில் இச்சையை உண்டுபண்ணுகிறவர்கள் இருந்தால் அவர்களை விட்டு விலகியிரு.ஏனெனில் நாம் எதை விதைக்கிறோமோ அதைதான் அறுக்க வேண்டும்.
நமக்குமுன் வைக்கப்பட்டுள்ள திறந்த வாசலில் பிரவேசிக்கவேண்டுமெனில் ஒழிக்கவும், எரிக்கவும், உருவழிக்கவும், களையவும் முயற்சி செய்து வெற்றிபெற்றால் தான் நடந்தேறும். பாவிகள் நீதிமான்களின் சபையில், கூடாரத்தில் நிலை நிற்க முடியாது.
யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான். எபிரெயர் 12:14-17.