பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன்.
Little children, I shall be with you a little while longer. (John 13:33)
Galatians 4:19; 1John2:1; 1John 4:4; 1John 5:21; John 12:35,36; John 14:19; John 16:16-22; Psalms 34:11; Matthew 26:11; Mark 2:20.
பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன், நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்று நான் யூதரோடே சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன். (யோவான் 13:33)
கலாத்தியர் 4:19; 1யோவான் 2:1; 1யோவான் 4:4; 1யோவான் 5:21; யோவான் 12:35,36; யோவான் 14:19; யோவான் 16:16-22; சங்கீதம் 34:11; மத்தேயு 26:11; மாற்கு 2:20.
கூட இருப்பேன்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமைப்படுதலுக்கான காலம் நெருங்கி வருவதினால் தம்மோடு கூட இருக்கவும், தமது இராஜ்ஜியத்தின் பணியை தமக்கு பின் செய்யும்படியாகவும் தெரிந்தெடுக்கப்பட்ட சீஷர்களிடம் தமது நெருக்கத்தையும், தமது பிரிதலையும் தெரியப்படுத்துகின்றார்.
தமது சீஷர்களைப் பிள்ளைகளாக கருதி அன்பு செலுத்துவதும், கரிசனை காட்டுவதும் தலைமைத்துவத்தின் முக்கிய பண்பாகும். உடல் ரீதியில் இவ்வாறு கூறவில்லை. உன்னத அனுபவங்களின் அடிப்படையிலும், தமது தெய்வீக தேஜஜின் அடிப்படையிலும் அவர்களை பிள்ளைகளாக அழைக்கின்றார். சீஷர்களை தமது சொந்த பிள்ளைகளாக பாவித்து அறிவுரை சொல்லுவது தமது பிரிதலுக்கான முதற்படியாகும். பிரியபோவதினால் உண்டாகும் நெருக்கம் என்றும் கூறலாம். அனேக மூதாதையர்கள் தங்கள் அந்திம காலங்களில் பிள்ளைகளை அருகில் அழைத்து அறிவுரை சொல்லுவதைபோலவே நடந்துக் கொள்கின்றனர்.
மேலும் தமது சீஷர்களைவிட்டு பிரிய போவதாகவும் கூறுகின்றார். நான் கொஞ்சகாலம் மாத்திரம் உங்களோடிருந்தாலும் எப்பொழுதும் உங்களோடிருக்கும்படியாக கொடுக்கப்பட போகின்ற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் உங்களோடிருப்பார். இந்த கொஞ்சகால உலக வாழ்வில் தமது சீஷர்களை ராஜ்யத்தின் உண்மையான பணியாட்களாக நிலைநிறுத்த பிரயாசை செய்வார்.
ஒவ்வொரு ஊழியக்காரர்களும் தங்களின் காலங்கள் முடியுமுன்பதாக தங்களின் திருப்பணியை தொடர்ந்து அதே தரிசனத்தோடு செய்ய தேவன் குறிப்பிடும் மனிதர்களை பயிற்சிக்குட்படுத்துங்கள். அதுவே ஊழியத்தின் வெற்றி. தேவ இராஜ்யத்தின் வெற்றியாகும்.
சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும். நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று. ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும்காலம் வந்தது. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார். 2தீமோத்தேயு 4:2-8.