பிலிப்புவினிடம் ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று கூறினர்.
Then they came to Philip asked him, saying, Sir,we wish to see Jesus. (John 12:21)
Jn1:43-47; Jn6:5-7; Jn14:8,9; Jn1:36-39; Jn6:40; Mat2:2; Mat8:9-12; Mat12:19-21; Mat15:22,28; Lk19:2-4; Rom15:8-12.
அவர்கள் கலிலேயாநாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள். (யோவான் 12:21)
யோவான் 1:43-47; யோவான் 6:5-7; யோவான் 14:8,9; யோவான் 1:36-39; யோவான் 6:40; மத்தேயு 2:2; மத்தேயு 8:9-12; மத்தேயு 12:19-21; மத்தேயு 15:22,28; லூக்கா 19:2-4; ரோமர் 15:8-12.
இயேசுவைக் காண்போம்:
கலிலேயா என்றால் சுற்றுப்பாதை என்றும், பெத்சாயிதா என்றால் மீன்களின் வீடு என்றும், பிலிப்பு என்றால் குதிரைகளை விரும்புவோன் என்றும் பொருள் கொள்ளப்படுகின்றது.
இங்கு சொல்லப்பட்டுள்ள கிரேக்கர்கள் புறஜாதிகளிடையில் வாழ்ந்துகொண்டிருந்த யூதர்கள் ஆவர். கிரேக்க மொழி கலாச்சாரத்தையுடையவர்களாயிருந்ததினால் கிரேக்கர் எனப்பட்டனர். இவர்கள் கிரேக்க மொழி பேசும் மக்கள் குழுக்களிலிருந்து பண்டிகை கொண்டாட வந்திருந்து இயேசு லாசருவை உயிரோடெழுப்பினார் என்று கேள்விப்பட்டு இயேசுவை சந்திக்க விரும்பி பிலிப்புவினிடம் வந்தார்கள்.
கிறிஸ்தவ சபைகள், நிறுவனங்கள், விசுவாசக்குடும்பங்கள், ஊழியக்காரர்கள் பாவத்தில் செத்துப்போன லாசருக்களை உயிரோடெழுப்பி இயேசுவைக் குறித்து சாட்சிகொடுக்குமெனில் இந்தியா இயேசுவை காண்பதற்காக சபைகளை தேடி விசாரித்து வருவார்கள். இயேசுவை காண்பிப்பதுவே நமது கிறிஸ்தவர்களின் திருப்பணியாகும். ஒரு அன்னை தெரசா மூலம் அனேகர் இயேசுவை கண்டதுபோல கிறிஸ்தவ குடும்பங்களின் நற்கிரியைகள் மூலம் இந்தியா இயேசுவை காணச்செய்ய வேண்டும்.
இயேசுவைக் காண விரும்புகிறோம் என்பது சோதித்துப்பார்ப்பதற்காக இருக்கலாம், அவரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமாயிருக்கலாம், அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்வதற்காக இருக்கலாம், அவரிடமிருந்து நமக்கும் ஏதாவது நன்மை கிடைக்கும் என்றும் இவர்கள் வந்திருக்கலாம். பிலிப்பு அதை குறித்தெல்லாம் கவலைபடவேண்டியதில்லை.
இயேசுவை காண்பிப்பதுதான் பிலிப்புவின் வேலை. இன்று நமது வேலையும் இதுவே. நாம் இயேசுவை 3 விதங்களில் காண்பிக்கமுடியும். நாம் இயேசுவை நற்கிரியைகள்மூலம் காண்பிக்கலாம், நாம் இயேசுவை வார்த்தைகள் மூலம் காண்பிக்கலாம், நாம் இயேசுவை வாழ்க்கை மூலம் காண்பிக்கலாம். நாம் பிலிப்புகளாயிருப்பதினால் நம்மிடம்தான் இயேசுவை தேடி வருவார்கள். நமது தாலந்துகள், திறமைகள், கவுரவங்கள், பணம், படிப்பு, ஜாதி, மொழி, கட்சி எல்லாம் விட்டுவிட்டு இயேசுவை காண்பிக்க தயாராவோம். இயேவை காண விரும்பும் கூட்டம் இயேசுவை விட்டுவிட்டு வேறுபக்கம் திரும்புமுன் இயேசுவை காண்பிக்க தயாராவோம்.
கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்.
திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். ஏசாயா 2:2,3.