பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலை செய்ய ஆலோசனை பண்ணினார்கள்.
But the chief priests plotted to put Lazarus to death also, (John 12:11)
Jn11:47-53,57; Mt2:3-8; Lk16:31; Mt24:4-14; Jn12:24,25; Jn15:18-24; Jn17:14; Gen37:20; Job15:25,26; Job40:8,9; Ecc9:3; Dan5:21-23.
பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனைபண்ணினார்கள். (யோவான் 12:11)
யோவான் 11:47-53,57; மத்தேயு 2:3-8; லூக்கா 16:31; மத்தேயு 24:4-14; யோவான் 12:24,25; யோவான் 15:18-24; யோவான் 17:14; ஆதியாகமம் 37:20; யோபு 15:25,26; யோபு 40:8,9; பிரசங்கி 9:3; தானியேல் 5:21-23.
உபத்திரவம் உண்டு.
அற்புதங்கள் மகிழ்ச்சிக்கும், துதிக்கும் நம்மை இட்டுச்செல்கிறது. லாசரு உயிரோடு எழுப்பப்பட்டதினால் பெருங்கூட்டம் விசுவாசத்துக்குள் வந்தது. அந்த செயல் இயேசுவை விரோதிக்கிறவர்களை கோபமடையவும், எரிச்சலடையவும் செய்ய வைத்தது. ஆபேல் அங்கீகரிக்கப்பட்டதினால் காயீன் எரிச்சலடைந்தது போல, லாசரு உயிர்ப்பிக்கப்பட்டதினால் பெரிய மனிதர்கள் எரிச்சலடைந்தனர். எரிச்சல் அவர்களை கொலை செய்யும் படியான உணர்ச்சிகளுக்கு கொண்டு சென்றது. நன்மைகளும், உயர்வும், மேன்மையும், புகழ்ச்சியும், வளர்ச்சியும், துன்பத்துக்கும், துயரத்துக்கும், வேதனைக்கும் இட்டு செல்கிறது இவ்வுலகின் வழக்கமாய் உள்ளது. பொருள் பெருகினால் அதை தின்கிறவர்களும் பெருகுகிறார்கள் என்பது போல புகழ் பெருகினால் அதை அழிக்க நினைப்பவர்களும் பெருகுகிறார்கள். இவ்விதமாய் நடப்பதற்கு 5 காரணங்கள் காணப்படுகின்றன…
பாவம் உலகில் நிரம்பிவிட்டது.
உலக இச்சைகளை யார் தடுத்தாலும் அவர்கள் தோற்கடிக்கப்படுவர்.
உலகம் முழுவதும் பொல்லாங்கனுக்குள் விழுந்து கிடக்கிறது.
பிசாசானவன் இவர்களின் கண்களை குருடாக்கியுள்ளான்.
மனுஷ இருதயம் தீமையினால் நிறைந்திருக்கிறது.
நாம் புகழப்படுவதற்கு மட்டுமல்ல, பாடு படுவதற்கும் நியமிக்கப்பட்டுள்ளோம்.
இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து முன்னேறுவதினாலும் மகிழ்ச்சியும், சமாதானமும் உண்டு. அது போலவே அவர் நிமித்தம் பாடுகளையும், துன்பங்களையும் சகிப்போமானாலும் மகிழ்ச்சியும், சமாதானமும் உண்டு. வெறுக்கப்பட்டவனிடம் பிறந்த பிள்ளை சேஷ்ட புத்திரருக்குரியவனாக மாறுவது போல, துன்பத்திலும், குறைவிலும், பலவீனத்திலும் பிறக்கும் நன்மைகள் உயர்வுக்கு நேராக கொண்டு செல்லும் என்பதை மறக்க வேண்டாம். உலகில் உபத்திரவம் உண்டு. இயேசு உபத்திரவத்தை சகித்து உன்னதம் வரை உயர்ந்தது போல, நாமும் உபத்திரவங்களை பொறுமையுடன் சகித்து உன்னதம் வரை உயர்வோம்.
நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே. ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. பிலிப்பியர் 1:28,29.